நேற்று 25/05/2025/இரவு 10.00 மணி அளவில் பனிச்சங்கேணி பாலத்தடியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மரணித்த ஆலையடி வீதி பதுரியா நகரைச் சேர்ந்த அக்பர் முஹம்மட் சஜித் மற்றும் அசாம் என்ற இரு இளைஞர்களும் இறை அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.
எமது அஸ்ஸபா விளையாட்டு கழகத்தின் உறுப்பினர் மற்றும் நடந்து முடிந்த உள்ளூர் ஆட்சி சபை தேர்தலில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி எமது வெற்றிக்கு பெரும்பாடு பட்டவர்கள் என்பதை கூறிக் கொண்டவனாக அன்ணாருடைய இழப்பு மிகவும் மன வேதனை அளிக்கின்றது.
அன்ணாருடைய மறுமை வாழ்வை இறைவன் விசாலமாக்கி கொடுப்பானாக என்று பிராத்தித்தவனாக இரண்டு இளைஞர்களுடைய ஜனாஸா நல்லடக்கம் இன்சா அல்லாஹ் இன்று மகரிப் தொழுகையின் பின் மீராவோட மீரா ஜிம்மா பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பதுரியா மாஞ்சோலை ஊடகப்பிரிவு-