• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 19, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் சாத்தியம்!

admin by admin
October 1, 2025
in இலங்கை செய்திகள்.
0
இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் சாத்தியம்!
Share on FacebookShare on Twitter

பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை எதிர்வரும் 6 அல்லது 7 ஆம் திகதி பேரவையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் இப்பிரேரணையானது எதிர்வரும் 6 ஆம் அல்லது 7 ஆம் திகதி பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமாத்திரமன்றி இப்பிரேரணையை தாம் முற்றாக நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தாலும், அப்பிரேரணையை நிறைவேற்றுவதற்கு வாக்கெடுப்பை கோராதிருக்கத் தீர்மானித்திருப்பதாகவும் அறியமுடிகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின்போது நிறைவேற்றும் விதமாக பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் முதலாவது வரைவு கடந்த மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அப்பிரேரணை தொடர்பில் கடந்த மாத நடுப்பகுதியில் நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர், தமது மாற்று அபிப்பிராயங்களை முன்வைத்திருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை முதலாம் கட்ட மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, திருத்தங்கள் உள்வாங்கப்பட்ட பிரேரணை கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டது.

அதன்படி இத்திருத்தப் பிரேரணையில் மோதல்கள் என்ற சொல்லின் ஊடாக இனப்பிரச்சினை எனும் சொற்பதம் பதிலீடு செய்யப்பட்டிருப்பதுடன் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட சட்டவாதியின் பங்கேற்புடனான பிரத்யேக நீதித்துறை பொறிமுறையொன்றை நிறுவுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்த விடயம் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இப்பிரேரணையானது எதிர்வரும் 6 ஆம் அல்லது 7 ஆம் திகதி பேரவையில் சமர்ப்பட்டு நிறைவேற்றப்படும் என உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமாத்திரமன்றி இப்பிரேரணையை தாம் முற்றாக நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தாலும், அப்பிரேரணையை நிறைவேற்றுவதற்கு வாக்கெடுப்பை கோராதிருக்கத் தீர்மானித்திருப்பதாகவும் அறியமுடிகின்றது.

Related Posts

புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகளுக்கான இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை.!

புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகளுக்கான இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை.!

by Mathavi
May 19, 2026
0

வட மாகாணத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலை மற்றும் படகுகளுக்கான இழப்பீடுகள், அதேபோன்று அதன் சேதாரங்களை சரி செய்வதற்கான செயற்பாடுகளும் நடைபெற்று வருவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின்...

கபில சந்திரசேனவின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகள் தொடர்பில் வெளியான தகவல்.!

கபில சந்திரசேனவின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகள் தொடர்பில் வெளியான தகவல்.!

by Mathavi
May 19, 2026
0

மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன வசித்து வந்த வீட்டில் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

இளம் குடும்பஸ்தர் கொ*லை.!

by Mathavi
May 19, 2026
0

இரத்தினபுரி, எஹெலியகொட - பொல்வத்தை கடை சந்திப்புக்கு அருகில் நபரொருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் அவிசாவளையைச் சேர்ந்த நுவன்...

எரிபொருள் விநியோகத்துக்கான கியூ.ஆர் குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு.!

எரிபொருள் விநியோகத்துக்கான கியூ.ஆர் குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு.!

by Mathavi
May 19, 2026
0

எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், எரிபொருள் விநியோகத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில்...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு.!

மண்மேட்டிலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 19, 2026
0

நாவலப்பிட்டிய, பெனிதுடுமுல்ல பகுதியில் நேற்று (18) திங்கட்கிழமை மண்மேடு ஒன்றிலிருந்து கீழே தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பெனிதுடுமுல்ல பகுதியைச் சேர்ந்த 58...

அரச வாடி வீட்டில் வெடிப்புச் சம்பவம்.!

அரச வாடி வீட்டில் வெடிப்புச் சம்பவம்.!

by Mathavi
May 19, 2026
0

கெகிராவ வாடி வீட்டின் சமையலறைக்குள் இன்று (19) காலை வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் அங்கிருந்த நபர் ஒருவர் பலத்த காயமடைந்து தம்புள்ளை ஆதார...

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 19, 2026
0

கடவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹல பியன்வில பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிகளவிலான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பேலியகொட பகுதியைச்...

யாழில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் திடீரென உயிரிழப்பு.!

யாழில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் திடீரென உயிரிழப்பு.!

by Mathavi
May 19, 2026
0

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நபர் ஒருவர், பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார்...

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து!

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து!

by Bharathy
May 19, 2026
0

கொழும்பில் இன்று 19 ஆம் திகதி பிற்பகல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ...

இலங்கை ஊடகவியலாளர் தேசமாணி இர்ஷாத் ரஹ்மத்துல்லாவுக்கு தமிழகத்தின் தங்க மகன் விருது.!

இலங்கை ஊடகவியலாளர் தேசமாணி இர்ஷாத் ரஹ்மத்துல்லாவுக்கு தமிழகத்தின் தங்க மகன் விருது.!

by Mathavi
May 18, 2026
0

தமிழ் கலை மற்றும் பண்பாடு மற்றும் தமிழ் ஊடகத் துறைக்கு சிறப்பான பங்களிப்புகள் மற்றும் அர்ப்பணிப்பான சேவைகளைப் பாராட்டி இலங்கையினை சேர்ந்த ஊடகவியலாளர் தேசமாணி இர்ஷாத் ரஹ்மத்துல்லாவுக்கு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி