• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, July 2, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

டெங்கு ஒழிப்பு அதிகாரிகள் போல் வேடமிட்டு போதைப்பொருள் கடத்தல்காரனை கைது செய்த பொலிஸார்!

selvan by selvan
July 1, 2026
in இலங்கை செய்திகள்.
0
டெங்கு ஒழிப்பு அதிகாரிகள் போல் வேடமிட்டு போதைப்பொருள் கடத்தல்காரனை கைது செய்த பொலிஸார்!
Share on FacebookShare on Twitter

உகண  மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள இளைஞர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக ஹெரோயின் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த பிரதான கடத்தல்காரர், அம்பாறை கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

உகண -21, திஸ்ஸபுர கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலேயே இந்தச் சதுரங்க வேட்டை அரங்கேறியுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக உகண  பொலிஸ் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே இந்த போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வந்துள்ளார்.

தனது வீட்டைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் மற்றும் விசேட விளக்குகளைப் பொருத்தி, பொலிஸாரின் நடமாட்டத்தை அவர் கண்காணித்து வந்துள்ளார்.

பொலிஸார் சோதனையிட வரும்போதெல்லாம், அவருக்கு ஆதரவாகச் செயற்பட்ட சில ஊழல் அதிகாரிகளிடமிருந்தோ அல்லது வெளியிலுள்ள உளவாளிகளிடமிருந்தோ முன்கூட்டியே தகவல் கிடைத்துவிடுவதால், அவர் தப்பியோடி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அண்மையில் இறக்காமம்  பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் (SI) ஒருவருக்கும், இந்தச் சந்தேக நபருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

உகண பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி லங்காதேவ மற்றும் தற்போதைய பிரதம பொலிஸ் பரிசோதகர் (HQI) சுமித் குணவர்தன ஆகியோர் மேற்கொண்ட முந்தைய சோதனைகள் தோல்வியடைந்ததற்கும் இந்த உள்ளகத் தகவல் கசிவே முக்கியக் காரணமாக இருந்துள்ளது.

தொடர் தோல்விகளைத் அடுத்து, அம்பாறை பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) சுஜித் வேதமுல்லவின் நேரடித் தலையீட்டின் கீழ் விசேட திட்டமொன்று தீட்டப்பட்டது.

இதற்கமைய, அம்பாறை மாவட்ட  குற்றப் புலனாய்வு பிரிவு   பொலிஸ் பரிசோதகர்  ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர், தங்களை ‘டெங்கு ஒழிப்புப் பரிசோதகர்கள்’ போல மாற்றிக்கொண்டனர்.

இக்குழுவில் கர்ப்பிணிப் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரும் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்ற பொலிஸ் குழுவினர், டெங்கு நுளம்புப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி வீட்டின் பின்புறம் மற்றும் சுற்று சூழலை பரிசோதனை செய்தனர்.

இதன்போது சந்தேக நபர் பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு, அவர்களைத் திசைதிருப்ப முயன்றார்.

எனினும், அந்தப் பகுதியில் மாறுவேடத்தில் மறைந்திருந்த ஏனைய பொலிஸ் அதிகாரிகள் திடீரெனப் பாய்ந்து சந்தேக நபரை மடக்கிப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட வேளையில், சந்தேக நபர் தன்னை விடுவிப்பதற்காக பொலிஸ் பரிசோதகர்  ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்கவிடம் 2 இலட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க முனைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், லஞ்சக் கோரிக்கையை நிராகரித்த பொலிஸார், சந்தேக நபரை உடனடியாகப் பொலிஸ் வாகனத்தில் ஏற்றி அம்பாறை மாவட்ட  குற்றப் புலனாய்வு  பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் மற்றும் 30 மில்லிகிராம் ஏனைய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சந்தேக நபரை அம்பாறை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, நீதவான் திருமதி புஷ்பராஜா ஆனந்தவதனி சந்தேக நபரை 7 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) சுஜித் வேதமுல்லவின் வழிகாட்டலில், அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) பிரியந்த பண்டார கஸ்தூரியாரச்சி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) சம்பத் விக்ரமரத்ன ஆகியோரின் மேற்பார்வையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இவ்வதிரடி நடவடிக்கையில் பொலிஸ் பரிசோதகர்  ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க, பொலிஸ் பரிசோதகர் எஸ்.பண்டார, பொலிஸ் உத்தியோகத்தர்களான ரஞ்சித் (60052), சந்திரசேன (67764), திஸ்ஸநாயக்க (89795), சுனில் (95062), சஞ்சீவ (91287), அஜித் (102796), பெண் பொலிஸ் உத்தியோகத்தர் செவ்வந்தி (80622), மற்றும் சுதேஷ் (21016), சச்சந்த ஆகியோர் பங்கேற்றனர். 

Related Posts

மட்டக்களப்பு மதுபானசாலைகளில் சோதனை – ஒருதொகை மதுப்போத்தல்கள் கைப்பற்றல்!

மட்டக்களப்பு மதுபானசாலைகளில் சோதனை – ஒருதொகை மதுப்போத்தல்கள் கைப்பற்றல்!

by selvan
July 1, 2026
0

கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழு ஒன்று இன்று மாலை மட்டக்களப்பில் உள்ள சில மதுபானசாலைகளை முற்றுகையிட்டு சட்டத்துக்கு முரணான வகையில் விற்கப்படும் ஒரு தொகை...

ஜூலை 6ஆம் திகதி முதல் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு!

ஜூலை 6ஆம் திகதி முதல் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு!

by selvan
July 1, 2026
0

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து எதிர்வரும் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்துக் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளன.இது...

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெப்பநிலை அபாய எச்சரிக்கை!

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெப்பநிலை அபாய எச்சரிக்கை!

by selvan
July 1, 2026
0

எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெப்பநிலை இயல்பை விட 2.8 பாகை செல்சியஸ் ஆல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக...

காணி மீட்பு போராட்டம் தீவிரம்! – பலாலி மீள்குடியேற்ற அமைப்பு உதயம்

by selvan
July 1, 2026
0

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களது பூர்வீகக் காணிகளை மீட்டெடுப்பதற்காக, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து 'பலாலி மீள்குடியேற்ற அமைப்பு' என்ற பெயரில் புதியதொரு அமைப்பை...

அவசரகாலச் சட்டம் இம்மாதத்துடன் நிறைவு – அரசாங்கம் அறிவிப்பு!

by selvan
July 1, 2026
0

'டித்வா' பேரழிவைத் தொடர்ந்து நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை, இம்மாதத்துக்கு மேல் நீடிக்கப்படமாட்டாது என்று அரசு இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் நடைமுறையிலிருந்த அவசரகாலக் கட்டுப்பாட்டு...

திசைகாட்டி அரசு தனது கொள்கைப் பிரகடனத்தை முற்றாக மறந்துவிட்டது!

திசைகாட்டி அரசு தனது கொள்கைப் பிரகடனத்தை முற்றாக மறந்துவிட்டது!

by selvan
July 1, 2026
0

தேசிய மக்கள் சக்தி அரசானது 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற தனது கொள்கைப்பிரகடனத்தை முற்றாக மறந்து, தங்களுக்கு மாத்திரம் சொகுசான வாழ்க்கையையும் வளமான அரசையும்...

சுரேஷ் சலேயின் கோரிக்கைகள் நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

by selvan
July 1, 2026
0

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் இருந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி...

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால்   மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால்   மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

by selvan
July 1, 2026
0

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், சாதாரண தர மற்றும் உயர்தர...

கோர விபத்துக்களில் இருவர் பரிதாபப் பலி! 

குருநாகலில் விபத்து – இரு இளைஞர்கள் பலி!

by selvan
July 1, 2026
0

குருநாகல் மாவட்டம், பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - குருநாகல் பிரதான வீதியின் ரஞ்சனகம சந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர்...

சுரேஷ் சலேவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில்லை – சரத் வீரசேகர தெரிவிப்பு.!

தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் சுரேஷ் சாலே!

by selvan
July 1, 2026
0

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று கைவிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி