• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 24, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

யாழில் இடம்பெற்ற உலக குடியிருப்பு தின நிகழ்வு!

admin by admin
October 3, 2025
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
யாழில் இடம்பெற்ற உலக குடியிருப்பு தின நிகழ்வு!
Share on FacebookShare on Twitter

உலக குடியிருப்பு தினம் இன்றைய தினம் (03) காலை 09.30 மணிக்கு பிரதம விருந்தினராக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரனின் பங்குபற்றுதலுடன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான கெளரவ சண்முகநாதன் சிறீபவானந்தராஜா, கருணாநாதன் இளங்குமரன் மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் பணிப்பாளர் திருமதி டி. எல். டீபானி பிரியங்கா மற்றும் பிரதி திட்டப் பணிப்பாளர் திருமதி பிரியங்கா செனிவிரட்ன ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இன்றைய நிகழ்விற்கு வருகை தந்த கெளரவ அமைச்சர், கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள், பொதுமக்கள் அனைவரையும் வரவேற்றதுடன், ஒக்டோபர் 06 ஆம் தினம் உலக குடியிருப்பு தினத்தினை நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுடன் இணைந்து மாவட்டச் செயலகம் இந்நிகழ்வினை நடாத்தி வருவதாகவும், அரசாங்கமானது யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டுவருவதற்கு அமைய மேற்படி அமைச்சு இவ்வாண்டு 1259 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்னும் 19603 வீடுகளின் தேவைப்பாடுகள் உள்ளதாகவும், கெளரவ கடற்றொழி்ல் அமைச்சர் அவர்களின் சிபாரிசுக்கு அமைய, அமைச்சரவையினால் 10 இலட்சம் பெறுமதியான வீடமைப்பு திட்டமானது 15 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், 06 பெறுமதியான வீடமைப்பு திட்டமானது 09 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 620 வீடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்து இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மேலும் கடற்றொழி்ல் அமைச்சர் அவர்களிடம் ஒரு கோரிக்கையினை முன்வைப்பதாகவும், அந்தவகையில் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய தீவுகளில் வீடமைப்புத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது போக்குவரத்துச் செலவு அதிகமாகவுள்ளதாகவும், அதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருவதாகவும், ஆதலால் கடல் போக்குவரத்துக்கு ஏற்ப ஒதுக்கீட்டு தொகையினை அதிகரித்து வழங்குவதற்கு கெளரவ அமைச்சர் அவர்கள் ஆவன செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தமதுரையில், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 40 வீதமான வீடுகள் கொட்டில்களாக இருந்ததாகவும், தற்போது படிப்படியாக மாறி வந்தாலும் அது முழுமை பெறவில்லை எனவும், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, விசேடமாக வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் செயற்றிட்டம் உள்ளதால், மேலும் பல வீடமைப்பு திட்டங்கள் வழங்கப்படும் எனவும், எமது அரசாங்கத்தினால் வீடமைப்புத் திட்ட நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், வீதி, குளங்கள் இறங்குதுறை என்பனவும் அபிவிருத்தி செய்யப்படும் எனவும், எமது அரசாங்கத்தினால் துரித அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், நாளைய தினம் குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்திக்கு அடிக்கல் நாட்டப்படும் எனவும், அதற்கு போக்குவரத்து நெடுச்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் வருகை தரவுள்ளதாகவும் தெரிவித்ததுடன், கொழும்புத்துறை இறங்குதுறை அபிவிருத்தி, பரந்தன் இரசாயன தொழிற்சாலையினை மீளச் செயற்படுத்தல் மற்றும் முதலீட்டு வலயம் போன்ற அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார்.

போதைப்பொருள் மற்றும் வாள்வெட்டு ஆகியவற்றை முற்றாக ஓழிக்க அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், பொருளாதார ரீதியாக எமது நாடு தற்போது முன்னேறி வருவதாகவும், டொலரின் பெறுமதி சீராகவுள்ளதாகவும் கெளரவ அமைச்சரால் மேலும் தெரிவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பயனாளிகளுக்கான வீடமைப்புத் திட்டத்தினை பெற்றுக் கொண்டமைக்கான சான்றிதழ்களும், தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அமைச்சின் பிரதி திட்டப் பணிப்பாளர் திருமதி பிரியங்கா செனவிரத்தின, மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதம பொறியியலாளர் திரு க. திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பிரதேச செயலாளர்கள், மீள்குடியேற்ற கிளை மற்றும் காணிக்கிளை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக வீடமைப்பு திட்ட விடய அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Posts

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து.!

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து.!

by Mathavi
June 24, 2026
0

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் இன்று புதன்கிழமை மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாகப் பெருமளவிலான சொத்துக்களுக்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதி முழுவதும்...

கொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு.!

கொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு.!

by Mathavi
June 24, 2026
0

கொழும்பின் புறநகர் பகுதிகளில் இன்று புதன்கிழமை இரவு 8 மணி முதல் நாளை வியாழக்கிழமை இரவு 8 மணி வரை 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று...

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு; பேருந்து விபத்து.!

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு; பேருந்து விபத்து.!

by Mathavi
June 24, 2026
0

அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று வெல்லம்பிட்டி பகுதியில் இன்று (24) அதிகாலை 5.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர்...

பொலிஸாருக்கு எதிராக வெடித்த போராட்டம்.!

பொலிஸாருக்கு எதிராக வெடித்த போராட்டம்.!

by Mathavi
June 24, 2026
0

கடந்த 22.06.2026 அன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக மோட்டார் சைக்கிளினை செலுத்திய ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வீதி விபத்தில்...

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி பாதசாரி உயிரிழப்பு.!

by Mathavi
June 24, 2026
0

புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தளம் - குருநாகல் வீதியில், புத்தளம் நகருக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்....

சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் வாழ்த்து.!

சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் வாழ்த்து.!

by Mathavi
June 24, 2026
0

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்கள் உட்பட அனைவருக்கும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்...

காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான மாணவர் ஆட்சேர்ப்பு ஆரம்பம்.!

காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான மாணவர் ஆட்சேர்ப்பு ஆரம்பம்.!

by Mathavi
June 24, 2026
0

இலங்கையின் திறன் மேம்பாட்டு துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் தொழிற்பயிற்சி அதிகார சபை (VTA), காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர் ஆட்சேர்ப்புக்கான...

காரில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்; பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி கைது.!

காரில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்; பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி கைது.!

by Mathavi
June 24, 2026
0

தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன்,...

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்.!

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்.!

by Mathavi
June 24, 2026
0

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணியளவில் மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி.சோசை அடிகளார், மற்றும்...

ராஜபக்ஷ குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டி அரசின் ஒற்றை நோக்கம்.!

ராஜபக்ஷ குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டி அரசின் ஒற்றை நோக்கம்.!

by Mathavi
June 24, 2026
0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசால், ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைவரும் திட்டமிட்ட முறையில் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி