• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு.!

Mathavi by Mathavi
June 21, 2026
in இலங்கை செய்திகள்.
0
இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு.!
Share on FacebookShare on Twitter

கண்டி, குண்டசாலை – வராபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 23 வயதுடைய இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம், உயிரிழந்த பெண்ணின் கணவருடைய வீட்டில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து, தங்களது மகளைத் திட்டமிட்டு கொலை செய்துள்ளதாகப் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பகிரங்கமாகக் குற்றம் சுமத்துகின்றனர்.

கணவர் போதைப்பொருளுக்குக் கடுமையாக அடிமையானவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், அவர் தனது மகளுக்குத் தொடர்ச்சியாகக் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்களை ஏற்படுத்தி வந்துள்ளார்.

இத்துன்புறுத்தல்கள் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் பலகொல்ல பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே பலமுறை உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்திருந்தார்.

கணவரின் தாக்குதல்கள் தாங்க முடியாமல், அவர் அடிக்கடி தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளதுடன், அண்மைக் காலமாக அவரிடமிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறுவதற்கும் தயாராகி வந்துள்ளார் என உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.

தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிஸாரிடம் விசித்திரமான வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.

“நான் நேற்று (19) இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். நேற்று அதிகாலை வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்த போது, எனது மனைவி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை அவதானித்தேன். பதற்றமடைந்த நான் உடனடியாக அந்தக் கயிற்றை அறுத்து, அவரது உடலை மீட்டுப் படுக்கையறைக் கட்டிலில் கிடத்தினேன்.” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த மரணம் தற்கொலைதான் என்பதை நிரூபிக்கும் வகையில், உயிரிழந்த பெண்ணால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் ‘மரணக் கடிதம்’ ஒன்றை இளைஞனின் வீட்டார் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரிடமும் நீதவானிடமும் சமர்ப்பித்துள்ளனர்.

எனினும், அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து மற்றும் எழுத்து வடிவங்கள் உயிரிழந்த தங்கள் மகளினுடையது அல்ல என்றும், கொலையை மறைப்பதற்காக இளைஞனின் குடும்பத்தினரால் போலியாகத் தயாரிக்கப்பட்ட கடிதம் இது என்றும் பெண்ணின் தரப்பினர் உடனடியாகக் குற்றம் சாட்டினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நீதவான் சடலத்தைப் பார்வையிட்டு முதற்கட்ட விசாரணைகளை நடத்தினார்.

மரணத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிவதற்காகப் பெண்ணின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பலகொல்ல பொலிஸார் பல கோணங்களில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

by Mathavi
June 21, 2026
0

நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹூங்கம, ரன்ன வீரகெட்டிய வீதியின் நூலக வீதிக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் 53 வயதுடைய நபர்...

கல்முனை படுகொ*லை நினைவேந்தல் நிகழ்வு.!

கல்முனை படுகொ*லை நினைவேந்தல் நிகழ்வு.!

by Mathavi
June 21, 2026
0

இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை நகரில் 1990 ஜூன் மாதம் 20 ஆந் திகதி தமிழர்கள் மீதான படுகொலைகள் இடம்பெற்றன. இதனை முன்னிட்டு...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

மனைவியை கொ*லை செய்த கணவன் கைது.!

by Mathavi
June 21, 2026
0

கணவரால் பெற்றோல் ஊற்றி தீயிட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பெண் ஒருவரின் சடலம் பிபிலை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 40 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாய் என...

நயினாதீவு கடலில் உயிரிழந்த அதிபரின் மகன் 9A சித்தி பெற்று சாதனை.!

நயினாதீவு கடலில் உயிரிழந்த அதிபரின் மகன் 9A சித்தி பெற்று சாதனை.!

by Mathavi
June 21, 2026
0

நயினாதீவு கடலில் உயிரிழந்த நயினாதீவு கணேசா மகா வித்தியாலய அதிபர் மயூரனின் மகன் கஜவர்சன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தியைப் பெற்றுள்ளார். இவரது தந்தை...

பொதுமன்னிப்பு வழங்கினால் செம்மணி உண்மைகளை கூறுவேன்; உண்மையைக் கூற நினைப்பவர் இவ்வாறு கோருவாரா?

பொதுமன்னிப்பு வழங்கினால் செம்மணி உண்மைகளை கூறுவேன்; உண்மையைக் கூற நினைப்பவர் இவ்வாறு கோருவாரா?

by Mathavi
June 21, 2026
0

"பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தின் பிரதான குற்றவாளியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் நேரில்...

சிறுவனைத் தாக்கிய நால்வர் கைது.!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி; ஆறு பெண்கள் கைது.!

by Mathavi
June 21, 2026
0

கொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், மூன்று தாய்லாந்து பெண்கள் உட்பட ஆறு பெண்கள்...

சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்புப் போராட்டம் உண்மையில் ஓர் அர்த்தமற்ற நாடகமே.!

சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்புப் போராட்டம் உண்மையில் ஓர் அர்த்தமற்ற நாடகமே.!

by Mathavi
June 21, 2026
0

"சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்புப் போராட்டம் முற்றிலும் அர்த்தமற்ற ஒன்றாகும். ஒரு முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பிரதானியாக அவர் குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கக்கூடாது." -...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரம் ஒட்டுமொத்த நாட்டுக்குரியது.!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரம் ஒட்டுமொத்த நாட்டுக்குரியது.!

by Mathavi
June 21, 2026
0

"காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னமும் அந்தத் துயரமான துன்பத்தில் இருந்து மீளாத மக்களாகவே வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு நஷ்டஈடாக வெறும் பணத்தை வழங்குவதன் மூலமாக இந்த மன...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன பிரஜை கைது.!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன பிரஜை கைது.!

by Mathavi
June 21, 2026
0

சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் (13.2 மில்லியன்) பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடத்தி வர முயன்ற வெளிநாட்டு பயணி ஒருவர்,...

தேசிய புத்தாக்க விருதுப் போட்டியில் சாதித்த ‘SLIIT Northern Uni’ மாணவர்கள்.!

தேசிய புத்தாக்க விருதுப் போட்டியில் சாதித்த ‘SLIIT Northern Uni’ மாணவர்கள்.!

by Mathavi
June 21, 2026
0

வருடந்தோறும் தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்குநர்களையும், புத்தாக்கங்களையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் புகழ்பெற்ற தேசிய விருதை, SLIIT Northern Uni தகவல் தொழில்நுட்ப மாணவர்கள் இம்முறை தமதாக்கிக்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி