தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைப்போம் என கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு முன் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அரசாங்கத்தின் பலவீனமான நிர்வாகத்தினால் எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், எதிர்வரும் காலங்களில் மின்சாரக் கட்டணமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை கேள்விக்குறியாகியுள்ளது என்றும், சர்வதேச நெருக்கடிகளை சமாளிக்க அரசாங்கத்திடம் தெளிவான திட்டங்கள் இல்லை என்றும் தெரிவித்தார்.
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை சிதைந்துள்ளதாகவும், புதிய மக்கள் நல ஆட்சியை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.










