• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 28, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

எபோலா தொற்று என்ற சந்தேகம் – உகாண்டா பெண் இந்தியாவில் தடுத்து வைப்பு!

selvan by selvan
May 27, 2026
in இந்திய செய்திகள், உலக செய்திகள்
0
எபோலா தொற்று என்ற சந்தேகம் – உகாண்டா பெண் இந்தியாவில் தடுத்து வைப்பு!
Share on FacebookShare on Twitter

எபோலா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தொழில்நுட்ப மையமான பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டால், 2014-ஆம் ஆண்டுக்குப் பின்னர் தெற்காசியாவிலேயே எபோலா தொற்று முதன் முறையாக அடையாளம் காணப்பட்ட நாடாக இந்தியா மாறும்.

உலக சுகாதார ஸ்தாபனத்தால் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலை என அறிவிக்கப்பட்டுள்ள இந்த நோயின் எந்தவொரு பாதிப்பும் இந்தியாவில் இதுவரை பதிவாகவில்லை என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா ( Jagat Prakash Nadda) கூறிய ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

எபோலா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 28 வயதான உகாண்டா நாட்டவர் தற்சமயம் இலகுவான உடல் வலியுடன் பெங்களூருவில் அமைந்துள்ள ஒரு வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

எனினும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், பரிசோதனைக்காக அவரது மாதிரிகள் எடுக்கப்பட்டு தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து பயணம் மேற்கொண்டு, மேற்குத் தொழில் நகரமான அகமதாபாத்திலிருந்து பெங்களூருவை வந்தடைந்த அந்தப் பயணியின் பரிசோதனை முடிவுகள் ஓரிரு நாட்களில் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, விமான நிலையங்கள் மற்றும் பிற நுழைவு வாயில்களில் பரிசோதனை நடவடிக்கைகளையும் தற்சமயம் இந்தியா ஆரம்பித்துள்ளது.

இது தவிர தனிமைப்படுத்தல் மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகளையும் வெளியிட்டு வருகிறது.

கொங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறும் குடிமக்களை இந்தியா ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது.

Related Posts

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல்!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல்!

by selvan
May 27, 2026
0

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவுத் தளபதி மொஹமட் ஓடே (Mohammed Odeh) கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஓடேயின் நடமாட்டம் பல மாதங்களாகக் கண்காணிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...

போலந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையே புதிய ஒப்பந்தம்

போலந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையே புதிய ஒப்பந்தம்

by selvan
May 27, 2026
0

போலந்துடனான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம், நவீன பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இங்கிலாந்துக்கு பெரிதும் உதவும் என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார்.இரு நாடுகளுக்கும் இடையிலான...

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பிய நபர் கைது

by selvan
May 27, 2026
0

சமூக வலைதளங்களில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நெல்லையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா, பெங்களூருவில் உள்ள...

பழனி கோவிலில் பெண்களை தவறான முறையில் காணொளியாக பதிவுசெய்த இளைஞர் கைது!

by selvan
May 27, 2026
0

பழனி அடிவாரம் திரு ஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் பெண் பக்தர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதுடன், தனது தொலைபேசியில் தவறாக காணொளிகள் மற்றும் புகைப்படங்களை எடுத்த இளைஞர்...

கத்தாரில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட ஈரான் குழுவினர் நாடு திரும்பினர்!

கத்தாரில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட ஈரான் குழுவினர் நாடு திரும்பினர்!

by selvan
May 27, 2026
0

கத்தாரில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற ஈரானின் முதன்மைப் பேச்சாளர் மொஹமட் பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) உள்ளிட்ட ஈரானிய தூதுக்குழுவினர் தற்பொழுது நாடு திரும்பியுள்ளனர்.அமெரிக்காவுக்கும்...

நடிகர் மம்மூட்டிக்கு “கௌரவ டொக்டர்” பட்டம்

by selvan
May 27, 2026
0

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் மம்மூட்டியின் திரைத்துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குக் கௌரவ டொக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.கேரளாவில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் இந்த உயரிய...

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பில் இங்கிலாந்தில் எச்சரிக்கை!

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பில் இங்கிலாந்தில் எச்சரிக்கை!

by selvan
May 27, 2026
0

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாடு  புகையிலை பழக்கத்தைப் போன்றது என இங்கிலாந்து மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதுவும் அவர்களது ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாக  மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்பதினாறு வயதிற்கு...

பிரித்தானியாவில் வரலாறு காணாத வெப்பம்!

பிரித்தானியாவில் வரலாறு காணாத வெப்பம்!

by selvan
May 27, 2026
0

பிரித்தானிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அங்கு மிக அதிகமான வெப்பநிலை பதிவாகி வருகிறது.லண்டனின் கியூ கார்டன்ஸ் (Kew Gardens) பகுதியில் வெப்பநிலை 34 தசம் 8...

பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஆர்வம்

பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஆர்வம்

by selvan
May 27, 2026
0

பிரான்ஸிடம் இருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதில் 90 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. பிரான்ஸ்...

இந்தியாவில்  எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு!

இந்தியாவில்  எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு!

by selvan
May 27, 2026
0

இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதன்படி, கடந்த பத்து நாட்களில் மாத்திரம் ஐந்து தடவைகள் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி