தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (06) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் துசித ஹல்லொலுவ, கடந்த மே மாதம் 30 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT