யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, படகுப் பயணத்தின் போது கட்டாயமாக அணிய வேண்டிய உயிர்காக்கும் அங்கியை (Life Jacket) அணிய மறுத்து சக பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வழக்கமான படகுப் பயணத்தின் போது, பாதுகாப்பு நடைமுறைகளுக்காக அனைத்துப் பயணிகளும் உயிர்காக்கும் கவசத்தை அணியுமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஏனைய பயணிகள் அதனை அணிந்த போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தமக்கு நீச்சல் தெரியும் எனக் கூறி அதனை அணிய மறுத்துள்ளார்.
இதனால் சுமார் அரை மணித்தியாலத்துக்கு மேலாகப் பயணம் தாமதமடைந்ததுடன், அதிருப்தியடைந்த பயணிகள் மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு பாதுகாப்பு விதிகளுக்கு முன்னுதாரணமாக இருக்குமாறு அவரிடம் சுட்டிக்காட்டினர்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், இறுதியாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உயிர்காக்கும் அங்கியை அணிந்த பின்னரே படகுப் பயணம் தொடரப்பட்டுள்ளது.










