• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 6, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

நீதித்துறையின் பேச்சாளராக மாறிவிட்டாராம் ஜனாதிபதி.!

Mathavi by Mathavi
May 6, 2026
in இலங்கை செய்திகள்.
0
நீதித்துறையின் பேச்சாளராக மாறிவிட்டாராம் ஜனாதிபதி.!
Share on FacebookShare on Twitter

தற்போதைய அரசு நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதோடு, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து வருகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களுக்கிடையிலான அதிகாரப் பகிர்வு சீர்குலைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றச் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி முன்கூட்டியே எதிர்வுகூறல்களைக் கூறி வருகின்றார். அவர் நாட்டின் ஜனாதிபதியா? அல்லது நீதித்துறையின் பிரதான ஊடகப் பேச்சாளரா? என்ற சந்தேகம் எழுகின்றது.

நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி வர்ணனையாளராகச் செயற்படுவது நீதித்துறையை அவமதிக்கும் செயலாகும்.

நீதிபதிகளின் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளை வழங்காமல் இந்த அரசு இழுத்தடிப்பு செய்து வருகின்றது.” – என்றார்.

மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் அரசு முன்னெடுக்கும் பொருளாதாரக் கொள்கைகளை அவர் கடுமையாக விமர்சித்தார்.

“வரி வலை விரிவுபடுத்தப்பட்டதன் மூலம் மக்கள் வறுமையின் உச்சத்துக்கே தள்ளப்பட்டுள்ளனர்.

முதியோர்களின் சேமிப்புகளுக்கு வழங்கப்பட்ட 15 வீத வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாரிய அளவில் பாதித்துள்ளது.” – என்றார்.

அரசு மக்களுடன் கொண்டுள்ள சமூக ஒப்பந்தத்தை மீறிச் செயற்படுகின்றது என்று தெரிவித்த சஜித் பிரேமதாஸ, “மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை உறுதிப்படுத்துவது அரசின் கடமையாகும். இந்த உடன்படிக்கையை மீறி அரசு தொடர்ந்து செயற்பட்டால், மாற்று அரசு என்ற ரீதியில் எதிர்க்கட்சி மக்களுக்காக வீதியில் இறங்கிப் போராடும்.” – என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

மக்களுக்கு உடனடியாக வரி நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும், நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாத்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

Related Posts

மதுபானசாலை திறப்பதற்கு எதிராக போராட்டம்.!

மதுபானசாலை திறப்பதற்கு எதிராக போராட்டம்.!

by Mathavi
May 6, 2026
0

நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது நோர்வூட் நகரில் புதிதாக ஒரு மதுபானசாலை திறப்பதற்கு எதிராக இன்று 06.05.2026 திகதி காலை 9.00.மணி முதல் 10.30. மணி...

முதலுதவிப் பெட்டிகள் கையளிப்பு.!

முதலுதவிப் பெட்டிகள் கையளிப்பு.!

by Mathavi
May 6, 2026
0

இன்றையதினம் Humedica சர்வதேச தொண்டு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட முதலுதவிப் பெட்டிகள் (First Aid Kits), வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்காக இன்று...

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு நற்செய்தி.!

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு நற்செய்தி.!

by Mathavi
May 6, 2026
0

2025/2026 கல்வியாண்டிற்காக அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள், 2026 செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்....

உறுதியான ஆதரவை முதல்வராகவுள்ள விஜய்யிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.!

உறுதியான ஆதரவை முதல்வராகவுள்ள விஜய்யிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.!

by Mathavi
May 6, 2026
0

கடந்த காலங்களில் தமிழ்நாட்டு மக்களும் தலைவர்களும் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்குப் பெரும் அரணாகத் திகழ்ந்திருந்ததுடன் ஈழ விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்றிருந்த தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்...

மின்சாரக் கட்டணத் திருத்தம்; பொதுமக்களின் கருத்துக்கேட்பு ஆரம்பம்.!

மின்சாரக் கட்டணத் திருத்தம்; பொதுமக்களின் கருத்துக்கேட்பு ஆரம்பம்.!

by Mathavi
May 6, 2026
0

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று (06) நடைபெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று காலை...

அர்ச்சுனாவால் கொ*லை மிரட்டலுக்குள்ளான குடும்பப் பெண்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

மகளை துஷ் – பிரயோகம் செய்த கள்ளக்காதலன்; தாய்க்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

by Mathavi
May 6, 2026
0

தனது கள்ளக்காதலன் மகளை துஷ்பிரயோகம் செய்தமையை மறைத்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட தாய், எதிர்வரும் 13 ஆம் திகதி...

மலையக மக்களின் நில உரிமையை உறுதிப்படுத்துங்கள்.!

மலையக மக்களின் நில உரிமையை உறுதிப்படுத்துங்கள்.!

by Mathavi
May 6, 2026
0

இரத்தினபுரி மாவட்டத்தின் காவத்தை - நீலகாமம் தோட்டத்தில் தொழிலாளர்களின் குடியிருப்பு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,...

சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படும் கோடாவுடன் ஒருவர் கைது.!

பாதாள உலகக் குழு உறுப்பினர் கைது.!

by Mathavi
May 6, 2026
0

வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் நெருங்கிய சகா ஒருவர், 54 ரி-56 ரகத் தோட்டாக்கள் மற்றும் ஒரு மெகசீனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (06)...

கால்வாய் ஒன்றினுள் விழுந்த நபர் உயிரிழப்பு.!

வீட்டின் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!

by Mathavi
May 6, 2026
0

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவில்மட பகுதியில், தனது வீட்டின் பாதுகாப்பு வேலியை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், கிரைண்டர் இயந்திரத்தால் கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளார். நேற்று...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

by Mathavi
May 6, 2026
0

அயன அயல் ஒருங்கல் வலயத்தின் தாக்கத்தின் காரணமாக இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தளம்பல் நிலை ஒன்று விருத்தியடைகின்றது. இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி