• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 18, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 134ஆவது ஜனன தின நிகழ்வு.!

Mathavi by Mathavi
May 3, 2026
in இலங்கை செய்திகள்., நிகழ்வுகள், மட்டக்களப்பு செய்திகள்
0
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 134ஆவது ஜனன தின நிகழ்வு.!
Share on FacebookShare on Twitter

இலங்கையின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக் கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 134ஆவது ஜனன தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் ஜனன தின நிகழ்வும் சிறப்பு மலர் வெளியீடும் இன்று நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு நகரில் உள்ள நீரூற்றுப் பூங்காவில் உள்ள சுவாமி விபுலானந்தர் திருவுருவச்சிலையருகே மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் தலைமையில் நடைபெற்றது.

சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையுடன் இணைந்து மட்டக்களப்பு மாநகரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர்கள், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையின் தலைவர் க.பாஸ்கரன், செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் யுவன்ராஜன், மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் மு.செல்வராஜா உட்பட அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் ஆசிரயர்கள், மாநகரசபையின் பொதுநூலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதுடன் உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது பாடல் பாடப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டதுடன் இதன்போது இலக்கணம் என்னும் காலாண்டு சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.

இதேநேரம் மட்டக்களப்பு கல்லடி – உப்போடையில் மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள அடிகளாரின் சமாதியில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையினரின் ஒழுங்கமைப்பில் சுவாமி விபுலானந்தரின் 134வது ஜனன தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் இராமகிருஷ்ண மிஷன் உதவி பொறுப்பாளர் சுவாமி உமாதீஸ்வரானந்தா ஜீ மஹராஜ், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை தலைவர் க.பாஸ்கரன், பொதுச் செயலாளர் ச.ஜெயராஜா, மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளன தலைவர் முத்துக்குமார் செல்வராசா, அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அடிகளாரது சமாதியில் மலர் மாலை அணிவித்து, பூக்கள் தூவி, “வெள்ளை நிற மல்லிகையோ” பாடல் பாடி ஜனன தின நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்து இன்றுடன் 134 வருடங்கள் ஆகின்றன. 1892 ஆம் வருடம் வைகாசி மாதம் 03 ஆம் திகதி காரைதீவில் சாமித்தம்பி, கண்ணம்மை தம்பதியினருக்கு மயில்வாகனம் எனும் இயற்பெயருடைய சுவாமி விபுலானந்தர் அவதரித்தார்.

சாதாரண மானுடரால் சாதிக்க இயலாத பல செயற்பாடுகளை தனது முயற்சியால் சாதித்து காட்டிய மகான் சுவாமி விபுலானந்த அடிகளார். கல்வி, சமயம் மற்றும் சமூகப் பணிகளில் சுயநலம் இன்றி தன்னை அர்ப்பணித்து சேவை செய்தார்.

மட்டக்களப்பு கல்லடி – உப்போடையில் சிவானந்த வித்தியாலயம் என்ற ஆண்கள் பாடசாலை, திருமலை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் ஆங்கிலக் கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம், என்பன அவர் நிறுவிய கல்வி நிறுவனங்களாகும்.

தலைநகர் கொழும்பில் தமிழ்ப் பள்ளிக்கூடம் இல்லாத குறையைப் போக்க விவேகானந்த வித்தியாலயத்தைத் தொடங்கினார். ஒரு சமூகத்துறவி நிறுவிய கல்விச் சாலைகள் அவை. அத்துடன் கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, முதலிய இடங்களில் இராமகிருஷ்ண ஆச்சிரமங்களை நிறுவினார்.

கிழக்கிலங்கையில் அவதரித்து உலகின் முதல் தமிழ் பேராசிரியராக உயர்ந்த மாபெரும் ஆளுமையான சுவாமிகள் எமது சமூகம் மேற்கத்தேய கலாசாரத்தில் மூழ்கியபோது அதனை மீட்டெடுத்து நெறிப்படுத்தியவர் என்பதுடன், ஏழைகளின் வாழ்வில் கல்வி எனும் ஒளி ஏற்றிய கலங்கரை விளக்கமாக திகழ்ந்தார்.

Related Posts

காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு தங்கம் கடத்த முயற்சி – 26 பேர் கைது

by selvan
June 17, 2026
0

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து, கப்பல் ஊடாக தங்கம் கடத்துவதற்கு முயற்சித்ததாக கூறப்படும் சுமார் 26 பேரின் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.இந்திய பிரஜைகள் இருவரிடம் தலா 100 கிராம்...

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு சத்தியலிங்கம் எம்பி விஜயம் !

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு சத்தியலிங்கம் எம்பி விஜயம் !

by selvan
June 17, 2026
0

யாழ்ப்பாணம், மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று விஜயம் செய்திருந்தார். இதன்போது முன்னாள் வடக்கு...

செம்மணி இந்து மயானத்தை தமிழன அழிப்பின் நினைவகமாக பேணுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது

செம்மணி இந்து மயானத்தை தமிழன அழிப்பின் நினைவகமாக பேணுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது

by selvan
June 17, 2026
0

செம்மணி சித்துபாத்தி இந்து மயானம் தமிழன அழிப்பின் நினைவகமாக பேணும் முன்மொழிவு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரனால் இன்றைய சபை அமர்வில் முன்மொழியப்பட்டது. குறித்த முன்மொழிவினை...

மன்னாரில் வெளிநாட்டு உயர்கல்வி வழிகாட்டல் மையம் திறந்துவைப்பு

மன்னாரில் வெளிநாட்டு உயர்கல்வி வழிகாட்டல் மையம் திறந்துவைப்பு

by selvan
June 17, 2026
0

வெளிநாடுகளில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் இளைஞர், யுவதிகளுக்கான வழிகாட்டல் மையமான இன்சிவ் குளோபல் பிரைவேட் நிறுவனம்  மன்னாரில்  நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.மன்னார் தொலைத்தொடர்பு நிலையத்திற்கு...

காங்கேசன்துறையிலிருந்து கப்பலில் இந்தியா புறப்படத் தயாரான 26 பயணிகள் தடுத்துவைப்பு!

காங்கேசன்துறையிலிருந்து கப்பலில் இந்தியா புறப்படத் தயாரான 26 பயணிகள் தடுத்துவைப்பு!

by selvan
June 17, 2026
0

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இன்று இந்தியா - நாகப்பட்டினம் நோக்கிப் பயணிக்கவிருந்த பயணிகளில் 26 பேர் கடைசி நேரத்தில் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.தடுத்து வைக்கப்பட்டுள்ள...

யோஷித ராஜபக்ஷவைப் பிணையில் விடுதலை

யோஷித ராஜபக்ஷவைப் பிணையில் விடுதலை

by selvan
June 17, 2026
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களைப் புலனாய்வு செய்யும்...

வரிச்சலுகை நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலை அசாதாரணமாக அதிகரிக்கும்!

வரிச்சலுகை நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலை அசாதாரணமாக அதிகரிக்கும்!

by selvan
June 17, 2026
0

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்திய வாகனங்களுக்கான 15 சதவீத வரிச்சலுகை நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலைகள் சாதாரண நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவுக்கு மிக மோசமாக...

தன்மீது பிழை இல்லை என்றால் கோட்டா ஏன் நீதிமன்றுக்கு ஓட வேண்டும்?

by selvan
June 17, 2026
0

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் தற்போதைய அரசின் தலையீடுகள் எதுவுமே இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜீத் இந்திக்க தெரிவித்தார்.இன்று...

முல்லைத்தீவின் தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடியேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்!

முல்லைத்தீவின் தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடியேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்!

by selvan
June 17, 2026
0

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்களையும், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏ.சி.பாம் கிராமமக்களையும் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு...

மலையக புகையிரதப் பாதையை புனரமைக்கும் பணிகள் தீவிரம்.!

ஆரம்பிக்கப்படவுள்ள நானுஓயா – பதுளை புகையிரத சேவைகள்.!

by Mathavi
June 17, 2026
0

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா புயலின் பின்னர் மலையக மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தடைப்பட்டிருந்தது. ஆறு மாதங்களாக தடை பட்டிருந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி