1849
யாழ்ப்பாணம் பதில் மறை மாவட்டம் நிறுவப்பட்டது.
2006
புனித பிலிப் நேரி தேவாலயத் தாக்குதல்: யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் 18 பேர் கொல்லப்பட்டனர், 54 பேர் காயமடைந்தனர்.
2010
இலங்கைத் தமிழ் அகதிகளுடன் எம்வி சன் சீ என்ற தாய்லாந்து சரக்குக் கப்பல் கனடாவின் பிரிட்டிசு கொலம்பியா மாகாணத்தை வந்தடைந்தது. கப்பலில் 380 ஆண்களும், 63 பெண்கள் மற்றும் 49 சிறுவர்களுமாக காணப்பட்டனர்.
1806
செர்பியப் புரட்சி; உதுமானியர்களுக்கு எதிரான மிசார் சமர் ஆரம்பமானது. இரண்டு நாட்களில் செர்பியா வெற்றி பெற்றது.
1814
ஐக்கிய இராச்சியத்துக்கும் ஐக்கிய மாகாணங்களுக்கும் இடையில் லண்டனில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்படி நெப்போலியப் போர்களுக்கு முன்னதாக இருந்த இடச்சுக் குடியேற்றங்கள் அவர்களுக்கே திரும்பத் தரப்பட்டன.
1868
பெருவின் தெற்கே அரிக்கா என்ற இடத்தில் 8.5 – 9.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 25,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனை அடுத்து நிகழ்ந்த ஆழிப்பேரலையினால் அவாய், நியூசிலாந்து வரை சேதங்கள் ஏற்பட்டன.
1889
நாணயங்கள் மூலம் தொலைபேசிகளைக் கட்டுப்படுத்தும் கருவி வில்லியம் கிரே என்பவரால் அமெரிக்காவில் ஹார்ட்பர்ட் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது.
1898
எஸ்ப்பானிய அமெரிக்கப் போர்: எஸ்ப்பானிய அமெரிக்கப் படைகள் மணிலாவில் போரில் ஈடுபட்டன. நகரைப் பிலிப்பீனியக் கிளர்ச்சியாளர்களின் பிடியில் சிக்க விடாமல், எசுப்பானியத் தளபதி அமெரிக்காவிடம் சரணடைந்தார்.
1898
433 ஈரோசு என்ற முதலாவது புவியருகு சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1905
சுவீடனில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக நோர்வே மக்கள் வாக்களித்தனர்.
1913
ஹரி பிறியர்லி என்ற ஆங்கிலேயர் துருவேறா எஃகைக் கண்டுபிடித்தார்.
1918
அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவில் முதல்தடவையாகப் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
1920
போலந்து – சோவியத் போர் வார்சாவாவில் ஆரம்பமாயிற்று. ஆகஸ்ட் 25 இல் முடிவடைந்த இப்போரில் சோவியத் செஞ்சேனை தோற்றது.
1937
இரண்டாம் சீன – ஜப்பானியப் போர்: சாங்காய் சமர் ஆரம்பமானது.
1954
பாகிஸ்தான் வானொலி பாகிஸ்தான் நாட்டுப்பண்ணை முதல் தடவையாக ஒலிபரப்பியது.
1960
மத்திய ஆபிரிக்கக் குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1961
பனிப்போர்: கிழக்கு ஜேர்மனி தனது குடிமக்கள் தப்பிச் செல்லாதவாறு பெர்லினின் கிழக்கு, மேற்கு எல்லையை மூடி பெர்லின் சுவரைக் கட்ட ஆரம்பித்தது.
1964
ஐக்கிய இராச்சியத்தில் கடைசித் தடவையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1968
கிரேக்க அரசுத்தலைவர் கியார்கியசு பப்படப்பவுலசு மீது ஏதன்சு நகரில் கொலைமுயற்சி இடம்பெற்றது.
1969
வட அயர்லாந்தில் இடம்பெற்ற அரசியல், மதக் கலவரங்களை அடக்க பிரித்தானியப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.
1969
அப்பல்லோ 11 விண்வெளிவீரர்கள் நியூயார்க் நகரில் வெற்றி ஊர்வலம் வந்தார்கள்.
1978
லெபனான் உள்நாட்டுப் போரின் இரண்டாம் கட்டமாக பெய்ரூத் நகரில் 150 பாலத்தீனர்கள் தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
2004
156 கொங்கோ துட்சி அகதிகள் புருண்டியில் படுகொலை செய்யப்பட்டனர்.
2004
மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் இடம்பெற்ற அமைதியான அரச எதிர்ப்புப் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.
2004
28ஆவது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்சில் ஆரம்பமாயின.
2008
ரஷ்யப் படைகள் சியார்சியாவின் கோரி நகரைக் கைப்பற்றின.
2015
பகுதாது நகரில் சந்தை ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 76 பேர் உயிரிழந்தனர், 212 பேர் காயமடைந்தனர்.
















