• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, July 2, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெப்பநிலை அபாய எச்சரிக்கை!

selvan by selvan
July 1, 2026
in இலங்கை செய்திகள்.
0
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெப்பநிலை அபாய எச்சரிக்கை!
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெப்பநிலை இயல்பை விட 2.8 பாகை செல்சியஸ் ஆல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“தற்போது பசுபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல்நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கம் பரவலாக உணரப்பட்டு வருகின்றது.

இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதப் பிற்பகுதியில் இலங்கையைச் சூழவுள்ள இந்து சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை 1.6 பாகை செல்சியஸ் அளவிலும், ஓகஸ்ட் மாதப் பிற்பகுதியில் அது 2.6 பாகை செல்சியஸ் அளவிலும் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக, ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலப்பகுதிகளில் வளி வெப்பநிலை 2.8 பாகை செல்சியஸை விடக் கூடுதலாக அதிகரிக்கக்கூடும்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் எல்நினோவின் தாக்கத்தை துல்லியமாகக் கணிப்பது சவாலானது. ஏனெனில், இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண்ணின் தொழிற்பாடு எல்நினோவின் செல்வாக்கை எந்தளவுக்கு அனுமதிக்கும் என்பதிலேயே பாதிப்பின் வீரியம் தங்கியுள்ளது.

இருப்பினும், தற்போதைய தரவுகளின்படி வரண்ட வானிலையைத் தொடர்ந்து, எதிர்வரும் ஒக்டோபர் மாத இரண்டாம் வாரத்திலிருந்து மழை பெய்யத் தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும்.

இந்த நிலைமை நவம்பர் மாத இறுதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதுடன், ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெள்ள இடரை ஏற்படுத்தக்கூடிய கனமழை பதிவாகவும் வாய்ப்புகள் உள்ளன.

இந்தக் காலநிலை மாற்றம் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும், விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பால் மீன்பிடித் தொழிலும் கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

எனவே, இம்முறை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காலபோக (பெரும்போக) நெல் விதைப்பை விவசாயிகள் மிகவும் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ள வேண்டும்.

செப்டெம்பர் மாதம் வரை வரண்ட வானிலையும், ஒக்டோபர் மற்றும் நவம்பரில் வெள்ளப் பெருக்குடனான கனமழையும் எதிர்பார்க்கப்படுவதால், விழிப்புணர்வுடன் கூடிய முறையான திட்டமிடல் அவசியமாகும்.” – என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

மட்டக்களப்பு மதுபானசாலைகளில் சோதனை – ஒருதொகை மதுப்போத்தல்கள் கைப்பற்றல்!

மட்டக்களப்பு மதுபானசாலைகளில் சோதனை – ஒருதொகை மதுப்போத்தல்கள் கைப்பற்றல்!

by selvan
July 1, 2026
0

கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழு ஒன்று இன்று மாலை மட்டக்களப்பில் உள்ள சில மதுபானசாலைகளை முற்றுகையிட்டு சட்டத்துக்கு முரணான வகையில் விற்கப்படும் ஒரு தொகை...

ஜூலை 6ஆம் திகதி முதல் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு!

ஜூலை 6ஆம் திகதி முதல் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு!

by selvan
July 1, 2026
0

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து எதிர்வரும் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்துக் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளன.இது...

காணி மீட்பு போராட்டம் தீவிரம்! – பலாலி மீள்குடியேற்ற அமைப்பு உதயம்

by selvan
July 1, 2026
0

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களது பூர்வீகக் காணிகளை மீட்டெடுப்பதற்காக, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து 'பலாலி மீள்குடியேற்ற அமைப்பு' என்ற பெயரில் புதியதொரு அமைப்பை...

அவசரகாலச் சட்டம் இம்மாதத்துடன் நிறைவு – அரசாங்கம் அறிவிப்பு!

by selvan
July 1, 2026
0

'டித்வா' பேரழிவைத் தொடர்ந்து நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை, இம்மாதத்துக்கு மேல் நீடிக்கப்படமாட்டாது என்று அரசு இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் நடைமுறையிலிருந்த அவசரகாலக் கட்டுப்பாட்டு...

டெங்கு ஒழிப்பு அதிகாரிகள் போல் வேடமிட்டு போதைப்பொருள் கடத்தல்காரனை கைது செய்த பொலிஸார்!

டெங்கு ஒழிப்பு அதிகாரிகள் போல் வேடமிட்டு போதைப்பொருள் கடத்தல்காரனை கைது செய்த பொலிஸார்!

by selvan
July 1, 2026
0

உகண  மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள இளைஞர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக ஹெரோயின் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த பிரதான கடத்தல்காரர், அம்பாறை கோட்ட குற்றப்...

திசைகாட்டி அரசு தனது கொள்கைப் பிரகடனத்தை முற்றாக மறந்துவிட்டது!

திசைகாட்டி அரசு தனது கொள்கைப் பிரகடனத்தை முற்றாக மறந்துவிட்டது!

by selvan
July 1, 2026
0

தேசிய மக்கள் சக்தி அரசானது 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற தனது கொள்கைப்பிரகடனத்தை முற்றாக மறந்து, தங்களுக்கு மாத்திரம் சொகுசான வாழ்க்கையையும் வளமான அரசையும்...

சுரேஷ் சலேயின் கோரிக்கைகள் நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

by selvan
July 1, 2026
0

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் இருந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி...

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால்   மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால்   மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

by selvan
July 1, 2026
0

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், சாதாரண தர மற்றும் உயர்தர...

கோர விபத்துக்களில் இருவர் பரிதாபப் பலி! 

குருநாகலில் விபத்து – இரு இளைஞர்கள் பலி!

by selvan
July 1, 2026
0

குருநாகல் மாவட்டம், பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - குருநாகல் பிரதான வீதியின் ரஞ்சனகம சந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர்...

சுரேஷ் சலேவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில்லை – சரத் வீரசேகர தெரிவிப்பு.!

தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் சுரேஷ் சாலே!

by selvan
July 1, 2026
0

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று கைவிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி