மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நன்மைகள் நடக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு கதவை தட்டும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் அடைய நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். நிதி நிலைமை சீராகும் நாள். இறைவனின் பரிபூரண அருள் கிடைக்க கூடிய நாள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளை குறைக்க வேண்டும். சேமிப்பை உயர்த்த கூடுதல் முயற்சிகளை போடுங்கள். விலைக்கழிவில் எந்தப் ஒரு பொருளையும் வாங்காதீர்கள். முதலீட்டின் போது கவனமாக இருக்க வேண்டும். கூடுமானவரை இன்று கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனை வேண்டாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். நீண்ட தூரப் பயணங்கள் நன்மையாக அமையும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இறை வழிபாடு செய்வதில் மன நிம்மதி கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சவால் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் உங்களால் முழு கவனத்தை செலுத்த முடியாது. நேரத்தை வீணடிக்காதீர்கள். சுறுசுறுப்பாக இருந்து, கடமையில் கண்ணும் கருத்தோடு இருந்தால் மட்டும்தான், இந்த நாள் இனிய நாளாக அமையும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பு இருக்கும். திறமை வெளிப்படும். விவேகத்துடன் நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தன்மானத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சுய கௌரவத்தோடு வாழ வேண்டும் என்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். புது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். நீண்ட தூரப் பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். இஷ்ட தெய்வ வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும். காரிய தடையை விளக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிம்மதியான நாளாக இருக்கும். வேலைகள் எல்லாம் அந்தந்த நேரத்தில் சரியாக நடந்து முடியும். கொடுத்த வாக்கை சரியாக நிறைவேற்றி விடுவீர்கள். மன அமைதி அடைவீர்கள். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அவசரம் இருக்கக் கூடாது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பொறுமையாக சிந்தித்து செயல்பட வேண்டும். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உணவு கட்டுப்பாடு இருக்கட்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று காதல் வெளிப்படும் நாள். மனதிற்கு பிடித்த நபரை சந்திப்பீர்கள். உங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணையை அமைத்துக் கொள்ள நிறைய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய தடைகள் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை சுபசெலவை ஏற்படுத்தும். வேலையிலும் வியாபாரத்திலும் உற்சாகமாக இருப்பீர்கள். கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் குடும்பத்தில் குதூகலம் குறையாது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த குழப்பம் குறையும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். அடமானத்தில் இருந்த பொருளை மீட்பதற்கு உண்டான வழி கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரச்சினைகள் தீரும். மனதிற்குள் சந்தோசம் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். இறை வழிபாடு செய்வது மனதிற்கு நிறைவை கொடுக்கும்.


