• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 23, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மக்களின் பணத்தை சுரண்டுகின்றது அரசு.!

Mathavi by Mathavi
June 22, 2026
in இலங்கை செய்திகள்.
0
மக்களின் பணத்தை சுரண்டுகின்றது அரசு.!
Share on FacebookShare on Twitter

நாட்டில் பணவீக்கம், வாழ்க்கைச் செலவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசால் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்க முடியாமல் போயுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“அரசு மக்கள் மீது பாரிய வரிச்சுமையை சுமத்தி அவர்களைப் பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளமையால் மக்களின் வாங்கும் சக்தி படிப்படியாகக் குறைந்து வருகின்றது. நல்லாட்சி அரசின் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரத்தை, தற்போதைய அரசு மக்களின் பணத்தைச் சுரண்டும் ஒரு சூத்திரமாக மாற்றியமைத்துள்ளது. மத்திய கிழக்கு யுத்தத்தைக் காரணம் காட்டி, எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கான புதிய சுரண்டல் முறையொன்றை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 75 முதல் 80 டொலர்கள் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் பலனை மக்களுக்கு வழங்கி, உள்நாட்டிலும் எரிபொருள் விலையைக் குறைப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், விலையைக் குறைக்க முடியாது என்றே அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

மத்திய கிழக்கு யுத்தம் பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பித்த போது இலங்கையிடம் மூன்று மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளது என்று ஜனாதிபதி மார்ச் மாதத்தில் அறிவித்திருந்தார். அவ்வாறாயின், புதிய எண்ணெய் கப்பல்கள் எதனையும் இறக்குமதி செய்யாமல், பெப்ரவரி மாதத்தில் 67 டொலர்களுக்கு வாங்கிய பழைய இருப்புக்கே மார்ச் மாதத்தில் மட்டும் அரசாங்கம் நான்கு முறை எரிபொருள் விலையை அதிகரித்தது. ஆனால், தற்போது உலக சந்தையில் விலை குறைந்துள்ள போது, அதிக விலைக்கு வாங்கியதாகக் கூறி விலையைக் குறைக்க மறுக்கின்றது.

பெப்ரவரி 28 இற்குப் பின்னர், 92 ஒக்டேன் பெற்றோல் 142 ரூபாவினாலும், 95 ஒக்டேன் பெற்றோல் 155 ரூபாவினாலும், ஒட்டோ டீசல் 126 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 146 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் 103 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அண்டை நாடான பாகிஸ்தானில் பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் வரிக்குறைப்பு மூலம் நிவாரணம் வழங்கப்படுகின்றது. ஆனால், இலங்கையில் அதிக வரி வசூலிக்கப்படுகின்றது. தேர்தலுக்கு முன்பு எரிபொருள் மீதான வரிகள் நீக்கப்படும் என்றும், கமிஷன் பெறப்படுவதாகவும் கூறினார்கள். அப்படியாயின் இப்போது அந்தப் பணம் யாருடைய பாக்கெட்டுக்குச் செல்கிறது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

அதேபோல், மாகாண சபை தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ‘டித்வா’ திட்டத்துக்காகச் செலவிடப்பட்டது என்று ரில்வின் சில்வா கூறிய கருத்து தனக்குத் தெரியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார். நாட்டின் அனைத்து ஊடகங்களிலும் வெளியான இந்தச் செய்தியை பிரதமர் பார்க்கவில்லை என்பதை ஏற்க முடியாது. ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் பேசப் பயந்தே அவர் அவ்வாறு கூறுகின்றார். தனது பிரதமர் பதவி பறிபோய்விடும் என்ற பயத்திலேயே பிரதமர் வாழ்கின்றார்.

மத்திய வங்கியின் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் காணாமல் போன சம்பவத்துக்கு அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும். டிஜிட்டல் பொருளாதார ஆலோசகர்கள் இருக்கும் போதே இந்த மோசடி நடந்துள்ளது. இதற்கு நிதியமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியைக் கண்டறிய நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியே பாரிய போராட்டத்தை நடத்தியது. ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு நடந்த அநீதி குறித்து சஜித் பிரேமதாஸவே பேசினார். அநுரகுமார திஸாநாயக்க இது குறித்து அன்று பேசவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியவுடன் இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக தராதரமின்றி சட்டம் நிலைநாட்டப்படும்.” – என்றார்.

Related Posts

ஆடைத்துறை வர்த்தகர்களுடன் ஜனாதிபதி உயர்மட்டப் பேச்சு.!

ஆடைத்துறை வர்த்தகர்களுடன் ஜனாதிபதி உயர்மட்டப் பேச்சு.!

by Mathavi
June 22, 2026
0

டொலர் வருமானத்தை அதிகரித்து, நாட்டில் பலமானதொரு ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஆடைத் துறையின் பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய உடனடித் தீர்வுகள் குறித்து ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார...

ஒலுமடுவில் தந்தை செல்வா நற்பணி மன்றத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

ஒலுமடுவில் தந்தை செல்வா நற்பணி மன்றத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

by Mathavi
June 22, 2026
0

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு பகுதியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய மாணவர்களுக்கு வவுனியா தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள்...

ஐ.எம்.எவ். நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாதீர்கள்.!

ஐ.எம்.எவ். நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாதீர்கள்.!

by Mathavi
June 22, 2026
0

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாது, நாட்டின் அறிவுசார் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகப் புத்தகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரியை அரசு உடனடியாக...

வட்டுக்கோட்டையில் கொடூர தாக்குதல்.!

வட்டுக்கோட்டையில் கொடூர தாக்குதல்.!

by Mathavi
June 22, 2026
0

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது கத்தியால் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மேலும்...

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் முக்கிய பேச்சு.!

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் முக்கிய பேச்சு.!

by Mathavi
June 22, 2026
0

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் கலாநிதி பால் கபூர், இன்று திங்கட்கிழமை...

சொன்னதைச் செய்த, செய்ததைச் சொன்ன ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே.!

சொன்னதைச் செய்த, செய்ததைச் சொன்ன ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே.!

by Mathavi
June 22, 2026
0

இலங்கை அரசியல் வரலாற்றில் சொன்னதைச் செய்த, செய்ததைச் சொன்ன ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி...

அரசியல் எதிரிகளை ஒடுக்க நீதித்துறையில் அரசு தலையீடு.!

அரசியல் எதிரிகளை ஒடுக்க நீதித்துறையில் அரசு தலையீடு.!

by Mathavi
June 22, 2026
0

நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியில் தலையீடு செய்து, தங்களுக்குத் தேவையான முறையில் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்குத் தற்போதைய அரசு மிகக்...

அரசமைப்பு பொது வரைவைத் தயாரிக்க 33 பேர் கொண்ட வழிநடத்தல் குழு தெரிவு.!

அரசமைப்பு பொது வரைவைத் தயாரிக்க 33 பேர் கொண்ட வழிநடத்தல் குழு தெரிவு.!

by Mathavi
June 22, 2026
0

தமிழ்த் தரப்பு சார்பில் பொதுவாக எவ்வாறானதொரு அரசியல் அமைப்பை முன்வைக்க வேண்டும் என்பது தொடர்பாக, பரந்துபட்ட மக்கள் கலந்துரையாடலை மேற்கொண்டு மக்களின் கருத்துக்களை உள்வாங்கிய ஒரு வரைவைத்...

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்.!

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்.!

by Mathavi
June 22, 2026
0

தமது வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான முறையான வேலைத்திட்டமோ அல்லது முறையான தீர்மானங்களோ அரசால் இதுவரை அறிவிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீனவர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகச்...

இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.!

இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இன்று மதியம் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி