கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
பலர் காணாமல்போயுள்ளதாகவும் தெரியவருகிறது.பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இலங்கையில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையை அடுத்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக அபேவர்தன கூறுகையில்,
பதுளை மாவட்டத்தில் பதிவான ஆறு நிலச்சரிவு சம்பவங்களில் சுமார் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளனர்.நேற்று (26) நிலவிய மோசமான வானிலை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் பல நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை நிவாரணக் குழுக்கள் தொடர்கின்றன என தெரிவித்துள்ளார்.

Related Posts
புதிய தாதியர் நியமனங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் மேலும் 2,867 புதிய தாதியர் நியமனங்கள் வழங்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற...
மின்வெட்டு தொடர்பில் சஜித்தின் குற்றச்சாட்டு
மின்வெட்டுக்கு முதலில் ஒரு குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் அதனை கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்....
நிறைவுக்கு வரும் சிவனடி பாத மலை யாத்திரைக் காலம்.
2025/2026 சிவனடி பாத மலை பருவ காலம் கடந்து 2025 டிசம்பர் மாதம் பௌர்ணமி நாளில் ஆரம்பமானது. தொடர்ந்து ஆறு மாதங்களாக இப் பருவகாலம் இடம் பெற்று...
வெள்ளவத்தையில் புகையிரதத்தில் மோதி பெண் ஒருவர் பலி!
கொழும்பு வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த...
தற்போதைய அரசு தமக்கு நெருக்கமான ஒரு சில குழுக்களுக்குச் சாதகமாகவே செயற்படுகிறது!
தற்போதைய அரசு தமக்கு அரசியல் ரீதியாக நெருக்கமான ஒரு சில குறிப்பிட்ட வணிகக் குழுக்களுக்குச் சாதகமாகவே தொடர்ந்து அநாவசிய முடிவுகளை எடுத்து வருகின்றது" என ஸ்ரீலங்கா பொதுஜன...
பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாது!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் விலையை உயர்த்திய போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது...
சூரிய மின் உற்பத்தித் தகடுகளை செயலிழக்கச் செய்யுமாறு கோரிக்கை
திடீர் மின் தடை ஏற்படுவதைத் தவிர்த்து, மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணும் நோக்கில், இன்றைய தினமும் (31) முற்பகல் 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி...
முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு தீர்மானம்!
எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, கட்டண...
பருத்தித்துறை கடலில் காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடுவதற்கு இந்தியாவின் உதவி கோரப்பட்டுள்ளது!
பருத்தித்துறை கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடுவதற்கு இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில்...
கட்டிலில் இருந்து தவறி விழுந்த குழந்தை மரணம்!
அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் பெற்றோருடன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று, எதிர்பாராதவிதமாகக் கட்டிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இந்தத் துயரச்...










