• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு மாநகர சபையின் எட்டாவது முதல்வர் தெரிவு.!

Mathavi by Mathavi
June 11, 2025
in இலங்கை செய்திகள், மட்டக்களப்பு செய்திகள்
0 0
0
மட்டக்களப்பு மாநகர சபையின் எட்டாவது முதல்வர் தெரிவு.!
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாநகர சபையின் எட்டாவது முதல்வராக இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சிவம்பாக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பிரதி முதல்வராக தமிழரசுக்கட்சியை சேர்ந்த வைரத்து தினேஸ்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு முதல்வர் மற்றும் பிரதி முதல்வதை தெரிவுசெய்யும் வகையிலான அமர்வு இன்று காலை நடைபெற்றது.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதன்போது முதல்வரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்த சிவம்பாக்கியநாதன் அவர்களை அதே கட்சியை சேர்ந்த மாசிலாமணி சண்முகலிங்கம் அவர்கள் முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நவரெத்தினராசா ரகுபரன் அவர்கள் வழிமொழிய வேறு தெரிவுகள் இன்மையால் அவர் ஏகமனதாக மட்டு மாநகரசபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.

இதேபோன்று பிரதி முதல்வருக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டபோது மாநரசபை உறுப்பினர் வை.தினேஸ் அவர்களை பிரதி முதல்வராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாநகரசபை உறுப்பினர் து.மதன் முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர் மீரா சாஹிபு ஆயிசா உம்மா வழிமொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்னுமொரு தெரிவாக முன்னாள் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் அவர்களை சுயேட்சைக் குழு உறுப்பினர் சீ.ஜெயந்திரகுமார் முன்மொழிய வி.சசிகலா வழிமொழிந்தார்.

இதன் பிரகாரம் பிரதி முதல்வர் தெரிவு தொடர்பில் வாக்கெடுப்பு நடாத்துவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் வாக்கெடுப்பு இரகசிய முறையிலா, பகிரங்க முறையிலா என்பதற்கான உறுப்பினர்களின் விருப்பு கோரப்பட்டது. இதன் பிரகாரம் 22 உறுப்பினர்கள் பகிரங்க வாக்களிப்புக்கு விருப்பு தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில் பிரதி முதல்வருக்கான வாக்கெடுப்பு பகிரங்க முறையில் இடம்பெற்றது.

அந்த வகையில் வை.தினேஸ் அவர்களுக்கு ஆதரவாக 18 வாக்குகளும், க.சத்தியசீலன் அவர்களுக்கு ஆதரவாக 04 வாக்குகளும் கிடைக்கபெற்றன. இதன்போது தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் 12 பேர் நடுநிலைமை வகித்தனர்.

இதன்படி மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிவம் பாக்கியநாதன் மற்றும் பிரதி முதல்வராக வை.தினேஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய அமர்வினை பார்வையாளர்கள் அரங்கில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட பல்வேறு கட்சியை சேர்ந்த முக்கிஸ்தர்களும் வருகை தந்திருந்ததை காணமுடிந்தது.

சபை அமர்வினை தொடர்ந்து முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோர் தமது கடமைகளை பொறுப்பேற்றதுடன் அவர்களுக்கு கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டதை காணமுடிந்தது.

Related Posts

60 அடி பள்ளத்தாக்கில் விழுந்த முச்சக்கர வண்டி..!

60 அடி பள்ளத்தாக்கில் விழுந்த முச்சக்கர வண்டி..!

by Thamil
June 12, 2025
0

பானந்துரை பிரதேசத்திலிருந்து இன்று காலை நுவரெலியா நோக்கி சென்ற முச்சக்கர வண்டி லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுகலை பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி 60 அடி பள்ளத்தாக்கில்...

தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு அல்லது மாற்றுக் காணி வழங்க ஏற்பாடு..!

தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு அல்லது மாற்றுக் காணி வழங்க ஏற்பாடு..!

by Thamil
June 12, 2025
0

"யாழ். தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நட்டஈடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்....

வீதி விபத்து மற்றும் மாணவர்களின் கொண்ணிலை தொடர்பான விழிப்புணர்வு..!

வீதி விபத்து மற்றும் மாணவர்களின் கொண்ணிலை தொடர்பான விழிப்புணர்வு..!

by Thamil
June 12, 2025
0

வீதி விபத்து மற்றும் மாணவர்களின் கொண்ணிலை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (12) மதியம் 12 மணியளவில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது. பாடசாலை அதிபர்...

காணி கபளீகர வர்த்தமானியை ஆட்சேபித்து சுமந்திரன் வழக்கு.!

காணி கபளீகர வர்த்தமானியை ஆட்சேபித்து சுமந்திரன் வழக்கு.!

by Mathavi
June 12, 2025
0

வடக்கில் சட்ட ஆவண ரீதியாக உரிமை நிரூபிக்கப்படாத தனியாரின் காணிகளை அரசு கபளீகரம் செய்வதற்கு வழி செய்யும் விதத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்ததை இடைநிறுத்தும்படி உத்தரவிடவும், செல்லுபடியற்றதாக...

சாணக்கியனின் இடத்தில் கடும் போட்டிக்கு மத்தியில் தமிழரசு வெற்றி..!

சாணக்கியனின் இடத்தில் கடும் போட்டிக்கு மத்தியில் தமிழரசு வெற்றி..!

by Thamil
June 12, 2025
0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் பிரதேசமான களுவாஞ்சிக்குடியை உள்ளடக்கிய மண்முனை தெற்கு பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவில் கடும் போட்டிக்கு...

சாவகச்சேரியில் சைக்கிளில் தெரிவான இருவருக்கு எதிரான வழக்கு நாளை..!

சாவகச்சேரியில் சைக்கிளில் தெரிவான இருவருக்கு எதிரான வழக்கு நாளை..!

by Thamil
June 12, 2025
0

சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப்...

வெருகல் படு கொ*லையின் 39 ஆவது நினைவேந்தல்..!

வெருகல் படு கொ*லையின் 39 ஆவது நினைவேந்தல்..!

by Thamil
June 12, 2025
0

திருகோணமலை, வெருகல் படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெருகல் – பூநகர் பகுதியில் இன்று (12) வியாழக்கிழமை மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நினைவுகூரப்பட்டது. வெருகல் - ஈச்சிலம்பற்று...

கனடாவின் என் கடமை நிறுவனத்தினருக்கும் திருகோணமலை மீடியா போரத்தின் தலைவருக்குமிடையிலான சந்திப்பு.!

கனடாவின் என் கடமை நிறுவனத்தினருக்கும் திருகோணமலை மீடியா போரத்தின் தலைவருக்குமிடையிலான சந்திப்பு.!

by Mathavi
June 12, 2025
0

கனடாவின் என் கடமை நிறுவனத்தின் பணிப்பாளருக்கும், திருகோணமலை மீடியா போரத்தின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு கிண்ணியா மீடியா போரத்தின் இல்லத்தில் இன்று(12) காலை நடைபெற்றது. கனடாவின் என்...

திருகோணமலையில் காணிப் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்..!

திருகோணமலையில் காணிப் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்..!

by Thamil
June 12, 2025
0

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பான சிறப்புக் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள காணிப்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி