• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 1, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வவுனியா வடக்கு வலயக் கல்வி முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்..!

admin by admin
August 2, 2025
in இலங்கை செய்திகள்., வவுனியா செய்திகள்
0
வவுனியா வடக்கு வலயக் கல்வி முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்..!
Share on FacebookShare on Twitter

வவுனியா வடக்கு வலயக் கல்வி முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிமனையில் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை (01.08.2025) நடைபெற்றது.

வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளரால், வலயம் தொடர்பான அடிப்படைத் தரவுகள் முன்வைக்கப்பட்டன. அத்துடன் தமது வலயத்தின் பிரதான சவாலாக ஆளணி வெற்றிடம், அதிலும் ஆசிரிய வெற்றிடம் அதிகமாக உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. வடக்கின் ஏனைய வலயங்களுடன் ஒப்பிடுகையில் ஆளணி வெற்றிடம் அதிகமுள்ள வலயங்களில் ஒன்றாக தமது வலயம் இருப்பதால், ஆளணிகளை வழங்கி உதவுமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார்.

அத்துடன் வேலையை விட்டு விலகும் ஆசிரியர்களின் சதவீதமும் இங்கு உயர்வாக இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், மாணவர்களின் வரவு ஒழுங்கின்மை அதிகமாக உள்ளதாகவும், மாணவர்கள் பிறப்புச் சான்றிதழ் இல்லாத தன்மையும் அதிகமாக உள்ளதாகவும் இவற்றை பிரதேச செயலகத்துடன் இணைந்து ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆளுநரிடம் தெரிவித்தார்.

இதன் பின்னர் கருத்துதுத் தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கல்வி அமைச்சின் செயலாளரால், வவுனியா வடக்கின் எல்லைக் கிராமங்களிலுள்ள பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை தொடர்பிலும் தொடர்ந்தும் அவ்வாறு பாடசாலைகள் மூடப்படும் அபாயம் நிலவுவது தொடர்பாகவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது என்றும் அதற்கு அமைவாக, அந்தப் பிரதேசத்தின் நிலைமையை நேரடியாக அவதானிப்பதற்காக இந்தக் களப் பயணம் ஒழுங்கமைக்கப்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நாங்கள் என்ன விலை கொடுத்தாலும் கல்வியை மேம்படுத்த வேண்டியது அவசியம் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர் அதிபர்களின் தலைமைத்துவத்தில்தான் பாடசாலைகளின் எழுச்சியும், சரிவும் தங்கியுள்ளது எனக் குறிப்பிட்டார். வளப்பற்றாக்குறைகள் இருப்பதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த ஆளுநர், இருக்கின்ற வளங்களை வைத்து முடிந்தளவு சிறப்பான சேவையை வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் ஆசிரியர்களோ, அதிபர்களோ கடமைக்காக வேலையைச் செய்யாமல் விருப்பத்துடன் வேலையைச் செய்தால் மிகச் சிறந்த பெறுபேறுகள் நிச்சயம் கிடைக்கப்பெறும் எனவும் வலியுறுத்தினார். ஆசிரியர்கள் அல்லது அதிபர்கள் எவராக இருந்தாலும் தினமும் இந்தப் பிரதேசத்திற்கு தூர இடத்திலிருந்து வந்து செல்வது பொருத்தமாக இருக்காது எனத் தெரிவித்த ஆளுநர் இங்கு தங்கி நின்று அவர்கள் பணியாற்றும்போதுதான் வினைத்திறனான பெறுபேறுகள் கிடைக்கும் எனக் குறிப்பிட்டார்.

அத்துடன் இன்றைய களப்பயணத்தின்போது பெற்றோர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலும் ஆளுநர் இங்கு குறிப்பிட்டார். பாடசாலை வகுப்பறைக்கு வர்ணப்பூச்சு மேற்கொள்வதற்காக பெற்றோர் ஒருவரால் சக பெற்றோர்களிடம் பணம் கோரப்பட்டதாக தனக்கு கிடைத்த முறைப்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பினார். பாடசாலை அதிபர் அவ்வாறான செயற்பாட்டை தான் மேற்கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டார். ஆனால் பாடசாலைக்குள் நடைபெறுகின்ற, பாடசாலையின் பெயரால் இடம்பெறுகின்ற இந்தச் சம்பவங்களுக்கு பாடசாலை அதிபர்களே பொறுப்பு எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், பாடசாலை அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த தவணையிலிருந்து தவணைப் பரீட்சைக் கட்டணம் அறவிடப்படக்கூடாது எனவும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரிடம் விசேட அனுமதியுடன் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாகவே தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆசிரிய இடமாற்றத்தின்போது வலயக் கல்விப் பணிப்பாளரால் ஆசிரியரை விடுவிப்பதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்ட பின்னரும் ஆசிரியர் விடுவிக்கப்படவில்லையாயின் அதிபருக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதிபர் ஒருவருக்கு இன்னமும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்ற விடயத்தையும் வடக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

வவுனியா வடக்கிலுள்ள பல முன்பள்ளிகள் எந்தவொரு அமைப்பினதும் பொறுப்பில் இயங்காமையால், அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாகாண சபையின் கொடுப்பனவு மாத்திரமே வழங்கப்படுவதாகவும், அது போதாது என்பதால் ஆசிரியர்கள் இந்தச் சேவையிலிருந்து விலகுகின்றனர் என்றும் அதனால் பல முன்பள்ளிகள் மூடப்படுகின்றன என்ற விடயமும் முன்பள்ளிக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளரால் முன்வைக்கப்பட்டது. தேசிய ரீதியான இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என நம்புவதாக வடக்கு கல்வி அமைச்சின் செயலர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோரும், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related Posts

சுரேஷ் சலேயின் கோரிக்கைகள் நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

by selvan
July 1, 2026
0

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் இருந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி...

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால்   மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால்   மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

by selvan
July 1, 2026
0

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், சாதாரண தர மற்றும் உயர்தர...

கோர விபத்துக்களில் இருவர் பரிதாபப் பலி! 

குருநாகலில் விபத்து – இரு இளைஞர்கள் பலி!

by selvan
July 1, 2026
0

குருநாகல் மாவட்டம், பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - குருநாகல் பிரதான வீதியின் ரஞ்சனகம சந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர்...

சுரேஷ் சலேவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில்லை – சரத் வீரசேகர தெரிவிப்பு.!

தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் சுரேஷ் சாலே!

by selvan
July 1, 2026
0

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று கைவிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு...

வவுனியா மாநகர சபையின் முன்னாள் முதல்வர் காண்டீபனைக் கைது செய்யுமாறு உத்தரவு!

வவுனியா மாநகர சபையின் முன்னாள் முதல்வர் காண்டீபனைக் கைது செய்யுமாறு உத்தரவு!

by selvan
July 1, 2026
0

வவுனியா மாநகர சபையின் முன்னாள் முதல்வர் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்ய வவுனியா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப்...

மட்டக்களப்பில் தீப்பரவல் – பல உணவகங்கள் தீக்கிரை!

by selvan
July 1, 2026
0

மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள உணவகக் கடைத் தொகுதி ஒன்றில் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீப்பரவலில்...

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இலங்கைத் துணைத் தூதுவர் சந்திப்பு.!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இலங்கைத் துணைத் தூதுவர் சந்திப்பு.!

by Mathavi
July 1, 2026
0

தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் டாக்டர் கணேசநாதன் கதீஸ்வரன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். சென்னையிலுள்ள தமிழக அரசுத் தலைமைச் செயலகத்தில்...

பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

by Mathavi
July 1, 2026
0

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்...

நோய்வாய்ப்பட்ட யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் தீவிர சிகிச்சை.!

நோய்வாய்ப்பட்ட யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் தீவிர சிகிச்சை.!

by Mathavi
July 1, 2026
0

அம்பாறை பிராந்திய வனவிலங்கு சுகாதார மேலாண்மைப் பிரிவின் கால்நடை அதிகாரி டாக்டர் டி.பி.என். புஷ்பகுமார உள்ளிட்ட வனவிலங்கு அதிகாரிகள் குழுவினர் லஹுகல தேசியப் பூங்காவின் செங்கமுவ இஸ்மத்த...

அம்பாறையில் பொசன் திருவிழா.!

அம்பாறையில் பொசன் திருவிழா.!

by Mathavi
July 1, 2026
0

பொசன் விழாவையொட்டி, அம்பாறை நகரில் அமைக்கப்பட்டிருந்த பொசன் வலயத்தின் ஐந்து தோரணங்கள், விளக்குகள் ஒளிர்விக்கப்பட்டு, பொதுமக்கள் அவற்றைக் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை(30) மாலை செய்யப்பட்டிருந்தன. அம்பாறை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி