• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 12, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சங்கீத்ஷன் கைது விவகாரம்; ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரியிடம் சாணக்கியன் முறையீடு.!

Mathavi by Mathavi
June 12, 2026
in இலங்கை செய்திகள்.
0
சங்கீத்ஷன் கைது விவகாரம்; ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரியிடம் சாணக்கியன் முறையீடு.!
Share on FacebookShare on Twitter

இலங்கையில் தமிழ் சொல்லிசைப் பாடகர் சங்கீத்ஷன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் காணி ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரியிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சாணக்கியன் நேரில் முறையிட்டுள்ளார்.

ஐரோப்பிய வெளிநாட்டு நடவடிக்கை சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவரான சார்ல்ஸ் வைட்லியை, பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான மனித உரிமைகள், நல்லாட்சி மற்றும் ஜி.எஸ்.பி. பிளஸ் வர்த்தகச் சலுகை போன்ற விடயங்களில் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சார்ல்ஸ் வைட்லியுடனான இந்தச் சந்திப்பின் போது, தமிழ் சொல்லிசைப் பாடகரான கணேஷ்குமார் சங்கீத்ஷன் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து சாணக்கியன் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்தக் கைது நடவடிக்கை கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் செயல் என்று சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பாக தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் எழுதிய கடிதத்தையும் சார்ல்ஸ் வைட்லியுடன் கையளித்துள்ளார்.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக சர்வதேசத்துக்கு உறுதியளித்த போதிலும், குறிப்பாக தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக இந்தச் சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதை இதன்போது சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய கைதுகள், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் வர்த்தகச் சலுகைக்கான சர்வதேச மனித உரிமை உடன்படிக்கைகளை இலங்கை மீறுவதையே காட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகாலமாக நடத்தப்படாமல் தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள சாணக்கியன், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வும் ஜனநாயக பிரதிநிதித்துவமும் அத்தியாவசியமானவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், எதிர்கால அரசமைப்புச் சீர்திருத்தங்கள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், தமிழர் பெரும்பான்மைப் பகுதிகளில் தொடர்ந்தும் நிலவி வரும் காணி ஆக்கிரமிப்புப் பிரச்சினைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

கணிசமான அளவிலான தமிழ் மக்களின் காணிகள் இன்னும் இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்துக்காக அவை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது அன்புக்குரியவர்களைத் தேடி, நீதி கோரிப் போராடி வரும் குடும்பங்களின் நிலை குறித்து விவரித்துள்ள சாணக்கியன், சர்வதேச தரத்துக்கு அமைவான நம்பகமான உண்மையறியும் செயல்முறை மூலம் நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்களின் நியாயமான அரசியல், மனித உரிமை மற்றும் சமூக நீதி சார்ந்த கோரிக்கைகளில் சர்வதேச சமூகமும், ஐரோப்பிய ஒன்றியமும் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்தச் சந்திப்பின் போது சாணக்கியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts

மஸ்கெலியாவில் முன்பள்ளியை பூட்டி வைத்து தோட்ட நிர்வாகம் அராஜகம்!

மஸ்கெலியாவில் முன்பள்ளியை பூட்டி வைத்து தோட்ட நிர்வாகம் அராஜகம்!

by selvan
June 12, 2026
0

மஸ்கெலியா சாமிமலை பகுதியில் உள்ள கவிரவிலை தோட்டத்தின் பெரிய சோலங்கத்தை பிரிவில் உள்ள முன் பள்ளியை தோட்ட அதிகாரி கடந்த 11ஆம் திகதி தன்னிச்சையாக இழுத்துப்பூட்டி உள்ளதாக...

சிறைக்கூடத்தில் கைதி உயிரிழந்த விவகாரம் – இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடை நீக்கம்!

சிறைக்கூடத்தில் கைதி உயிரிழந்த விவகாரம் – இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடை நீக்கம்!

by selvan
June 12, 2026
0

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ்...

கிளிநொச்சியில் நடமாடும் சேவையூடாக காணிப் பிணக்குகளுக்குத் தீர்வு!

கிளிநொச்சியில் நடமாடும் சேவையூடாக காணிப் பிணக்குகளுக்குத் தீர்வு!

by selvan
June 12, 2026
0

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு கிளிநொச்சி மாவட்டத்தின்கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் காணி நடமாடும் சேவையூடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு. கண்டாவளை பிரதேச...

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகள் வெளிவரும் வரை பிள்ளையான் மற்றும் சலேயை விடுதலை செய்யக்கூடாது!

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகள் வெளிவரும் வரை பிள்ளையான் மற்றும் சலேயை விடுதலை செய்யக்கூடாது!

by selvan
June 12, 2026
0

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும் என்றும், அதுவரை இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலே...

குருந்தூர் மலையில் சைவக் கோயில் இருந்ததற்கான சான்று இல்லை – தொல்லியல் திணைக்களம் திட்டவட்டம்!

குருந்தூர் மலையில் சைவக் கோயில் இருந்ததற்கான சான்று இல்லை – தொல்லியல் திணைக்களம் திட்டவட்டம்!

by selvan
June 12, 2026
0

முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் வரலாற்று ரீதியாகச் சைவக் கோயில் ஒன்று இருந்ததற்கான எவ்வித சான்றுகளும் இல்லை எனத் தொல்லியல் திணைக்களம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள்...

சர்வதேச அளவில் மனக்கணிதத்தில் சாதிக்கும் முல்லைத்தீவு சிறார்கள்.

சர்வதேச அளவில் மனக்கணிதத்தில் சாதிக்கும் முல்லைத்தீவு சிறார்கள்.

by selvan
June 12, 2026
0

சர்வதேச அளவில் நடைபெற்ற மனக்கணிதப் போட்டியில் முல்லைத்தீவு சிறார்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். ICAM Abacus இன் சர்வதேச அளவிலான மனக்கணிதப் போட்டி 04.06.2026 அன்று...

ஆரம்பப் பாடசாலைகளுக்கு பொதுவான மாதிரித் திட்டம் – பிரதமர் அறிவிப்பு

ஆரம்பப் பாடசாலைகளுக்கு பொதுவான மாதிரித் திட்டம் – பிரதமர் அறிவிப்பு

by selvan
June 12, 2026
0

மாணவர் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் செயல்வழிக் கல்வி ஆகிய முக்கிய துறைகளை உள்ளடக்கிய பொதுவான மாதிரி ஒன்றின் அடிப்படையில், நாட்டின் ஆரம்பப் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்...

நீதியரசர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புங்கள் – சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் கூட்டு மகஜர்!

நீதியரசர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புங்கள் – சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் கூட்டு மகஜர்!

by selvan
June 12, 2026
0

உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் நீதியரசர்களின் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட விசேட கடிதமொன்று இன்று சபாநாயகர் ஜகத்...

வலிகாமம் வடக்கில் இராணுவ கொமாண்டோ பங்களா முன் 8 ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு!

வலிகாமம் வடக்கில் இராணுவ கொமாண்டோ பங்களா முன் 8 ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு!

by selvan
June 12, 2026
0

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா முன்பாக...

வருண ஜயசுந்தரவைக் கைது செய்யும் எண்ணம் இல்லை! – சட்டமா அதிபர் அறிவிப்பு

வருண ஜயசுந்தரவைக் கைது செய்யும் எண்ணம் இல்லை! – சட்டமா அதிபர் அறிவிப்பு

by selvan
June 12, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவைக் கைது செய்யவோ அல்லது தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தவோ எவ்வித...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி