முன் கூட்டியே பணம் செலுத்தி ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் பெறப்பட்ட பருவகால சீட்டினை வைத்திருக்கும் கினிகத்தேன பகுதியில் உள்ள பிரபல சிங்கள கினிகத்தேன சென்றல் கொலேஜ், விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயம், அப் பகுதியில் உள்ள ஏனைய பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும் இவ்வாறு இடம்பெற்றுள்ளது.
இது குறித்து பாடசாலை மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில், காலை வேளையில் அரச பேருந்துகள் ஏற்றாமல் செல்வதால் பாடசாலை நேரத்திற்கு செல்ல வேண்டி உள்ளதால் தனியார் பேருந்துகளில் அதிகளவு பணம் கொடுத்து செல்ல வேண்டி உள்ளது எனவும், மாலை வேளையில் பாடசாலை நிறைவு பெற்று 2 மணிக்கு மேல் அவ் வீதியூடாக வரும் அரச பேருந்துகள் ஏற்றாமல் செல்வதால் நடை பயணமாக இல்லங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது எனவும் இதனால் முன்கூட்டியே பணம் கொடுத்து பெற்று கொள்ளப்பட்ட பருவகால சீட்டில் பயன் இல்லை எனவும் கூறுகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கின்றனர்.










