வவுனியா தெற்கு வலய மாணவர் நாடாளுமன்ற அமர்வு சிறப்பான முறையில் பிரதமர், சபாநாயகர், அமைச்சர்கள் தெரிவுடன் சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனையின் கேட்போர் கூடத்தில் சமூக விஞ்ஞான பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சத்தியமூர்த்தி தலைமையில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.
வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வலய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், அவர்களிடத்தில் இருந்து சபாநாயகர், பிரதமர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர் தெரிவு செய்யப்பட்டு, செங்கோலுடன் நாடாளுமன்ற சம்பிரதாய முறைப்படி குறித்த அமர்வு இடம்பெற்றது.
இதில் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் த.முகுந்தன், பிரதி கல்விப் பணிப்பாளர்களான அமல்ராஜ், தட்சாயினி, வீரசிங்கம், வலய கணக்காளர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், சமூக விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர் சுபா, வலய ஆசிரிய ஆலோசகர்கள், சமூக விஞ்ஞான பாட ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.















