• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 24, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி இனிமேல் காணிகளைக் கைப்பற்ற முடியாது – ஜனாதிபதி எச்சரிக்கை!

selvan by selvan
May 23, 2026
in இலங்கை செய்திகள்.
0
Share on FacebookShare on Twitter

அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகக் காணிகளைக் கைப்பற்றுவதற்கு இனிமேலும் இடமளிக்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்காக பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையில் விசேட குழுவொன்று உடனடியாக நியமிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அரசியல் பின்னணியுடன் கிழக்கு மாகாணத்தில் அரங்கேறும் காணி ஆக்கிரமிப்புகளால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் எழுந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,

அவற்றை முறியடிக்க விசேட பொலிஸ் குழுவை நியமிக்க உத்தரவிட்டார்.

மாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத காணி நிரப்பல்களைப் பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் பணிப்புரை விடுத்தார்.

“மகாவலி அதிகார சபையால் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் வர்த்தகத் திட்டங்களுக்காக வழங்கப்பட்டு, இதுவரை அபிவிருத்தி செய்யப்படாமல் முடக்கப்பட்டுள்ள காணிகள் மீண்டும் அரசால் கையகப்படுத்தப்படும்.

அவை மாவட்ட அல்லது பிரதேச செயலாளர்களின் கீழ் கொண்டுவரப்பட்டு, முறையான திட்டங்களின் கீழ் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.” – என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற நிர்வாகக் கட்டமைப்புகளை நிறுவுவது அரசியல் ரீதியான பணியல்ல, அது ஒரு தூய நிர்வாகப் பணியாகும்.

எனவே, நிர்வாகக் கட்டமைப்புகள் எக்காரணம் கொண்டும் இனங்களின் அடிப்படையில் அமையக் கூடாது.

அவை நிலப்பரப்பின் அளவு, மக்கள் தொகை போன்ற பொதுவான அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.” – என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்குக் கடற்கரையைப் பாதுகாக்க ‘கடல் தடுப்புச்சுவர்’ அமைப்பது ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வு அல்ல என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஒலுவில் துறைமுகம் மற்றும் மீன்பிடித் துறைமுகத்தை உள்ளடக்கி, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விஞ்ஞானபூர்வமான அவசர ஆய்வு ஒன்றை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

ஒவ்வொரு வருடமும் கல்ஓயா ஆறு பெருக்கெடுப்பதால் அம்பாறை, சம்மாந்துறை, காரைதீவு, அட்டாளைச்சேனை, கல்முனை, அக்கரைப்பற்று, இறக்காமம், தமன்ன, நிந்தவூர் உள்ளிட்ட 9 பிரதேச செயலகப் பிரிவுகளின் மக்கள் எதிர்கொள்ளும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அவசர ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டதுடன், அதற்கான முதற்கட்ட நிதியும் ஒதுக்கப்படவுள்ளது.

அறுகம்பே மற்றும் பானம ஆகிய சுற்றுலாப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் வேளையில், கடற்கரையோரம் ஹோட்டல்களை நடத்துவதில் வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விதமாகச் சார்பாகச் செயற்படும் அரச அதிகாரிகளின் போக்குக்கு ஜனாதிபதி கடும் கண்டனம் வெளியிட்டார்.

கல்முனைப் பகுதியில் தற்போது வெவ்வேறு இடங்களில் சிதறி அமைந்துள்ள அனைத்து அரச நிறுவனங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வருதற்கான திட்டங்களைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி  உத்தரவிட்டார். இதற்கான நிதி வரவிருக்கும் வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

லாகுகல பிரதேசத்துக்குத் குடிதண்ணீர் வழங்குவதற்காக ஹெடஓயாவை மையமாகக் கொண்டு 5 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு முடக்கப்பட்டிருந்த குடிதண்ணீர் திட்டம் மீண்டும் உடனடியாக ஆரம்பிக்கப்படும்.

அத்துடன், நுவரகல தொல்பொருள் வன ஒதுக்கீட்டைப் பாதுகாத்தல் மற்றும் மாதுருஓயா வன ஒதுக்கீட்டை அண்மித்த ஆதிவாசிகள் கிராம (ஹேனானிகல தெற்கு) சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

கரும்பு விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குச் சர்க்கரை ஆலை நிறுவனங்களுடன் கலந்துரையாடி விரைவான தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அண்மையில் வீசிய ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கு உயிரிழப்புகளுக்கான இழப்பீடு, பயிர்ச் சேதங்கள், கால்நடை மற்றும் மீனவச் சமூகத்துக்கான வாழ்வாதார இழப்பீடுகள் வழங்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தனித்தனியாகக் கேட்டறிந்தார்.

அனர்த்தங்களினால் பொருளாதார ரீதியாகக் கீழ் மட்டத்தில் உள்ள மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கான பகுதியளவு மற்றும் முழுமையான வீட்டுச் சேதங்களுக்கான இழப்பீடுகள் மற்றும் 16 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டு வரும் மீள்குடியேற்றப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 22 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதை நினைவூட்டிய ஜனாதிபதி, இந்த நிதி ஒதுக்கீடுகளை உரிய நிதியாண்டுக்குள்ளேயே முறையாகப் பயன்படுத்தி மக்களுக்குப் பலன்களைப் பெற்றுக்கொடுப்பது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் எச்சரித்தார்.

Related Posts

LPL கிரிக்கெட் தொடருக்காக 650க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு

LPL கிரிக்கெட் தொடருக்காக 650க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு

by selvan
May 23, 2026
0

இலங்கை பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடருக்காக 650க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள...

போதை பொருள் பாவணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் நடைபவனி !

by selvan
May 23, 2026
0

எதிர்காலத்தை பறிக்கும் நச்சுப்போதை பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் விழிப்புணர்வு நடைபயணம் ஒன்று இடம்பெற்றது.தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால்...

மொனராகலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொ*லை

மொனராகலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொ*லை

by selvan
May 23, 2026
0

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்ல கலேவத்தை, பாலாறு பகுதியில்  கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.மில்ல கலேவத்தை, பிபில வீதி, மொனராகலை எனும் முகவரியைச்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பேரணி: விதிமுறைகளை மீறியதாக மூவர் கைது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பேரணி: விதிமுறைகளை மீறியதாக மூவர் கைது!

by selvan
May 23, 2026
0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு  சமாந்தரமாக, போக்குவரத்து விதிகளை மீறி வீதியில் மோட்டார் சைக்கிள் பேரணியில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாதுகாப்புத் தலைக்கவசங்கள் இன்றி மோட்டார் சைக்கிள்களில்...

இந்து சகோதரர்களின் போர் சம நிலையில் நிறைவு!

இந்து சகோதரர்களின் போர் சம நிலையில் நிறைவு!

by selvan
May 23, 2026
0

இந்து சகோதரர்களின் போர் என்று அழைக்கப்படும் மானிப்பாய் இந்து கல்லூரிக்கும், சாவகச்சேரி இந்து கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டியானது இன்றையதினம் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.நேற்றையதினம் ஆரம்பித்த போட்டியானது இன்று...

ஹட்டன் இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது!

ஹட்டன் இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது!

by selvan
May 23, 2026
0

ஹட்டன் - டிக்கோயா நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் வயோதிபத் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொகவந்தலாவை போலீசாருக்கு கிடைத்த...

நாடு மீண்டும் வீழ்ந்தால் மீளவே முடியாது! – முன்னாள் நீதி அமைச்சர் எச்சரிக்கை

நாடு மீண்டும் வீழ்ந்தால் மீளவே முடியாது! – முன்னாள் நீதி அமைச்சர் எச்சரிக்கை

by selvan
May 23, 2026
0

பிரதான அரசியல் கட்சிகள் பலவீனப்படுத்தப்பட்டதன் காரணமாக, நிர்வாக அறிவும் அரசியல் தெளிவும் அற்ற குழுக்களிடம் நாட்டின் அதிகாரம் செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என முன்னாள் நீதி அமைச்சர் ...

மன்னார் முந்தல் பகுதிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமாயிலான குழுவினர் கள விஜயம்

மன்னார் முந்தல் பகுதிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமாயிலான குழுவினர் கள விஜயம்

by selvan
May 23, 2026
0

மன்னார் பள்ளிமுனை முந்தல் கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ள அந்தோனியார் சிற்றாலய பகுதிக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்....

கிளிநொச்சியில் ‘clean srilanka’ வேலைத்திட்டம்

கிளிநொச்சியில் ‘clean srilanka’ வேலைத்திட்டம்

by selvan
May 23, 2026
0

தூய்மையான இலங்கை (Clean Srilanka) வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சுமார் 7 கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் (23) இடம்பெற்றது....

சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

by selvan
May 23, 2026
0

மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அதன்படி, கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி