• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 12, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அரசு மீதான நம்பிக்கை முற்றிலும் பூஜ்ஜியம்; பொய்களாலேயே ஆட்சியை நடத்துகின்றனர்.!

Mathavi by Mathavi
June 12, 2026
in இலங்கை செய்திகள்.
0
அரசு மீதான நம்பிக்கை முற்றிலும் பூஜ்ஜியம்; பொய்களாலேயே ஆட்சியை நடத்துகின்றனர்.!
Share on FacebookShare on Twitter

அரசின் மீதான மக்களின் நம்பிக்கை முற்றிலும் இழக்கப்பட்டு, அவநம்பிக்கையே மேலோங்கியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு ஆட்சியைப் பிடித்த தற்போதைய அரசு, பதவியில் இருக்கும் போதும் தொடர்ந்து பொய்களையே கூறி வருகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நேற்று இரவு நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய வெடிகுண்டுதாரிகள், மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப்பட்டியலில் இருந்தார்களே தவிர, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அல்ல. இந்தப் பயங்கரவாதிகளுக்காக நீதிமன்றத்தில் முன்னின்ற சட்டத்தரணிகள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை ஆராய்ந்தால் உண்மை வெளிவரும்.

அன்று இந்த விசாரணை கோப்புகளை மூடிமறைத்த அதிகாரிகளுக்கு இன்று அரசு உயர் பதவிகளை வழங்கியுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறுபவர்கள், அதற்காக ஜே.வி.பியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களே வேலை செய்துள்ளார்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும், குறிப்பாக அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்களது நெல்லுக்குரிய நியாயமான விலையைப் பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

அரசு உறுதியளித்தபடி உர மானியத்தையோ அல்லது உரிய நேரத்தில் உரத்தையோ வழங்கவில்லை. சிறுபோகத்துக்கான உரமும் இன்றி, பெரும்போகத்துக்கான முறையான திட்டமும் அரசிடம் இல்லை. வங்கிக் கடன்களைப் பெற்று நெல் கொள்வனவு செய்த சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்களது அரிசியை விற்க முடியாமல் ஆலைகளை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

‘Rebuild Sri Lanka’ என்ற பெயரில் நிதி ஒன்று உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், நாடாளுமன்ற நிதிக் குழுவின் செயலாளர் அவ்வாறானதொரு நிதியம் உருவாக்கப்படவே இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறாயின் அந்த நிதிக்காகச் சேர்ந்த பணம் எங்கே போனது என்ற கேள்வி எழுகின்றது. அரசின் கணக்குகளில் இருந்து தவறான கணக்குகளுக்குப் பணம் பரிமாற்றப்படும் போதெல்லாம், யாரோ ‘ஹேக்’ செய்துவிட்டார்கள் அல்லது தொழில்நுட்பத் தவறு என்று அரசு சாக்குப்போக்குக் கூறுகின்றது.

சாதாரண கிராமத்து மனிதன் தனது கணக்கில் சிறிய தொகையொன்றை வைப்புச் செய்தால், வரி கோப்புகள் மற்றும் ஆயிரத்தெட்டு கேள்விகளைக் கேட்கும் அரசு, பெரிய தொழிலதிபர்களுடன் தொடர்புடைய தவறான கணக்குகளுக்குக் கோடிக்கணக்கான பணம் செல்லும் போது எந்தக் கேள்வியும் எழுப்புவதில்லை.

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு, இன்று அவர்களுக்குத் தனியார் துறையிலாவது ஒரு சாதாரண வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஒருபுறமிருக்க, நாட்டில் இயங்கி வரும் தொழிற்சாலைகளும் நாளாந்தம் மூடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் இலங்கையை விட்டு வெளியேறி வருவதுடன், வேலைவாய்ப்பின்மை விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. தற்போது இருக்கும் வேலைகளையாவது பாதுகாத்துக்கொள்ள முடியாத பலவீனமான நிலையிலேயே இந்த அரசு உள்ளது.” – என்றார்.

Related Posts

மஸ்கெலியாவில் முன்பள்ளியை பூட்டி வைத்து தோட்ட நிர்வாகம் அராஜகம்!

மஸ்கெலியாவில் முன்பள்ளியை பூட்டி வைத்து தோட்ட நிர்வாகம் அராஜகம்!

by selvan
June 12, 2026
0

மஸ்கெலியா சாமிமலை பகுதியில் உள்ள கவிரவிலை தோட்டத்தின் பெரிய சோலங்கத்தை பிரிவில் உள்ள முன் பள்ளியை தோட்ட அதிகாரி கடந்த 11ஆம் திகதி தன்னிச்சையாக இழுத்துப்பூட்டி உள்ளதாக...

சிறைக்கூடத்தில் கைதி உயிரிழந்த விவகாரம் – இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடை நீக்கம்!

சிறைக்கூடத்தில் கைதி உயிரிழந்த விவகாரம் – இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடை நீக்கம்!

by selvan
June 12, 2026
0

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ்...

கிளிநொச்சியில் நடமாடும் சேவையூடாக காணிப் பிணக்குகளுக்குத் தீர்வு!

கிளிநொச்சியில் நடமாடும் சேவையூடாக காணிப் பிணக்குகளுக்குத் தீர்வு!

by selvan
June 12, 2026
0

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு கிளிநொச்சி மாவட்டத்தின்கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் காணி நடமாடும் சேவையூடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு. கண்டாவளை பிரதேச...

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகள் வெளிவரும் வரை பிள்ளையான் மற்றும் சலேயை விடுதலை செய்யக்கூடாது!

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகள் வெளிவரும் வரை பிள்ளையான் மற்றும் சலேயை விடுதலை செய்யக்கூடாது!

by selvan
June 12, 2026
0

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும் என்றும், அதுவரை இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலே...

குருந்தூர் மலையில் சைவக் கோயில் இருந்ததற்கான சான்று இல்லை – தொல்லியல் திணைக்களம் திட்டவட்டம்!

குருந்தூர் மலையில் சைவக் கோயில் இருந்ததற்கான சான்று இல்லை – தொல்லியல் திணைக்களம் திட்டவட்டம்!

by selvan
June 12, 2026
0

முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் வரலாற்று ரீதியாகச் சைவக் கோயில் ஒன்று இருந்ததற்கான எவ்வித சான்றுகளும் இல்லை எனத் தொல்லியல் திணைக்களம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள்...

சர்வதேச அளவில் மனக்கணிதத்தில் சாதிக்கும் முல்லைத்தீவு சிறார்கள்.

சர்வதேச அளவில் மனக்கணிதத்தில் சாதிக்கும் முல்லைத்தீவு சிறார்கள்.

by selvan
June 12, 2026
0

சர்வதேச அளவில் நடைபெற்ற மனக்கணிதப் போட்டியில் முல்லைத்தீவு சிறார்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். ICAM Abacus இன் சர்வதேச அளவிலான மனக்கணிதப் போட்டி 04.06.2026 அன்று...

ஆரம்பப் பாடசாலைகளுக்கு பொதுவான மாதிரித் திட்டம் – பிரதமர் அறிவிப்பு

ஆரம்பப் பாடசாலைகளுக்கு பொதுவான மாதிரித் திட்டம் – பிரதமர் அறிவிப்பு

by selvan
June 12, 2026
0

மாணவர் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் செயல்வழிக் கல்வி ஆகிய முக்கிய துறைகளை உள்ளடக்கிய பொதுவான மாதிரி ஒன்றின் அடிப்படையில், நாட்டின் ஆரம்பப் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்...

நீதியரசர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புங்கள் – சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் கூட்டு மகஜர்!

நீதியரசர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புங்கள் – சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் கூட்டு மகஜர்!

by selvan
June 12, 2026
0

உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் நீதியரசர்களின் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட விசேட கடிதமொன்று இன்று சபாநாயகர் ஜகத்...

வலிகாமம் வடக்கில் இராணுவ கொமாண்டோ பங்களா முன் 8 ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு!

வலிகாமம் வடக்கில் இராணுவ கொமாண்டோ பங்களா முன் 8 ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு!

by selvan
June 12, 2026
0

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா முன்பாக...

வருண ஜயசுந்தரவைக் கைது செய்யும் எண்ணம் இல்லை! – சட்டமா அதிபர் அறிவிப்பு

வருண ஜயசுந்தரவைக் கைது செய்யும் எண்ணம் இல்லை! – சட்டமா அதிபர் அறிவிப்பு

by selvan
June 12, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவைக் கைது செய்யவோ அல்லது தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தவோ எவ்வித...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி