• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 1, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.!

Mathavi by Mathavi
August 3, 2025
in இலங்கை செய்திகள்., முக்கிய செய்திகள், முல்லைத்தீவு செய்திகள்
0
முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.!
Share on FacebookShare on Twitter

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் சிலாவத்தை தெற்கு பகுதியில் இன்று (03) காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதன்போது பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள், மத சுதந்திர மீறல்கள், ஏனைய வன்முறைகள் இடம்பெறாமல் இருப்பதாக இருந்தால் வட கிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி மூன்றாவது நாளாக இன்று சிலாவத்தை பகுதியில் இக் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் தொடர்ச்சியாக 100 நாட்கள் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் குறித்த தரப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தின் இறுதியில் அவர்களது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டது.

இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனைவின் 5வது வருடம்

இலங்கையின் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வே அவசியம்.

1948இற்குப் பின்னரான இலங்கையின் 75வருடகால அரசியல் வரலாற்றில், இனத்துவ அரசியலே மேலோங்கி காணப்படுகிறது. இலங்கை அரசானது சிங்கள பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசாங்கங்களாலும் தலைவர்களாலும் ஆளப்பட்டு வருகிறது. 1908 முதற்கொண்டு ஏனைய தேசிய இனங்களான வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் ஆகியோருக்கு அதிகாரத்தில் உரிய பங்கு வழங்கப்படவில்லை. அரசியல் அதிகாரம் உரிய முறையில் பகிர்ந்துகொள்ளப்படவில்லை. மாறாக மொழி ரீதியான மத ரீதியான அடக்குமுறைகள் மேலோங்கின.

சுந்திரம் கிடைந்து ஒரு வருடம் நிறைவடைவதற்குள் மலையகத் தமிழர்களுக்கு எதிராக 1948ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தமிழர்களுக்கு எதிராக 50களில் கிழக்கிலும், மலையகப் பகுதிகளிலும், தெற்கிலும் மேற்கொள்ளப்பட்ட இன வன்முறைகள், சுதந்திரத்துக்குப் பின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் புறக்கணிக்கப்பட்டமை என இனவாதம் விரிவாகியது. அதன் உச்சமாக 1956இல் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டமானது அரச கட்டமைப்பை சிங்களமாக்கியது. இதுவே வடக்கு கிழக்கு தமிழர்கள் தமக்கான “சமஷ்டி” முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வை கோரக் காரணமானது.

ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் அரசியல் தீர்வு பற்றி பல உறுதிமொழிகளை தமிழர்களுக்கு வழங்கினாலும், பேச்சுவார்த்தைகளை நடத்தினாலும் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. மாறாக இனவாதமும் அடக்குமுறைகளும் அதிகரித்து இறுதியில் தமிழின அழிப்பு யுத்தத்தில் நிறைவுற்றது. போருக்கு பின்னரான காலத்தில் அரசியல் தீர்வு குறித்து அரசாங்கங்கள் அக்கறை காட்டவில்லை, திடமான அரசியல் தீர்வுக்கான உரையாடல்கள் முன்னெடுக்கப்படாது தமிழ் மக்களின் அரசியல் தளம் வெறுமையானது.

இந்த நிலையை மாற்றி வடக்கு கிழக்கு ரீதியாக மக்கள் மத்தியில் அரசியல் தீர்வுக்கான விழிப்புணர்வையும் உரையாடலையும் ஏற்படுத்தும் நோக்குடன் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி “அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனைவை” ஆரம்பித்தோம். வடக்கு கிழக்கின் கிராமங்கள், நகரங்கள் என 100 இடங்களில் இந்த ஜனநாயக வழிப்பட்ட மக்கள் திரள் செயற்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு 100வது நாளான 2022 நவம்பர் எட்டாம் திகதி “சமஷ்டி அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனத்துடன்” நிறைவேறியது.

தற்போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய தலைமைத்துவங்களுடன் இலங்கையில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. “ஜனநாயகம்”, “கட்டமைப்பு மாற்றம்”. “இன மத பேதமின்மை” எனும் கொள்கைகளை முன்வைத்து இவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். எனினும் அரசியல் தீர்வு குறித்து தேசிய மக்கள் சக்தி அரசு மௌனம் காத்துவருகிறது.

வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கம், காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு, மாகாவலி குடியேற்றம் மற்றும் சிங்கள் மயமாக்கம், பௌத்த மயமாக்கம், தமிழ் மொழி உரிமை புறக்கணிப்பு, இனவாத அச்சுறுத்தல்கள் ஆகியன தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இந்த அடக்குமுறைகள் அனைத்தையும் வைத்துக்கொண்டு “இன மத பேதமின்மை” குறித்து அரசு கதைப்பது நேர்மையின்மையாகும். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக முன்வைத்து வரும் சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கையை “இன மத பேதமின்மை” எனும் கோஷத்தின் பின்னால் மறைக்கவோ மறுதலிக்கவோ முடியாது.

மேலும், 2015ஆம் ஆண்டு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 இல் இலங்கை அரசு இணைப் பங்காளராக இருந்து கையொப்பம் இட்டுள்ளது. இத் தீர்மானத்தின் ஏற்பாடு 20 ஆனது அரசியல் அதிகாரப் பரவலுக்கான இலங்கையின் கடப்பாட்டை கூறுகிறது.

ஆகவே இன வாதத்தில் சார்ந்திருந்த பழைய அரசுகளைப் போல் இல்லாது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, நிலையானதும் கௌரவமானதும் உரிமைகளுடன் கூடிய சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தும் தீர்வுத் திட்டத்தை உடன் முன்னெடுக்கக் கோருகிறோம்.

சமஷ்டி அரசியல் தீர்வு என்பது நாட்டைப் பிரிப்பது அல்ல. அது மிகவும் உயரிய ஜனநாயக அரசியல் அமைப்பின் வெளிப்பாடாகும். போருக்குப் பின் ஜனநாயக அரசியலை முன்னெடுத்துவரும் நாடுகள், எமது அண்டை நாடான நேபாளம் அடங்கலாக, சமஷ்டி முறைமையையே பொருத்தமானதாக ஏற்று அமுல்படுத்துகின்றன.

எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட இன அடக்குமுறையையும் முப்பது வருடகால இன அழிப்பு யுத்தத்தையும் எதிர்கொண்ட இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களுக்கு பொருத்தமான அதிகாரப் பகிர்வு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வாகும். இதுவே வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் திடமான அரசியல் அபிலாசையாகும். என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

சுரேஷ் சலேயின் கோரிக்கைகள் நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

by selvan
July 1, 2026
0

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் இருந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி...

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால்   மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால்   மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

by selvan
July 1, 2026
0

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், சாதாரண தர மற்றும் உயர்தர...

கோர விபத்துக்களில் இருவர் பரிதாபப் பலி! 

குருநாகலில் விபத்து – இரு இளைஞர்கள் பலி!

by selvan
July 1, 2026
0

குருநாகல் மாவட்டம், பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - குருநாகல் பிரதான வீதியின் ரஞ்சனகம சந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர்...

சுரேஷ் சலேவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில்லை – சரத் வீரசேகர தெரிவிப்பு.!

தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் சுரேஷ் சாலே!

by selvan
July 1, 2026
0

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று கைவிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு...

வவுனியா மாநகர சபையின் முன்னாள் முதல்வர் காண்டீபனைக் கைது செய்யுமாறு உத்தரவு!

வவுனியா மாநகர சபையின் முன்னாள் முதல்வர் காண்டீபனைக் கைது செய்யுமாறு உத்தரவு!

by selvan
July 1, 2026
0

வவுனியா மாநகர சபையின் முன்னாள் முதல்வர் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்ய வவுனியா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப்...

மட்டக்களப்பில் தீப்பரவல் – பல உணவகங்கள் தீக்கிரை!

by selvan
July 1, 2026
0

மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள உணவகக் கடைத் தொகுதி ஒன்றில் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீப்பரவலில்...

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இலங்கைத் துணைத் தூதுவர் சந்திப்பு.!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இலங்கைத் துணைத் தூதுவர் சந்திப்பு.!

by Mathavi
July 1, 2026
0

தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் டாக்டர் கணேசநாதன் கதீஸ்வரன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். சென்னையிலுள்ள தமிழக அரசுத் தலைமைச் செயலகத்தில்...

பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

by Mathavi
July 1, 2026
0

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்...

நோய்வாய்ப்பட்ட யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் தீவிர சிகிச்சை.!

நோய்வாய்ப்பட்ட யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் தீவிர சிகிச்சை.!

by Mathavi
July 1, 2026
0

அம்பாறை பிராந்திய வனவிலங்கு சுகாதார மேலாண்மைப் பிரிவின் கால்நடை அதிகாரி டாக்டர் டி.பி.என். புஷ்பகுமார உள்ளிட்ட வனவிலங்கு அதிகாரிகள் குழுவினர் லஹுகல தேசியப் பூங்காவின் செங்கமுவ இஸ்மத்த...

அம்பாறையில் பொசன் திருவிழா.!

அம்பாறையில் பொசன் திருவிழா.!

by Mathavi
July 1, 2026
0

பொசன் விழாவையொட்டி, அம்பாறை நகரில் அமைக்கப்பட்டிருந்த பொசன் வலயத்தின் ஐந்து தோரணங்கள், விளக்குகள் ஒளிர்விக்கப்பட்டு, பொதுமக்கள் அவற்றைக் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை(30) மாலை செய்யப்பட்டிருந்தன. அம்பாறை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி