கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றிய இளைஞர்கள் இருவர், பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அதிவேகமாகச் சென்றமையால் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் சென்ற மோட்டார் கிரைண்டர் வகை வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 18 வயதுடைய தியாகராசா விக்கினேஸ்வரன் மற்றும் 19 வயதுடைய ஜெரின் கனிஸ்ரன் ஆகியோர் பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Related Posts
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு அஞ்சி சுரேஷ் சலே பச்சிளம் குழந்தை போல் நடிக்கவே கூடாது.!
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மீது தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய விசாரணைகள் மிகவும் சரியானது என்றும், அது தங்குதடையின்றி தொடர வேண்டும்...
குற்றங்களை அடியோடு ஒழிக்க பொலிஸாரும் மக்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.!
பொலிஸார் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் செயலாற்ற வேண்டும் எனவும், பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் வடக்கு மாகாண...
டெங்கு அபாயம் நாட்டில் தீவிரம்.!
இலங்கையில் இவ்வருடம் இதுவரை இனங்காணப்பட்டுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வடைந்துள்ளது என்று...
இராட்சத அலையில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!
களுத்துறை - அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகல்ல கடற்கரைப் பகுதியில் நண்பர்களுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக இராட்சத அலையில் சிக்கி நீரில் மூழ்கி...
ஜனாதிபதியின் தொலைநோக்கு தலைமையால் இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை.!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் பாய் இன்ஷான் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது....
‘டித்வா’ புயல் பாதிப்பிலிருந்து கல்வித்துறையை மீட்க தீவிரம்.!
'டித்வா' சூறாவளியால் நாட்டின் கல்வித்துறைக்கு ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கான தற்போதைய கூட்டு முயற்சிகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக யுனிசெப் அமைப்பின் உயர் மட்டப் பிரதிநிதிகள் குழுவினர்...
சுகாதாரத்துறை வெற்றிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கைகள்.!
நாட்டின் சுகாதாரச் சேவையை மிகவும் வினைத்திறனான முறையில் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்குப் போதியளவான மனித வளம் இல்லாமையே தற்போதைய பிரதான சவாலாகக் காணப்படுகின்றது என்றும், இதனால் சுகாதாரத்...
சற்றுமுன் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வெடித்த போராட்டம்.!
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் (15) 36 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி இன்றைய தினம் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவும்...
மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு.!
அலவ்வ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலவ்வ நகரில் உள்ள காணி ஒன்றுக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அலவ்வ பகுதியைச்...
சுரேஷ் சலேவை விசாரியுங்கள் ஆனால் பழிவாங்க வேண்டாம்.!
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், எனினும் விசாரணை என்ற பெயரில் எவரையும் பழிவாங்கவோ...










