• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 24, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

காரில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்; பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி கைது.!

Mathavi by Mathavi
June 24, 2026
in இலங்கை செய்திகள்.
0
காரில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்; பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி கைது.!
Share on FacebookShare on Twitter

தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன், அவரது மனைவி ஆகியோர் அவர்களது குழந்தையுடன் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று தம்பதியினர் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம், சாவகச்சேரி நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும் வலான ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளும் இணைந்து இன்று (24) அதிகாலை நடத்திய கூட்டு நடவடிக்கையின் மூலம் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்படும் போது பிரதான சந்தேகநபர் முகக்கவசம் அணிந்திருந்ததுடன், அவரது மனைவி முஸ்லிம் பெண் போன்று வேடமணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, தான் வவுனியாவிலிருந்து குருநாகலுக்குச் சென்று, அங்குள்ள தனது மற்ற இரு பிள்ளைகளையும் பார்த்துவிட்டு பொலிஸாரிடம் சரணடையவிருந்ததாகக் கூறியுள்ளார்.

வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படையின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல அவர்களின் முழுமையான மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சந்தேகநபர்கள் கடந்த சில நாட்களாக நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் தங்கியிருந்ததுடன், கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இவ்வாறு உயிரிழந்தவர் அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றி வந்த 34 வயதுடைய ஷம்யா தர்ஷனி என்ற இயல் வைத்தியர் ஆவார். இவருடைய காதலன் சடலத்தைக் காரில் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான காதலன் கன்னொருவ பகுதியைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியியலாளர் ஆவார். சம்பவம் நடந்த நேரத்தில் அவர் அப்பகுதியிலிருந்து தப்பியோடியிருந்தார்.

தனது சகோதரி நுவரெலியாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருப்பதாகவும், அவர் பல நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை என்பதால் அந்த இடத்தை சோதனையிட உதவி தேவை என்றும் கூறி, கொட்டவெவ, தலாவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 17ஆம் திகதி காலை நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதன்படி நுவரெலியா பொலிஸ் குழுவினர் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்று சோதனையிட்ட போது அங்கு யாரும் இருக்கவில்லை.

எனினும், அங்குள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பரிசோதித்த போது, கடந்த 16ஆம் திகதி இரவு 9.50 மணியளவில் குறித்த யுவதியின் காதலன் அந்த வீட்டிற்கு வருவது பதிவாகியிருந்தது.

அங்கு சுமார் 40 நிமிடங்கள் தங்கியிருந்த அவர், பின்னர் இரவு 10.30 மணியளவில் மயக்கமடைந்திருந்த யுவதியைத் தூக்கிக்கொண்டு வெளியேறியுள்ளார். அதன் பின்னர் அவர் அந்த யுவதியைக் காரில் ஏற்றிச் சென்றுள்ளார்.

Related Posts

காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான மாணவர் ஆட்சேர்ப்பு ஆரம்பம்.!

காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான மாணவர் ஆட்சேர்ப்பு ஆரம்பம்.!

by Mathavi
June 24, 2026
0

இலங்கையின் திறன் மேம்பாட்டு துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் தொழிற்பயிற்சி அதிகார சபை (VTA), காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர் ஆட்சேர்ப்புக்கான...

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்.!

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்.!

by Mathavi
June 24, 2026
0

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணியளவில் மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி.சோசை அடிகளார், மற்றும்...

ராஜபக்ஷ குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டி அரசின் ஒற்றை நோக்கம்.!

ராஜபக்ஷ குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டி அரசின் ஒற்றை நோக்கம்.!

by Mathavi
June 24, 2026
0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசால், ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைவரும் திட்டமிட்ட முறையில் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் காணிப் பிரச்சினைக்கு முடிவில்லை.!

போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் காணிப் பிரச்சினைக்கு முடிவில்லை.!

by Mathavi
June 24, 2026
0

"போர் முடிந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் எங்கள் மக்களின் காணிப் பிரச்சினைகளை எவ்வளவு காலத்துக்கு நாம் இழுத்தடிக்கப் போகின்றோம்? பாதிக்கப்பட்டவர்கள் எமது முல்லைத்தீவு மக்கள் என்ற...

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
June 24, 2026
0

காலி - பொத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாக்வெல்ல பாலத்திற்கு அருகிலுள்ள ஜின் கங்கையில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் பொத்தல பொலிஸார்...

போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது.!

by Mathavi
June 24, 2026
0

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 36 கிலோ கிராம் ‘ஹஷிஸ்’ போதைப்பொருளுடன் 18 வயதுடைய யுவதி ஒருவர் இலங்கை சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது...

அமெரிக்கா நன்கொடையாக வழங்கிய உலங்கு வானூர்திகள் விமானப்படையில் இணைப்பு.!

அமெரிக்கா நன்கொடையாக வழங்கிய உலங்கு வானூர்திகள் விமானப்படையில் இணைப்பு.!

by Mathavi
June 24, 2026
0

இலங்கை விமானப்படையின் விமானிகள் பயிற்சித் திறனை மேம்படுத்துவதற்கும், வான்படைச் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் ஏதுவாக அமெரிக்க அரசால் நன்கொடையாக வழங்கப்பட்ட ரி.எச். 57 'சீ ரேஞ்சர்' ரக...

பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த வருடத்துக்குள் நீக்கப்படும்.!

பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த வருடத்துக்குள் நீக்கப்படும்.!

by Mathavi
June 24, 2026
0

புதிய அரசமைப்பை இயற்றும் விடயத்துக்குத் தற்போதைய சூழலில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டாலும், நாட்டில் புதிய அரசமைப்பு ஒன்று நிச்சயம் உருவாக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது...

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு செம்மணியே ஆவணம்.!

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு செம்மணியே ஆவணம்.!

by Mathavi
June 24, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள், தமிழ் மக்களுக்கு எதிராகக் காலம் காலமாக அரங்கேற்றப்பட்ட அநீதிகளையும் இனப்படுகொலைகளையும் சர்வதேச ரீதியில்...

செம்மணியில் ஒரே நாளில் 19 எலும்புக்கூடுகள் மீட்பு.!

செம்மணியில் ஒரே நாளில் 19 எலும்புக்கூடுகள் மீட்பு.!

by Mathavi
June 24, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 3 சிறுவர்களுடையது உட்பட ஒரே நாளில் மிக அதிகளவாக 19 மனித...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி