வலய மட்ட விளையாட்டு போட்டிகள் நடாத்தும் போது போட்டியாளர்களுக்கும் பங்கு கொள்ளும் அதிகாரிகளுக்கும் உகந்த விளையாட்டு மைதானத்தை தெரிவு செய்யவேண்டிய பொரறுப்பு ஹட்டன் வலய அதிகாரிகள் கையில்.
ஹட்டன் வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு வழங்க பட்ட விளையாட்டு மைதானத்தில் கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் அசெளகரியம். ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் ஹட்டன் டன்பார் மைதானத்தில் இடம் பெற்று வந்ததை தொடர்ந்து
ஏனைய போட்டிகள் அம்பகமுவ மைதானத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் போட்டிகளில் கலந்து கொள்ள சென்ற மாணவர்கள் மைதானத்தில் அடிப்படை வசதியின்றி பாரிய சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
கினிகத்தேன அம்பகமுவ சிங்கள பாடசாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கழிவறை வசதிகளோ குடிநீர் வசதிகளோ இல்லாத நிலையில் இவ்வாறான போட்டிகளை நடத்துகின்றமையினால்
மாணவர்களும் ஆசிரியர்களும் பாரிய அளவிலான அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் இல்லாத விளையாட்டு மைதானத்தில் வலய மட்ட விளையாட்டு போட்டிகள் நடத்துவது சம்பந்தமாக ஹட்டன் கல்வி வலய அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தும் படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.










