திருக்கோவில் பிரதேசத்தில் மகளிர் தின நிகழ்வும் கௌரவிப்பு நிகழ்வும் மிக சிறப்பாக இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் திருக்கோவில் 01 அன்னை சாரதா தேவி பெண்கள் அபிவிருத்தின் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்த்தின் தலைவி V.சுந்தரிஸ்வரி அவர்களின் தலைமையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பெண் அதிகாரி கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. குறித்த கௌரவமானது திருக்கோவில் பிரதேச செயலகத்தில் மகளிர் பிரிவில் நீண்ட காலமாக எமது பிரதேசத்தில் கடமையும் சேவைகளும் ஆற்றி இடமாற்றம் பெற்று செல்லும் மகளிர் அபிவிருத்தி உத்தியோத்தர் திரு.k.கலைவதனி அவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் நிகழ்வில் அவர் பொன்னாடை மற்றும் நினைவுசின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
குறித்த நிழ்வில் சங்க உறுப்பினர்களின் கவிதை மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
மேலும் இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோத்தர் M.சங்கவி மற்றும் சிறுவர் பெண்களுக்கான உளவள ஆலோசகர் M.I.பஸ்மியா அன்னை சாரதாதேவி பெண்கள் அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.













