• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அத்துமீறி வருகின்ற இந்திய மீனவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்..!

admin by admin
June 12, 2025
in இலங்கை செய்திகள்.
0
அத்துமீறி வருகின்ற இந்திய மீனவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்..!
Share on FacebookShare on Twitter

“இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையை தடுக்க இலங்கை அரசும், மீனவ அமைச்சும் தீவிரமாக இருக்கிறது. கடற்படையும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள். எதிர்வரும் 15 ஆம் திகதியில் இருந்து இலங்கை கடல் எல்லையை கடற்படை ஊடாக தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு அத்துமீறி வருகின்ற இந்திய மீனவர்களையும் ,அவர்களின் படகுகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்பிடி அமைச்சர் உறுதியளித்துள்ளதாக” வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (12) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,”கடற்றொழில் அமைச்சரை நேற்றைய தினம் புதன்கிழமை (11) மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து அமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடி இருந்தோம்.

குறித்த சந்திப்பானது எதிர்வருகின்ற 15 ஆம் திகதி தமிழக மீனவர்களின் அத்து மீறிய எல்லை தாண்டிய வருகை தொடர்பாகவும், குறித்த விடயம் தொடர்பாக அரசு முன்னெடுக்க திட்டமிட்டுள்ள விடயம் தொடர்பாகவும் வடபகுதி மீனவர்கள் சார்பாக நாங்கள் எதிர்நோக்க உள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காகவும் நாங்கள் அமைச்சர் அலுவலகத்திற்கு சென்றிருந்தோம். குறித்த சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

தமிழக மீனவர்களின் 60 நாள் மீன்பிடி தடைக்காலம் இம்மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. 15 ஆம் திகதிக்கு பின்னர் அவர்களின் எல்லை தாண்டிய வருகை நிச்சயமாக எமது கடல் பகுதியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதை அரசாங்கமும் மீன்பிடி அமைச்சும் எவ்வாறு தடுக்க இருக்கிறது.

வடபகுதி மீனவர்கள் இதனை எவ்வாறு முகம் கொடுக்க போகிறார்கள் என்ற விடயங்களை நாங்கள் ஆழமாக கலந்துரையாடினோம்.

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையையும், சட்டவிரோத மீன்பிடியையும் தடுப்பதற்காக நீண்ட காலமாக நாங்கள் போராடி வருகிறோம். பேச்சு வார்த்தைகளையும் நடத்தி இருக்கின்றோம். தமிழக இந்திய மட்டத்திலும் பேசி உள்ளோம்.

மேலும் பல்வேறு மட்டங்களிலும் பேசி வந்துள்ளோம். வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் நீண்ட காலமாக இவ் விடயத்தை கையாண்டு வருகிறது. 2004 ஆம் ஆண்டில் இருந்து இவ் விடயம் குறித்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. நெப்சோ நிறுவனமும் தன்னால் ஆன உதவிகளை முன்னெடுத்து வருகின்றது.

எதிர்வரும் 15 ஆம் திகதியில் இருந்து இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை தடுப்பதற்கான திட்டம் என்ன என்பது குறித்து கடல்தொழில் அமைச்சருடன் கலந்துரையாடினோம்.

இவ் விடயம் தொடர்பாக வடபகுதி மீனவர்களுக்கும் விளக்கத்தை தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்திருந்தோம். இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையைத் தடுக்க இலங்கை அரசும்,மீனவ அமைச்சும் தீவிரமாக இருக்கிறது. கடற்படையும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள்.

எனவே எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம். எதிர்வரும் 15 ஆம் திகதியில் இருந்து இலங்கை கடல் எல்லையை கடற்படை ஊடாக தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை முன் கெடுப்பதோடு,அத்துமீறி வருகின்ற இந்திய மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வட பகுதி மீனவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. அரசு தனது செயற்பாட்டில் உறுதியாக இருக்கிறது என்கிற தகவலை மீன்பிடி அமைச்சர் உறுதியாக தெரிவித்திருந்தார்.

அரசாங்கம் அத்துமீறிய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தீவிரமாக உள்ளது என்பதை நாங்கள் அறிகிறோம்.எனினும் கடற்படை, அரசாங்கம் இவ் விடயத்தில் கவனயீனமாக இருப்பார்கள். எனினும் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்கின்ற அச்சம் மீனவர்களிடம் காணப்படுகின்றது என்கிற விடயத்தை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்” என்றார்.

Related Posts

சிறுவனைத் தாக்கிய நால்வர் கைது.!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி; ஆறு பெண்கள் கைது.!

by Mathavi
June 21, 2026
0

கொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், மூன்று தாய்லாந்து பெண்கள் உட்பட ஆறு பெண்கள்...

சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்புப் போராட்டம் உண்மையில் ஓர் அர்த்தமற்ற நாடகமே.!

சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்புப் போராட்டம் உண்மையில் ஓர் அர்த்தமற்ற நாடகமே.!

by Mathavi
June 21, 2026
0

"சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்புப் போராட்டம் முற்றிலும் அர்த்தமற்ற ஒன்றாகும். ஒரு முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பிரதானியாக அவர் குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கக்கூடாது." -...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரம் ஒட்டுமொத்த நாட்டுக்குரியது.!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரம் ஒட்டுமொத்த நாட்டுக்குரியது.!

by Mathavi
June 21, 2026
0

"காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னமும் அந்தத் துயரமான துன்பத்தில் இருந்து மீளாத மக்களாகவே வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு நஷ்டஈடாக வெறும் பணத்தை வழங்குவதன் மூலமாக இந்த மன...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன பிரஜை கைது.!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன பிரஜை கைது.!

by Mathavi
June 21, 2026
0

சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் (13.2 மில்லியன்) பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடத்தி வர முயன்ற வெளிநாட்டு பயணி ஒருவர்,...

தேசிய புத்தாக்க விருதுப் போட்டியில் சாதித்த ‘SLIIT Northern Uni’ மாணவர்கள்.!

தேசிய புத்தாக்க விருதுப் போட்டியில் சாதித்த ‘SLIIT Northern Uni’ மாணவர்கள்.!

by Mathavi
June 21, 2026
0

வருடந்தோறும் தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்குநர்களையும், புத்தாக்கங்களையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் புகழ்பெற்ற தேசிய விருதை, SLIIT Northern Uni தகவல் தொழில்நுட்ப மாணவர்கள் இம்முறை தமதாக்கிக்...

திடீர் சோதனையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள்.!

திடீர் சோதனையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள்.!

by Mathavi
June 21, 2026
0

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தொடர் திடீர் சோதனை நடவடிக்கையில் 42 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை (19)...

வட இலங்கை சங்கீத சபை நடாத்திய 27ஆவது கலா வித்தகர் பட்டமளிப்பு விழா.!

வட இலங்கை சங்கீத சபை நடாத்திய 27ஆவது கலா வித்தகர் பட்டமளிப்பு விழா.!

by Mathavi
June 21, 2026
0

வட இலங்கை சங்கீத சபை நடாத்திய 27ஆவது கலா வித்தகர் பட்டமளிப்பு விழாவானது நேற்றையதினம் மருதனார்மடத்தில் உள்ள வட இலங்கை சங்கீத சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் நாடு முழுவதும் 22 ஆயிரம் முறைப்பாடுகள்.!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் நாடு முழுவதும் 22 ஆயிரம் முறைப்பாடுகள்.!

by Mathavi
June 21, 2026
0

இலங்கை முழுவதும் கிட்டத்தட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய 22 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன என்றும், அதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் 6 ஆயிரம் முதல்...

டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மக்களை இன்னமும் கூடாரங்களிலேயே தவிக்கவிட்டுள்ளது அரசு.!

டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மக்களை இன்னமும் கூடாரங்களிலேயே தவிக்கவிட்டுள்ளது அரசு.!

by Mathavi
June 21, 2026
0

"பாதுகாப்பான காணி இல்லை என்ற காரணத்தைக் கூறி, 'டித்வா' பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையக அகதிகளை அநுர அரசு இன்னமும் தற்காலிக கூடாரங்களிலேயே தவிக்கவிட்டுள்ளது. இந்நிலைமை கண்டி, நுவரெலியா...

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கு இரண்டு வருடங்களுக்குள் தீர்வு காண்போம்.!

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கு இரண்டு வருடங்களுக்குள் தீர்வு காண்போம்.!

by Mathavi
June 21, 2026
0

"காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினையைத் தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டு செல்வதற்கு எமது அரசு விரும்பவில்லை. எதிர்வரும் இரண்டு வருட காலங்களுக்குள் இந்த விசாரணைகள் அனைத்தையும் முழுமையாக முடிவுக்குக் கொண்டு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி