வீட்டு மாடிப் படியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்படும் குடும்பஸ்தரின் சடலத்தின் சில அவயங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் நல்லடக்கத்திற்காக சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை மே 4 ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸ் பிரிவின் விளினியடி பிரிவில் இச்சம்பவம் இடம்பெற்றதுடன் சம்பவ இடத்தில் உயிரிழந்தவரின் சடலத்தின் மீதான மரண விசாரணை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்து சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன் போது உயிரிழந்தவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதனால் மறுநாள் அம்பாரை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்hக சட்ட வைத்திய அதிகாரி நிபுணருக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் போது சட்ட வைத்திய அதிகாரி நிபுணரினால் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் உயிரிழந்தவரின் சடலத்தின் சில அவயங்கள் கொழும்பில் உள்ள அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு மேலதிக பரிசோதனைக்கான அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து வருவதுடன் குடும்பஸ்தரின் சடலம் இன்று உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக கையளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சம்பவத்தில் 45 வயதுடைய மலயர் வீதி விளினியடி-1 பிரிவு சம்மாந்துறை பகுதியை சேர்ந்த உதுமாலெப்பை இப்றாகீம் என்பவர் உயிரிழந்தவர் ஆவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.










