இலங்கையில் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள சில அரசியல்வாதிகளும், அவர்களின் உறவினர்களும் நாட்டைவிட்டுத் தப்பியோடுவதற்கு முற்படுகின்றனர் என உளவுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சில அரச அதிகாரிகளும் இவ்வாறு வெளியேற முற்படுகின்றனர். எனினும், அத்தகையவர்கள் வெளியேறுவதை தடுப்பதற்கு விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அரசு உரிய ஆலோசனையை வழங்கியுள்ளது.
அத்துடன் புலனாய்வுப் பிரிவினரும் இந்த விடயத்தில் துரித கதியில் செயற்பட்டு வருகின்றனர் என்றும் அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
ADVERTISEMENT