வட்டவளை பகுதியில் உள்ள கரோலினா தோட்ட பகுதியில் இருந்து பல பாடசாலைகளுக்கு முன் கூட்டியே பணம் செலுத்தி பெறப்பட்ட பருவகால சீட்டினை வைத்திருக்கும் மாணவர்கள் மற்றும் பணம் செலுத்தி செல்லும் மாணவர்களை ஹட்டன் அரச பேருந்து நிலையத்தால் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் காலை வேளையில் ஏற்றிச் செல்வதில்லை என அப் பகுதியில் இருந்து பல பாடசாலைகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த பேருந்தினை தவறவிடும் பட்சத்தில் காலதாமதமாக பாடசாலைக்கு செல்ல நேரிடும் எனவும் அதிக பணம் செலுத்தி தனியார் பேருந்துகளில் பாடசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என மாணவர்கள் ஹட்டன் டிப்போ அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.
இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் சாரதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.











