• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இனவாதத்திற்காக மக்களைக் கொ*ல்வது காட்டுமிராண்டித்தனமான செயல்.!

Mathavi by Mathavi
June 10, 2026
in இலங்கை செய்திகள்., மன்னார் செய்திகள்
0
இனவாதத்திற்காக மக்களைக் கொ*ல்வது காட்டுமிராண்டித்தனமான செயல்.!
Share on FacebookShare on Twitter

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் அவர்கள் வரலாற்றில் நடந்த அனைத்தும் இன அழிப்பு என்றும், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு என உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளமையை தான் வரவேற்பதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (10) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய சகோதர குரு அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தன்னுடைய வாழ்க்கையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பொழுது, வரலாற்றில் நடந்த அனைத்தும் இன அழிப்பு என்று, தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு என்று சொல்லி மிகவும் தெளிவாக தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு உண்மைகளை வெளிப்படுத்தி இருந்தார்.

அவருடைய அனுபவப் பகிர்வு எல்லோராலும் வரவேற்று, அது உண்மை என்று சொல்லப்பட்டிருக்கின்ற வேளையிலே, மன்னார் மாவட்டத்தில் இருக்கும் மக்களாகிய நாங்கள் அவருடைய இந்தக் கருத்துக்களை மிகவும் மதிப்போடு ஏற்றுக் கொள்கிறோம்.

அதே வேளையில், கொழும்பு மறைமாவட்டத்தின் உடைய குருவாகப் பணியாற்றுகின்ற அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த அதற்கு எதிரான ஒரு மனித உரிமை மீறலான கருத்தை வெளியிட்டிருப்பது கத்தோலிக்க சமூகத்திற்கும், இலங்கை வாழ் மக்களுக்கும் அதிர்ச்சி அளிக்கிறது.

ஒரு கத்தோலிக்க குரு என்பவர் மற்றவர்களுக்காக தன் உயிரைக் கொடுப்பதற்காகத்தான் ஒரு குருவாக வருவது. அந்தக் குருத்துவத்தின் உடைய மேன்மையை மறந்து, இவ்வளவு ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்ற பொழுது, அது பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு, பயங்கரவாதிகளை கொன்றது தான் இந்தப் போரினுடைய நோக்கமாக இருந்ததே ஒழிய, இன அழிப்பின் நோக்கமாக இருக்கவில்லை என்பதை மிகவும் தெளிவாக பொய்யை அவர் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.

ஆனால், வரலாற்றில் 70 வருட காலத்துக்குக் காலம் நடைபெற்ற திட்டமிட்ட இன அழிப்புகளை மிகவும் தெளிவாக ஜீவந்த அருட்தந்தை சொல்லியிருப்பதை நாங்கள் இந்த வேளையிலே உறுதி செய்கிறோம்.

கடந்த 70 வருடங்களாக பல இடங்களில், வடக்கு கிழக்கில் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டது உண்மையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சர்வதேச ரீதியிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆகவே, இந்த வேளையிலே எங்களுடைய ஜீவந்த அருட்தந்தையின் உடைய கருத்துக்களை நாங்கள் ஏற்றுக் கொள்வதோடு, அவருக்கு ஆதரவாக மன்னார் மாவட்ட மக்களும், மன்னார் கத்தோலிக்க மக்களும் இருப்பதோடு, அவருடைய இந்தக் குரலை நசுக்குவதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை நாங்கள் முற்றிலும் எதிர்க்கிறோம்.

அவருடைய பயணம் தொடர நாங்கள் அவரோடு தோள் கொடுத்து, அவருடைய கருத்துக்களை இன்னும் வலுப்படுத்த நாங்கள் தயாராக இருப்பதோடு, அருட்தந்தை கிரிஷாந்த அவருடைய கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒரு கத்தோலிக்க குரு என்ற ரீதியிலே கத்தோலிக்க குருவினுடைய இந்தக் கருத்து ஒரு காட்டுமிராண்டித்தனமான கருத்து என்பதை இந்த வேளையிலே நான் பதிவு செய்து கொள்கிறேன்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்
இந்த நாட்டிலே பிரச்சினைகள், இனவாதம் வேரூன்றுவதற்கு காரணம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தான். அங்கே மக்கள் சமநிலையோடு, சமத்துவத்தோடு, மனித உரிமைகளோடு மதிக்கப்படுகின்ற சட்டமாக இந்த சட்டம் எங்களது இலங்கைத் தீவிலே இல்லை. அரசியல் நோக்கங்களுக்காகவும், இனவாத நோக்கங்களுக்காகவும் இந்த சட்டம் பயன்படுத்தப்படுவதால், உண்மையாகவே இலங்கை உயர்ந்த ஒரு நாடாக வளர்வதற்கு இந்த சட்டம் இந்த மண்ணில் இருந்து அகற்றப்பட வேண்டும்.

ஏற்கனவே அரசு வாக்களித்தது போல, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எடுத்து, முற்றிலுமாக எடுத்து, மக்கள் மனித உரிமைகளை அனுபவிக்கும் ஒரு நாடாக, அவர்தம் வாழ்வாக மக்களின் வாழ்வு மாறுவதற்கு, இந்த பயங்கரவாதச் சட்டம் முற்றிலும் தடையாக இருப்பதை இந்த இடத்திலே பதிவு செய்து கொள்வதோடு, இந்தச் சட்டத்தை இன்னொரு பெயரில் மாற்றி, அதையும் இன்னும் ஒரு பயங்கரமான ஒரு சட்டமாகக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் மேற்கொள்கின்ற சட்டத்தை நாங்கள் முற்றிலும் எதிர்ப்பதோடு, அரசாங்கத்தினுடைய இந்த சட்டம் மென் மேலும் எங்களிடையே பிரிவினைகளையும், எங்களிடையே இனவாத மோதல்களையும், இனவாதத்தை இன்னும் ஆழமாக வேரூன்றச் செய்கின்ற சட்டமாகவும் அமையப் போகிறது.

ஜனாதிபதி அவர்கள் எங்களது கருத்துக்களை உள்வாங்கி, இந்தச் சட்டத்தை அவர் ஏற்கனவே சொன்னது போல எங்களது தீவிலிருந்து அகற்றுவது மிகவும் வரவேற்கத்தக்கது .

எல்லா இன மக்களும் இந்த நாட்டிலே சமாதானமாக வாழ்வதற்கு ஒரு ஒழுங்கான சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட இலங்கை மக்கள்.
ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட இலங்கை மக்கள் என்ற ரீதியிலே நாங்கள் பார்க்கின்ற பொழுது, தங்களுடைய சுய நலத்திற்காகவும், அரசியல் நோக்கங்களுக்காகவும், இனவாதத்திற்காகவும் மக்களைக் கொல்வது என்பது மிகவும் ஒரு காட்டுமிராண்டித்தனமான ஒரு செயல்.

இது திட்டமிட்ட முறையில் நடந்தது உலகறிந்த உண்மை. இலங்கையில் இருக்கும் எல்லோரும் அறிந்த உண்மை. ஆகவே, அதைச் செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதை நான் தெரிவித்துக் கொள்வதோடு, இதனாலேயே இனங்களுக்கு இடையே ஏற்படுகின்ற அந்த இன மோதல்கள், இந்த நல்ல முறையான தீர்ப்புகளை அளித்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு நேரத்தில், நாங்கள் நிற்கிறோம். அரசாங்கம் நீதியோடு செயல்படும் என்ற நம்பிக்கையோடு அதை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.”

“இந்த ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணைகளை குழப்புகிற நடவடிக்கை எங்களுடைய தீவுக்கு, எங்களுடைய இலங்கை நாட்டுக்கு முரணான செயல்பாடாக அமைகிறது.

காரணம், இலங்கை நாடு என்பது ஒரு சமய, ஆன்மீக வழியிலே வளர்ந்து வருகின்ற ஒரு நாடாக இருப்பதனால், பௌத்த மதம் அழகான சமய, ஆன்மீக சிந்தனைகளோடு மக்களை வழிநடத்துகின்ற ஒரு சமயம். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அத்தோடு இஸ்லாமிய சமயம், அத்தோடு சைவ சமயம், அத்தோடு கத்தோலிக்க கிறிஸ்தவ சமயங்கள் எல்லா மக்களை ஒழுக்கத்தோடு வழிநடத்துகின்ற ஒன்றுதான்.

உண்மைக்காக குரல் கொடுக்கின்ற அனைத்து சமயங்களும் இந்த ஈஸ்டர் தாக்குதலுக்கு உண்மையைத் தேடி உழைக்கின்ற சமயங்களாக இருக்கிறதே ஒழிய தடையாக இல்லை.

ஆனால், சமயங்களைப் பயன்படுத்தி அதற்கு தடையை ஏற்படுத்துகின்ற அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

அத்தோடு அரசியலுக்காக உண்மைகளை மறைக்கும் செயலானது, இன்னும் வருங்காலத்தில் மிகப்பெரிய பிளவுகளையும், மிகப்பெரிய பிரச்சினைகளையும், விடிவுக்கு வராத, முடிவுக்கு வராத ஒரு இனப்பிரச்சனையாக வளர்ந்து செல்வதற்கும் இது மிகவும் உதவியாக இருக்கப்போகிறது .

நாங்கள் கனா காணுகின்ற நாடு எங்களுக்கு கிடைக்குமா? நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ முடியுமா என்ற அந்த ஒரு சிந்தனை சிதைந்து போகும் ஒரு நிலையில் நாங்கள் இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Continue Reading

Related Posts

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!

by selvan
June 10, 2026
0

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம்(10.06.2025) காலை...

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இந்து மத வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்வதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு.!

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இந்து மத வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்வதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு.!

by Mathavi
June 10, 2026
0

உயிர்த்த ஞாயிறு விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டுகின்ற நேரத்திலே அதனை ஒடுக்குவதற்காகவும் அந்த விசாரணைகளை குழப்பும் விதமான செயல்பாடுகளையும் இப்போது எதிர்க்கட்சி சார்ந்த அரசியல்வாதிகள், ராஜபக்சக்கள், விமல் வீரவன்ச,...

போதைப்பொருள் கடத்தலுடன் சம்மந்தப்பட்ட மூவர் கைது!

போதைப்பொருள் கடத்தலுடன் சம்மந்தப்பட்ட மூவர் கைது!

by selvan
June 10, 2026
0

ஐஸ் போதைப்பொருளை சூட்சுமாக விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் ஒரு தம்பதியினரைக் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்திய சம்மாந்துறை பொலிஸார் விசேட விசாரணைகளை தற்போது மேற்கொண்டு...

வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துக.!

வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துக.!

by Mathavi
June 10, 2026
0

வடபகுதிக் கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே...

சொல்லிசைக் கலைஞர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யுங்கள்.!

சங்கீத்சன் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி உரையாடல்.!

by Mathavi
June 10, 2026
0

சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது....

பனை வளம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு.!

பனை வளம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு.!

by Mathavi
June 10, 2026
0

உலக பனை தினம் என பனை வள ஆர்வலர்கள் யூன் 6 ஆம் நாள் கொண்டாடியதை ஒட்டி பனை வளம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு கோப்பாய் ஆசிரியர்...

ஜனாதிபதியின் பொய் வாக்குறுதி; தலைவிரித்தாடும் இலஞ்சம்; மீனவர்கள் அவலக்குரல்.!

ஜனாதிபதியின் பொய் வாக்குறுதி; தலைவிரித்தாடும் இலஞ்சம்; மீனவர்கள் அவலக்குரல்.!

by Mathavi
June 10, 2026
0

கரைவலைத் தொழிலுக்காக, உழவு இயந்திரத்தில் (Tractor) பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களை (Winch Machines) பயன்படுத்துவது தொடர்பான பிரச்சினைக்கு, இரண்டு மாதங்களுக்குள் தீர்வு தருவதாக ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்திருந்தார்....

சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்க.!

சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்க.!

by Mathavi
June 10, 2026
0

அண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிககை எடுக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

சிறுவனைத் தாக்கிய நால்வர் கைது.!

யாழில் வெளிநாட்டவர்களை ஏமாற்றி பணம் பறித்த கும்பல் கைது.!

by Mathavi
June 10, 2026
0

புலம்பெயர் தேசத்தில் இருந்து வருபவர்களிடமும் ஏனையோரிடமும் இருந்து ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்த ஒரு கும்பலை சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த...

ஷான் விஜயலால் டி சில்வா கைது.!

ஷான் விஜயலால் டி சில்வா கைது.!

by Mathavi
June 10, 2026
0

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(10) கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி மற்றும் அதிகார...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி