கடந்த 23 ம் திகதி ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா பிரவுன்சிக் தோட்ட தேயிலைத் தொழிற்சாலையில் இருந்து 840000 ரூபாய் பெறுமதியான No 1 டஸ்ட், தேயிலைத் தூள் 1200 கிலோ எடை கொண்ட 20 பேக் சூரையாடப்பட்டுள்ளது என தோட்ட முகாமையாளர் முதியான்சலாகே நிலுஷான் மதுசங்க ஜயவீர என்பவர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார அவர்களின் பணிபுரைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு தேயிலை தொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராக்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது 23.07.2025. அன்று இரவு 8.30.மணி தொடக்கம் 10.30 மணிக்குள் 20 பேக் தேயிலைத் தூள் உதவி அதிகாரியினால் தோட்டத்திற்கு பொதிகள் கொண்டு செல்லும் பார ஊர்திக்கு ஏற்றப்பட்டது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து தோட்ட உதவி முகாமையாளரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்து ஹட்டன் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். ஹட்டன் நீதிமன்ற நீதவான் 30.07.2025 வரை விளக்கமறியலில் வைக்குமாறு பணித்துள்ளார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.










