• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 15, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

குற்றங்களை அடியோடு ஒழிக்க பொலிஸாரும் மக்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.!

Mathavi by Mathavi
June 15, 2026
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
குற்றங்களை அடியோடு ஒழிக்க பொலிஸாரும் மக்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

பொலிஸார் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் செயலாற்ற வேண்டும் எனவும், பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

குற்றச் செயல்களைப் பொலிஸ் திணைக்களத்தால் மாத்திரம் தனித்துக் கட்டுப்படுத்திவிட முடியாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

1966ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, கடந்த 60 ஆண்டுகளாகத் தற்காலிக இடங்களில் இயங்கி வந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கான புதிய நிரந்தரக் கட்டடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவுடன் இணைந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர்,
“நான் மாவட்ட செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் பொலிஸார் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து அதிகளவான முறைப்பாடுகளைப் பெற்றிருக்கின்றேன். குறிப்பாக, பொலிஸ் நிலையங்களில் தமது முறைப்பாடுகள் ஏற்கப்படுவதில்லை எனவும், தமக்குத் தீங்கிழைத்த குற்றவாளிகளுடன் பொலிஸார் நட்பாகப் பழகுவதாகவும் மக்கள் முறையிட்டிருந்தனர். ஆனால், இன்று அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு வழங்கிவரும் உறுதியான தலைமைத்துவமே இந்த மாற்றத்துக்குக் காரணமாகும். இருப்பினும், இத்துறையில் இன்னமும் பல மாற்றங்கள் ஏற்பட வேண்டியுள்ளது.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகளை நான் பாராட்டுகின்றேன். அவர்கள் தங்களால் முடியுமானளவு சிறப்பான சேவைகளைத் தற்போது வழங்கி வருகின்றார்கள். எமது வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்திருந்த வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைக் கலாசாரம் இன்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பொலிஸார் தமது சேவைகளைத் திறம்பட முன்னெடுப்பதற்குப் பௌதீக வளங்கள் மிகவும் அவசியமானவை. அந்தவகையில், நீண்டகாலத்தின் பின் இன்று அவர்களுக்குத் தேவையான நிரந்தரக் கட்டடம் கிடைத்துள்ளது. இதன்மூலம் அவர்கள் மேலும் சிறப்பான சேவைகளை வழங்குவார்கள் என நாம் எதிர்பார்க்கலாம்.

கிளிநொச்சியில் இடம்பெற்று வந்த சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கடத்தல்களால் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தன. இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக நானும், அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சந்திரசேகரும் பிரதிப் பொலிஸ்மா அதிபரைச் சந்தித்திருந்தோம். அதன்போது, ‘கடந்த காலங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களைக் காப்பாற்றுவதற்காகவே அரசியல்வாதிகள் எம்மைத் தேடி வருவார்கள், ஆனால், நீங்களோ அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி வந்துள்ளீர்கள்’ என அவர் ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார். அதுதான் உண்மை. சட்டவிரோதச் செயற்பாடுகளின் பின்னால் இன்றைய அரசு ஒருபோதும் நிற்காது. இத்தகைய குற்றங்களை ஒழிப்பதற்குப் பொதுமக்களாகிய நீங்களும் பொலிஸாருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.” – என்றார்.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. அதன்பின்னர், புதிய பொலிஸ் நிலையக் கட்டடம் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டு அதிதிகளால் பார்வையிடப்பட்டது. தொடர்ந்து மேடை நிகழ்வுகளும், பொலிஸ் நிலைய வளாகத்தில் மர நடுகை நிகழ்வும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், பொலிஸ்மா அதிபர், யாழ். மாவட்டச் செயலாளர், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Related Posts

காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆளுநரை சந்தித்த குழுவினர்.!

காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆளுநரை சந்தித்த குழுவினர்.!

by Mathavi
June 15, 2026
0

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று திங்கட்கிழமை (15.06.2026) வடக்கு மாகாண...

நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு.!

நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு.!

by Mathavi
June 15, 2026
0

வீதியோரங்களில் உரிய அனுமதியின்றி பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு இடையூறான நடைபாதை வியாபாரிகளை அகற்றும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில்...

லக்ஷபான தேயிலை தொழிற்சாலையை மீண்டும் கட்டியெழுப்ப அடிக்கல் நாட்டல்.!

லக்ஷபான தேயிலை தொழிற்சாலையை மீண்டும் கட்டியெழுப்ப அடிக்கல் நாட்டல்.!

by Mathavi
June 15, 2026
0

பகுதியளவில் தீப்பரவல் ஏற்பட்ட லக்க்ஷபான தேயிலை தொழிற்சாலையை மீண்டும் கட்டியெழுப்ப தோட்ட நிர்வாகத்தால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஆர்.பி.கே தோட்ட கம்பெனிக்கு உரித்தான மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு அஞ்சி சுரேஷ் சலே பச்சிளம் குழந்தை போல் நடிக்கவே கூடாது.!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு அஞ்சி சுரேஷ் சலே பச்சிளம் குழந்தை போல் நடிக்கவே கூடாது.!

by Mathavi
June 15, 2026
0

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மீது தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய விசாரணைகள் மிகவும் சரியானது என்றும், அது தங்குதடையின்றி தொடர வேண்டும்...

டெங்கு அபாயம் நாட்டில் தீவிரம்.!

டெங்கு அபாயம் நாட்டில் தீவிரம்.!

by Mathavi
June 15, 2026
0

இலங்கையில் இவ்வருடம் இதுவரை இனங்காணப்பட்டுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வடைந்துள்ளது என்று...

மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு.!

இராட்சத அலையில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
June 15, 2026
0

களுத்துறை - அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகல்ல கடற்கரைப் பகுதியில் நண்பர்களுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக இராட்சத அலையில் சிக்கி நீரில் மூழ்கி...

ஜனாதிபதியின் தொலைநோக்கு தலைமையால் இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை.!

ஜனாதிபதியின் தொலைநோக்கு தலைமையால் இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை.!

by Mathavi
June 15, 2026
0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் பாய் இன்ஷான் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது....

‘டித்வா’ புயல் பாதிப்பிலிருந்து கல்வித்துறையை மீட்க தீவிரம்.!

‘டித்வா’ புயல் பாதிப்பிலிருந்து கல்வித்துறையை மீட்க தீவிரம்.!

by Mathavi
June 15, 2026
0

'டித்வா' சூறாவளியால் நாட்டின் கல்வித்துறைக்கு ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கான தற்போதைய கூட்டு முயற்சிகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக யுனிசெப் அமைப்பின் உயர் மட்டப் பிரதிநிதிகள் குழுவினர்...

சுகாதாரத்துறை வெற்றிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கைகள்.!

சுகாதாரத்துறை வெற்றிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கைகள்.!

by Mathavi
June 15, 2026
0

நாட்டின் சுகாதாரச் சேவையை மிகவும் வினைத்திறனான முறையில் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்குப் போதியளவான மனித வளம் இல்லாமையே தற்போதைய பிரதான சவாலாகக் காணப்படுகின்றது என்றும், இதனால் சுகாதாரத்...

சற்றுமுன் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வெடித்த போராட்டம்.!

சற்றுமுன் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வெடித்த போராட்டம்.!

by Mathavi
June 15, 2026
0

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் (15) 36 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி இன்றைய தினம் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி