• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வருமானத்தை காட்டச் சொல்ல வவுனியா மேயர் யார்? கேள்வி எழுப்பும் எதிர் கட்சி உறுப்பினர் பிறேமதாஸ்

admin by admin
June 23, 2025
in இலங்கை செய்திகள்.
0
வருமானத்தை காட்டச் சொல்ல வவுனியா மேயர் யார்? கேள்வி எழுப்பும் எதிர் கட்சி உறுப்பினர் பிறேமதாஸ்
Share on FacebookShare on Twitter

என்னை வருமானக் கணக்கு காட்டும் படி வவுனியா மேயர் கேட்கிறார். அதை காட்ட நான் தயார். எனது வருமானம் கேட்க இவர் யார்? இவருக்கு இலங்கைக்கே மேயர் என்ற நினைப்பா என வவுனியா மாநகர சபையின் பண்டாரிக்குளம் வட்டார உறுப்பினர் சி.பிறேமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் நேற்று மாலை (22.06) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிககையில்,

என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை கூறிக் கொள்வதுடன், மக்களின் உரிமைக் குரலாக நின்று பணியாற்றுவேன் என்பதையும் கூறிக் கொள்கின்றேன். மக்களுடன் மக்களாக இருந்து சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற என்னை தோல்வியடைந்த 8 பேருடன் சேர்த்து ஆளும் கட்சியில் உள்ள 11 உறுப்பினர்கள் என்னை அரசியலில் வளர விடக் கூடாது என்பதற்காக புதிய சதித்திட்டங்களை தீட்டி பொய் வதந்திகளை பரப்பி என்னை அரசியலில் இருந்து விலகச் செய்வதற்காக பல சூழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய போலித் தமிழ் தேசிய வாதிகள் என்பவர்கள் யார்? முன்னாள் ஆயுதக் குழுக்கள். தங்களுடன் 15, 20 வருடமாக கூட இருந்தவர்களையே கட்சியில் இருந்து விலக்க முயல்கின்றார்கள். இவர்களுடன் நாம் எவ்வாறு கைகோர்ப்பது? அரசியலில் புதிதாக யாராவது வந்தாலும் கூட அவர்களை வளர விடாமல் தடுக்கின்றார்கள். தமிழ் தேசியம் என்ற போர்வையில் நின்று எமது மக்களின் வாழ்வுரிமையை சிதைத்து நிற்கின்றார்கள்.

இன்று தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தவர் துரோகி என்கின்ற தமிழ் தேசிய வாதிகள் 2009 ஆம் ஆண்டு போரை முன்னின்று நடத்திய சரத் பொன்சேகாவை ஆதரிக்கவில்லையா? அப்போ யார் துரோகி ? மக்கள் தமிழ் தேசியவாதிகளால் வஞ்சிக்கபடுகிறார்கள். இதற்கு முடிவு வேண்டும். சதித் திட்டங்களால் மக்களை அழிவுப் பாதையில் கொண்டு செல்கின்றார்கள். வவுனியா மாநகர மேயர் கூறுகிறார் நாம் மக்கள் சேவைக்காக வந்துள்ளோம் என்று.

யாழ் மண்ணில் தமிழரசுக் கட்சியும் சங்கும் சண்டை, சைக்கிள் ஒத்துப் போகுதில்லை. தமிழரசு தமிழ் மக்களின் இருப்பை தக்க வைக்க ஈபிடிபியுடன் கூட்டு, வவுனியாவில் தமிழினத்தை தக்க வைக்க எல்லோரும் ஒற்றுமை, கிழக்கில் தமிழினத்தை தக்க வைக்க முஸ்லிம் காங்கிரஸ்சுடன் சேர்ந்துள்ளார்கள். ஏன் தமிழ் பேசும் அனைத்து கட்சிகளும் ஒன்று சேரக் கூடாது. வடக்கு – கிழக்கில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஏன் ஒன்று சேர முடியாது? அரசியல் செய்வதற்காகவே இப்படி செய்கிறார்கள்.

தமக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக என்னை இழிவாகவும் தரக் குறைவாகவும் முகநூலில் தகவல்களை பரப்பி வருகிறார்கள். சாதாரண ஒரு மாநகர சபை ஆட்சிக்கே இப்படி பேசும் இவர்கள் எப்படி நல்லவர்களாக இருக்க முடியும். இவர்கள் மக்களின் சேவைக்காக வரவில்லை. தங்களின் பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் வந்தவர்கள்.

உள்ளூராட்சி தேர்தல் வட்டாரம் தொட்டில் தொடக்கம் சூடுகாடு வரையான வேலையை செய்வதே அதன் வேலை. அதைக் கூட செய்ய விடுகிறார்கள் இல்லை. குடிநீர் வசதியை நான் செய்ய முற்பட்ட போது எமது மேயர் என்னை பழிவாங்கும் நோக்குடன் தடுத்து நிறுத்தியுள்ளார். அதன் பின் தான் பழிவாங்கவில்லை. குடிநீர் சுத்திகரிக்க வேண்டும். அதன் தரச் சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அதே மேயர் முன்னர் நகர சபை உறுப்பினராக இருக்கும் போது இந்த குழாய் கிணறு பழுதடைந்துள்ளது. திருத்துவதற்கு அவர் என்ன நடவடிக்கை எடுத்தார். நகரசபை களஞ்சியசாலையில் குழாய் கிணறு சம்மந்தமான உபகரணங்கள் இருந்தது. ஏன் அவர் சரி செய்ய முயலவில்லை. நாம் பழிவாங்கப்படுகின்றோம்.

இவர்கள் நேர்மையான அரசியல் வாதிகளா?. தமிழ் தேசிய அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்தால் என்னுடன் பேச வாருங்கள் நான் தயார்.

என்னை வருமானக் கணக்கு காட்டும்படி மேயர் கேட்கிறார். அதை காட்ட நான் தயார். எனது வருமானம் கேட்க இவர் யார்? இலங்கைக்கே மேயர் என்ற நினைப்பா இவருக்கு அல்லது ஜனாதிபதி என்று நினைப்பா? ஒரு லட்சத்து 39 ஆயிரத்து ரூபாய்க்கு மின்குமிழ் வாங்கி போட்டுள்ளேன். முடிந்தால் வாங்கோ வருமானம் காட்டுகிறேன். மேயர் முடிந்தால் வருமான பரிசோதகர்களை அனுப்புங்கள். நான் கணக்கு காட்டுகிறேன். தனி மனித அபிவிருத்தயை செய்ய முடியாதவர் தான் மேயர். வாத்தியார் என்பதை தவிர வேற என்ன இருக்கு. ஆசிரியர் என்பது மதிக்க வேண்டியது. ஆனால் அவர் மற்றவரை கேவலமாக நினைக்க கூடாது எனத் தெரிவித்தார்.

Related Posts

ஏழு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து.!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!

by Mathavi
June 26, 2026
0

மாத்தறை - தங்காலை வீதியில் சற்றுமுன்னர் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

பெருமளவான கஞ்சாவுடன் ஒருவர் கைது.!

பெருமளவான கஞ்சாவுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 26, 2026
0

வவுனியாவில் 21 கிலோ 600 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா லக்சபானா வீதியில் நேற்று இடம்பெற்றது. வவுனியா...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

கெஹல்பத்தர பத்மேயை சுட்டவர் கைது.!

by Mathavi
June 26, 2026
0

தற்போது காவலில் உள்ள, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கெஹல்பத்தர பத்மேயைச் சுட்டவர் எனக் கூறப்படும் பொம்புவலா தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன என்ற "மத்தியா" என்பவர்...

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அடுத்த வருடம் நிதி ஒதுக்கப்படும்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அடுத்த வருடம் நிதி ஒதுக்கப்படும்!

by selvan
June 26, 2026
0

முல்லைத்தீவு மாவட்டம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில்மேலும் 2 எலும்புக்கூடுகள் அடையாளம்

நாட்டில் டெங்கு மரணம் 30 ஆக உயர்வு!

by selvan
June 25, 2026
0

டெங்கு நோயின் காரணமாக இந்த ஆண்டில் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளபடி, இதுவரை நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள மொத்த...

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: வடக்கு மாகாணத்தில்  566 மாணவர்கள் 9 ‘ஏ’ சித்தி

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு குறித்த மீள் திருத்த விண்ணப்பம் கோரப்படுகிறது

by selvan
June 25, 2026
0

அண்மையில் வௌியான 2025 (2026) கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்கள் இன்று (25) முதல் கோரப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தின்...

ரகித மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்!

by selvan
June 25, 2026
0

கைது செய்யப்பட்ட முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க...

வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற இதுவரை காலவரையறை விதிக்கப்படவில்லை என அறிவிப்பு!

வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற இதுவரை காலவரையறை விதிக்கப்படவில்லை என அறிவிப்பு!

by selvan
June 25, 2026
0

வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற இதுவரை காலவரையறை விதிக்கப்படவில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார். வரி செலுத்துநர் அடையாள...

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் ஒருவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் ஒருவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!

by selvan
June 25, 2026
0

கிளிநொச்சி, பச்சிளைப்பள்ளி வண்ணங்கேணி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைதி வழியிலான சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும்...

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் அமர்வு இன்றையதினம் இடம்பெற்றது!

by selvan
June 25, 2026
0

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் அமர்வானது இன்றையதினம் (25.06.2026) சபையின் தவிசாளர் செல்வி இராசையா நளினி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது உப தவிசாளர் சத்தியமூர்த்தி சத்தியவரதன் அவர்களால்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி