முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் ஒளிரும் வாழ்வு அமைப்பினரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று (13.01.2026) சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது ஒளிரும் வாழ்வு அமைப்பினால் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைப்பினரால் விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் பற்றியும் அமைப்பின் தேவைப்பாடுகள் மற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளின் வளமான எதிர்காலத்திற்காக விசேடமாக உருவாக்கப்பட்டு செயற்பட்டுவரும் இந்த அமைப்பின் தேவைப்பாடுகளை உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்ப்பதற்கு தாம் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
மேற்படி சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், அமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி. சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா, ஒளிரும் வாழ்வு அமைப்பின் தலைவர், நிர்வாக உறுப்பினர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.














