• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 17, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இனப் படுகொலையாளர்களை பாதுகாப்பது இன விரிசல்களை ஏற்படுத்தும்!

User3 by User3
August 17, 2025
in இலங்கை செய்திகள்., முக்கிய செய்திகள்
0
இனப் படுகொலையாளர்களை பாதுகாப்பது இன விரிசல்களை ஏற்படுத்தும்!
Share on FacebookShare on Twitter

இனப் படுகொலையாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதும், பாதுகாப்பதும் தமிழ்- முஸ்லிம் இன விரிசல்களையே ஏற்படுத்தும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான  அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (17.08.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொடூர இனப்படுகொலைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கும் அதன் இனப்படுகொலையை ஆதரிக்கும் நேச நாடுகளுக்கு எதிராகவும் நேற்றுமுன்தினம் (15.08.2025) பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு பொரல்லை மலையன சுற்றுவட்டாரத்தில் ஆரம்பித்து கெம்பல் மைதானத்தில் நடந்த எதிர்ப்பு போராட்டம் எதிர்ப்பு கோசத்தோடு முடிவுக்கு வந்தது. இப்போராட்டம் இனப்படுகொலைக்கு முகம் கொடுத்து தொடர் இன அழிப்பிற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழர்களை முகம் சுழிக்க வைத்ததோடு ஆர்ப்பாட்டத்தில் இருந்து வெளியேறும் மனநிலையை உருவாக்கியமை வேதனைகுரியதே.

இலங்கையின் இனப்படுகொலைக்கு முழு மூச்சாக ஆதரவு தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழர்களின் விடுதலை அமைப்பை பாசிச வாத அமைப்பு என்றும், தேசிய தலைவரை பாசிச வாதி எனவும் மேடை கட்டி பேசியவர்கள் கூட்ட முன் வரிசையை அலங்கரித்தோடு மேடை ஏறி வீர வசனம் பேசியமை மட்டுமல்ல நிகழ்வு ஆரம்பம் இலங்கை தேசியக்கொடி திரையில் அசைந்தாட தேசிய கீதத்தோடு ஆரம்பமானது.

இலங்கையில் இன அழிப்பு, இன சுத்திகரிப்பு, இனப்படுகொலை என்பன தேசிய கொடியோடும் தேசிய கீதத்தோடும் நடத்தப்பட்டதோடு அதன் வெற்றியின் அடையாளமாகவே சிங்கள பௌத்த பெரும் தேசிய வாதம் அதனை தம் அடையாளமாக கொண்டுள்ளது.பேரினவாதம் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு முழுமூச்சாக ஆதரவு தெரிவித்து படைக்கு தேவையானவர்களை கிராம புறத்தில் இருந்து திரட்டி கொடுத்து முள்ளிவாய்க்கால் இனபடுகொலையை பாதையில் பால் சோறு சமைத்து தேசிய வெற்றியாக கொண்டாட வைத்து மகிழ்ந்தவர்கள் பாலஸ்தீன மக்கள் முகம் கொடுக்கும் இனப்படுகொலைக்கு எதிரானவர்களாக இருப்பதாக காண்பிப்பது முஸ்லிம்களை தமது அரசியலுக்குள் இழுப்பதற்காகவே அன்றி வேறில்லை.

போராட்ட ஒழுங்கமைப்பினர் போராட்ட பேரணியில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையினை தமது பதாதைகளிலோ கோசங்களிலோ வெளிவராத வகையில் திட்டமிட்டிருந்தனர். இது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொள்ளாத மனநிலை மட்டுமல்ல சிங்கள பௌத்தத்தையும் அதன் காவலர்களையும் இனப் படுகொலையாளர்களையும் பகைத்துக்கொள்ள விரும்பாத அரசியல் என்பதே உண்மை. அது மட்டும் அல்ல தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தையும் அரசியல் அபிலாசைகளையும் மறுக்கும் செயலாகவுமே நாம் கருதுகின்றோம்.

சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு 1948 ல் கிடைத்த சுதந்திரம் இனப்படுகொலைக்கும், இன சுத்திகரிப்பிற்கும், இன அழிப்பிற்குமான சுதந்திரம் என்பது எமது அனுபவம். இன்று பாலஸ்தீனர்கள் சந்திக்கும் இனப்படுகொலைக்கு முன்னர் இந்த நூற்றாண்டு கண்ட மிகப்பெரும் இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது என்பதை முஸ்லிம் உறவுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலை வழி நடத்தி இனப்படுகொலை புரியும் வல்லரசுகளை அன்று தமது அரசியலுக்காக இலங்கை சிங்கள பௌத்த பேரினவாதிகளை வழி நடத்தி பெரும் இனப்படுகொலையோடு ஆயுத யுத்தத்தை மௌனிக்கச் செய்து தமிழர்களை அரசியல் ரீதியில் அங்கவீனமாக்கினர். தொடர்ந்து தமிழர்களின் அரசியலை அழிக்க பெரு முயற்சியை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழர்களை பொறுத்தவரையில் பாலஸ்தீனர்களின் சுதந்திர தேசம் தமிழர்களின் போராட்டத்திற்கான அங்கீகாரமாகும். அதேபோன்று தமிழர்களின் சுதந்திர தாயகம் பாலஸ்தீன மக்களின் சுதந்திர தாகத்திற்கான வெற்றியாகும். இத்தகைய அரசியலை மக்கள் மயப்படுத்தி போராட்டங்களை முன்னெடுத்தல் தமிழ்- முஸ்லிம் உறவை பலப்படுத்தும். மக்கள் விடுதலை போராட்டத்தில் மக்கள் அரசியலாகி மக்களைபெரும் சக்திகளாக கொண்டுவர வேண்டும். 

அதனை விடுத்து இனப்படுகொலையாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதும், இனப்படுகொலையாளர்களை பாதுகாப்பதும் தமிழ்- முஸ்லிம் இன விரிசல்களையே ஏற்படுத்தும் என்பதையும் மிக கவலையோடு கூறுகின்றோம்.

தற்போதைய ஆட்சியாளர்கள் இதற்கு தமிழ் முஸ்லீம் மக்கள் தமக்கு முழுமையான ஆதரவளித்துள்ளனர் என கூறுவது தமிழ் முஸ்லிம் இன உறவுகளை பிரிக்கும் இன அழிப்பை தொடரும் கூற்றாகவே கொள்ளல் வேண்டும். புதிய அரசியல் உறவை பலப்படுத்தி இனப்படுகொலைக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்புவது காலத்தின் அரசியல் தேவையுமாகும் என வலியுறுத்துகின்றோம்.

Tags: jaffnaஇலங்கைசெய்திகள்யாழ்

Related Posts

யாழில் பல இடங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிப்பு.!

யாழில் பல இடங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிப்பு.!

by Mathavi
May 17, 2026
0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் வடக்கு - கிழக்கு எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் நேற்று...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

குடும்பத் தகராறில் தம்பியை கொ*லை செய்த அண்ணன்.!

by Mathavi
May 17, 2026
0

கம்பஹா, கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற குடும்பத் தகராறு ஒன்றின் போது, அண்ணன் தனது தம்பியை வாளால் வெட்டிப் படு கொலை செய்துள்ளார். நேற்று சனிக்கிழமை கந்தானை பகுதியில்...

திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!

திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!

by Mathavi
May 17, 2026
0

தமிழின அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் திருக்கோவில் பிரதேச சபையின் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் சுயேட்சைக்குழு ஏற்பாட்டில்...

போதைப்பொருட்கள் விற்பனை; இருவர் கைது.!

போதைப்பொருட்கள் விற்பனை; இருவர் கைது.!

by Mathavi
May 17, 2026
0

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்தி விநியோகித்த சந்தேக நபர்களை அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு அம்பாறை மாவட்டம் நிந்தவூர்...

உந்துருளி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

பாரவூர்தி மோதி பௌத்த தேரர் உயிரிழப்பு.!

by Mathavi
May 17, 2026
0

பேராதனை - ரஜவத்தை வீதி பகுதியில் நேற்று சனிக்கிழமை (16) பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் பௌத்த தேரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனையிலிருந்து கண்டி நோக்கி...

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான வாகனம்.!

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான வாகனம்.!

by Mathavi
May 17, 2026
0

பொகவந்தலாவையில் இருந்து நுவரெலியா நோக்கி சென்று கொண்டிருந்த வாடகைக் கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானதாக நோர்வூட் பொலிஸார்...

மாணவிகளின் சீருடையில் சிவப்பு மை தெளித்த ஆசிரியர் கைது.!

சட்டவிரோத உந்துருளிகளுடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 17, 2026
0

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 02 உந்துருளிகளைத் தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த...

மஹிந்த மீது கைவைத்தால் அழிவு நிச்சயம்.!

மஹிந்தவின் உயிருக்கு ஆபத்து; பதறுகின்றார் மனோஜ் கமகே.!

by Mathavi
May 17, 2026
0

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்குத் தற்போதைய அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்." -...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

இராணுவ சிப்பாயின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 17, 2026
0

கொழும்பு, ஹோமாகம, பிடிபன தெற்கு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை...

அநுர ஆட்சி தொடர்ந்தால் நாடு மீண்டெழ முடியாத பாதாளத்துக்குச் செல்லும்.!

அநுர ஆட்சி தொடர்ந்தால் நாடு மீண்டெழ முடியாத பாதாளத்துக்குச் செல்லும்.!

by Mathavi
May 17, 2026
0

"அநுர அரசிடம் முறையான பொருளாதாரத் திட்டங்கள் இல்லாததால் நாட்டு மக்கள் மிக வேகமாக வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். இந்த ஆட்சி தொடர்ந்தால், நாடு மீண்டெழ முடியாத...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி