இலங்கை நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் இளம் அரசியல் தலைவர்கள் பங்குகொள்ளும் மாநாடு எதிர்வரும் 14ம் திகதி புதுடில்லியில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த மாநாட்டிற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
கல்முனைத் தொகுதி தலைவரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச் செயலாளரும் சட்டத்தரணி அ.நிதான்சன் பங்குபற்றவுள்ளார்.
இதன் ஒரு அங்கமான கலந்துரையாடல் நேற்றைய தினம் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயத்தில் இலங்கை இந்திய உயர்தாஸ்னிகர் சந்தோஷ் ஜா தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் குறித்த மாநாட்டில் பங்குகொள்ளும் கட்சிகளின் இளம் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளம் பிரதிநிதியான அ.நிதான்சன் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் தனிப்பட்ட ரீதியான சந்திப்பும் இடம்பெற்றது.
இதன்போது மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்திய கலை கலாசார உறவுமுறைகளைப் பேணும் வகையில் அம்பாறை மாவட்டத்தில் “Indian corner” நிறுவுவதற்கான உதவிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், கல்முனையில் இந்தியாவின் அனுசரணையுடன் கலாசார மண்டபம் ஒன்று அமைப்பதற்கான முழுமையான ஒத்துழைப்பினை நல்குமாறும் அவரால் இந்திய உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.













