திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் துறைசார் உத்தியோகத்தர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (12) பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வளவாளராக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாசன் சுகுணதாஸ் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அனர்த்த காலங்களின் போது எவ்வகையான சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும், அதனை மக்கள் மத்தியில் எவ்வாறு கொண்டு செல்வது, ஆபத்தை விளைவிக்கக்கூடிய அனர்த்தங்களின்போது முற்காப்பு நடவடிக்கைகள், அனர்த்தங்களின் போதான மற்றும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்து பல விடயங்கள் இதன்போது தெளிவூட்டப்பட்டன.












