• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 23, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மாகாண சபைத் தேர்தல் நடந்தால் நாம் அமோக வெற்றியீட்டுவோம்.!

Mathavi by Mathavi
June 22, 2026
in இலங்கை செய்திகள்.
0
மாகாண சபைத் தேர்தல் நடந்தால் நாம் அமோக வெற்றியீட்டுவோம்.!
Share on FacebookShare on Twitter

மாகாண சபைத் தேர்தலை தேசிய மக்கள் சக்தி அரசு நடத்தினால் அதில் ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயம் அமோக வெற்றியீட்டும் என்றும், தேர்தல் தோல்விக்கு அஞ்சியே அரசு அதனை நடத்தாமல் இழுத்தடித்து வருகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கண்டி மல்வத்து மகா விகாரைக்கு நேற்றுக் விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர், மல்வத்து மாநாயக்க தேரர் வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அநுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அஸ்கிரி மகா விஹாரைக்குச் சென்று, அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரர் வண. வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து நலம் விசாரித்தார். இதன்போது மகாநாயக்க தேரர்களுக்கு அட்டப்பிரிகரவகை அன்பளிப்பு செய்ததுடன், சம்புத்த சாசனத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான பரந்த தேசிய கலந்துரையாடல் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான சகல ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளையும் நாடாளுமன்றத்துக்குள்ளும், அதற்கு வெளியேயும் முன்னெடுக்க நாம் எதிர்பார்த்துள்ளோம். மக்கள் பெற்றுக் கொடுத்த அறுதிப் பொரும்பான்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு இன்று அதிகார மமதையுடன் நாடாளுமன்றக் குழுக்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கையாண்டு வருகின்றது. ஜனநாயக வழிமுறைகளின் ஊடாக ஆட்சியைப் பிடித்துவிட்டு, இன்று ஜனநாயகத்தை முடக்கும் தன்னிச்சையான தனிக்கட்சி ஆட்சியை நோக்கி நாட்டை கொண்டு செல்கின்றனர். இதற்கு இடமளிக்க முடியாது.

இனிவரும் தேர்தல்களில் எந்தவொரு தரப்புக்கும் அறுதிப் பெரும்பான்மை நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் தேவையில்லை, எளிய பெரும்பான்மை இருந்தால் போதுமானது என்பதை நாட்டின் 220 இலட்சம் மக்களும் இப்போதாவது பாடமாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அரசு உடனடியாக எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும். சர்வதேச சந்தையில் விலைகள் குறைந்து காணப்படும் இந்தத் தருணத்தில், பாகிஸ்தான் போன்ற நாடுகள் விலையைக் குறைத்துள்ள போதும் இலங்கை அரசு ஏன் குறைக்கவில்லை? வெறும் வெற்றுப் பேச்சுக்களாலும் பொய்களாலும் இந்த அரசாட்சி நடக்கிறது. 30 – 40% வரையான மக்கள் ஏழைகளாக மாறியுள்ளனர். இந்த வறுமையிலிருந்து மக்களை மீட்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி பிரதான தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ நாட்டைப் பொறுப்பேற்கும்போது வடக்கிலும் தெற்கிலும் பயங்கரவாதம் நிலவியதுடன், வளைகுடாப் போரும் நடந்துகொண்டிருந்தது. நாலாபுறமும் நெருப்பு எரிந்துகொண்டிருந்த போதும், நாட்டு மக்களுக்கு அவர் நலன்புரி சேவைகளைப் பெற்றுக் கொடுத்தார். ஆனால் இன்றுள்ள அரசு மக்களுக்கு நிவாரணங்களை வழங்க மறுக்கிறது. மாகாண சபைத் தேர்தலை நடத்தியிருந்தால் இந்த அரசின் உண்மையான ஆயுட்காலம் எவ்வளவு என்பதை மக்கள் காட்டியிருப்பார்கள்.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கொள்கை ரீதியாக நாம் இணையத் தயாராக உள்ளோம். இரு கட்சிகளினதும் தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டு இந்தப் பயணம் தொடரும். தீவிர போக்கு கொண்ட அரசியலிலிருந்து விடுபட்டு, நடுத்தர பாதையைப் பின்பற்றும் ஐக்கிய மக்கள் சக்தியோடு வந்து இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்துத் தரப்புகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். இங்கு பதவிகளைப் பகிர்ந்துகொள்ளும் சூதாட்டங்கள் எதுவும் நடக்காது. அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை.” – என்றார்.

Related Posts

ஆடைத்துறை வர்த்தகர்களுடன் ஜனாதிபதி உயர்மட்டப் பேச்சு.!

ஆடைத்துறை வர்த்தகர்களுடன் ஜனாதிபதி உயர்மட்டப் பேச்சு.!

by Mathavi
June 22, 2026
0

டொலர் வருமானத்தை அதிகரித்து, நாட்டில் பலமானதொரு ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஆடைத் துறையின் பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய உடனடித் தீர்வுகள் குறித்து ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார...

ஒலுமடுவில் தந்தை செல்வா நற்பணி மன்றத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

ஒலுமடுவில் தந்தை செல்வா நற்பணி மன்றத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

by Mathavi
June 22, 2026
0

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு பகுதியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய மாணவர்களுக்கு வவுனியா தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள்...

ஐ.எம்.எவ். நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாதீர்கள்.!

ஐ.எம்.எவ். நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாதீர்கள்.!

by Mathavi
June 22, 2026
0

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாது, நாட்டின் அறிவுசார் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகப் புத்தகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரியை அரசு உடனடியாக...

வட்டுக்கோட்டையில் கொடூர தாக்குதல்.!

வட்டுக்கோட்டையில் கொடூர தாக்குதல்.!

by Mathavi
June 22, 2026
0

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது கத்தியால் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மேலும்...

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் முக்கிய பேச்சு.!

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் முக்கிய பேச்சு.!

by Mathavi
June 22, 2026
0

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் கலாநிதி பால் கபூர், இன்று திங்கட்கிழமை...

சொன்னதைச் செய்த, செய்ததைச் சொன்ன ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே.!

சொன்னதைச் செய்த, செய்ததைச் சொன்ன ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே.!

by Mathavi
June 22, 2026
0

இலங்கை அரசியல் வரலாற்றில் சொன்னதைச் செய்த, செய்ததைச் சொன்ன ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி...

அரசியல் எதிரிகளை ஒடுக்க நீதித்துறையில் அரசு தலையீடு.!

அரசியல் எதிரிகளை ஒடுக்க நீதித்துறையில் அரசு தலையீடு.!

by Mathavi
June 22, 2026
0

நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியில் தலையீடு செய்து, தங்களுக்குத் தேவையான முறையில் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்குத் தற்போதைய அரசு மிகக்...

அரசமைப்பு பொது வரைவைத் தயாரிக்க 33 பேர் கொண்ட வழிநடத்தல் குழு தெரிவு.!

அரசமைப்பு பொது வரைவைத் தயாரிக்க 33 பேர் கொண்ட வழிநடத்தல் குழு தெரிவு.!

by Mathavi
June 22, 2026
0

தமிழ்த் தரப்பு சார்பில் பொதுவாக எவ்வாறானதொரு அரசியல் அமைப்பை முன்வைக்க வேண்டும் என்பது தொடர்பாக, பரந்துபட்ட மக்கள் கலந்துரையாடலை மேற்கொண்டு மக்களின் கருத்துக்களை உள்வாங்கிய ஒரு வரைவைத்...

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்.!

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்.!

by Mathavi
June 22, 2026
0

தமது வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான முறையான வேலைத்திட்டமோ அல்லது முறையான தீர்மானங்களோ அரசால் இதுவரை அறிவிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீனவர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகச்...

இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.!

இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இன்று மதியம் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி