• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 7, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மக்களின் காணியை அரசு சுவீகரிக்க ஒருபோதும் இடமளியோம்! – சுமந்திரன்

admin by admin
May 26, 2025
in இலங்கை செய்திகள்., முக்கிய செய்திகள்
0
மக்களின் காணியை அரசு சுவீகரிக்க ஒருபோதும் இடமளியோம்! – சுமந்திரன்
Share on FacebookShare on Twitter

“காணி சுவீகரிப்புக்காக அரசால் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானிக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த வர்த்தமானியை அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறு இல்லாவிடின் மக்கள் போராட்டங்களையும் நடத்துவோம். தமது காணிகளை மக்கள் இழக்காமல் இருப்பதற்குரிய சட்ட ஆலோசனைகளை இலவசமாக வழங்குகின்றோம்.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

2025.03.28 ஆம் திகதியன்று 2430 ஆம் இலக்கத்தின் காணி நிர்ணயச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி தொடர்பில் யாழ். வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணிப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்களுக்கான நீதி அமைப்பால் ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்ட சட்ட ஆலோசனை முகாமில் கலந்துகொண்டதன் பின்னர் தமது செயற்பாடுகளை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“காணி திணைக்களத்தால் 2025.03.28 ஆம் திகதியன்று காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி தொடர்பில் மக்களுக்கான நீதி அமைப்பின் ஊடாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

இந்த நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் கீழ் குறித்த பிரதேசத்தை அடையாளப்படுத்தி வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரித்தால் அப்பகுதியில் உள்ள காணி உரிமையாளர்கள் அல்லது உரிமை கோருபவர்கள் மூன்று மாத காலத்துக்குள் தமது காணிக்கான உரித்தை உறுதிப்படுத்த வேண்டும். காணி உரித்துக்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் இந்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1931 ஆம் ஆண்டு காலப் பகுதியில் காணி உரித்து தொடர்பில் காணப்பட்ட பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்ட இடப்பெயர்வுகள் இடம்பெற்றன. இதனால் பலர் தமது காணிக்குரிய ஆவணங்களை இழந்துள்ளனர். அதேபோல் சுனாமி அனர்த்தத்தால் பலர் தமது ஆவணங்கள் மற்றும் உரித்துக்களை இழந்துள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் அசாதாரன சூழல் தொடர்ந்து காணப்படுகின்ற நிலையில் மீள்குடியேற்றம் முழுமை பெறாத நிலையில், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் அகதிகளாக வாழ்கின்றனர். இவ்வாறு தீர்க்கப்படாத சிக்கல்கள் காணப்படுகின்ற சூழலில் காணி நிர்ணயச் சட்டத்தை அமுல்படுத்துவது மிக மோசமானதொரு செயற்பாடு.

காணி சுவீகரிப்புக்காகப் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானிக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த வர்த்தமானியை அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறு இல்லாவிடின் மக்கள் போராட்டங்களையும் நடத்துவோம். தமது காணிகளை மக்கள் இழக்காமல் இருப்பதற்குரிய இலவச சட்ட ஆலோசனைகளை வழங்குகின்றோம்.

குறித்த ஏதேனும் காணிக்கு உரிமம் கோருபவரிடம் உள்ள ஏதேனும் ஆவணம் அந்தக் காணிக்கான சட்ட உரித்தைக் கோருவதற்குப் போதுமானதாக அமையுமா அல்லது காணப்படும் சிக்கல்களுக்கு எவ்வாறான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான சட்ட ஆலோசனைகளையும் வழங்குவோம். மேலதிக சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்குத் தயாராகவுள்ளோம்.

நேற்று 20 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் தன்னிச்சையான முறையில் இலவசமாக சட்ட ஆலோசனைகளை வழங்க முன்வந்துள்ளார்கள். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சட்டபீடத்தில் கல்வி கற்கும் 15 மாணவர்கள் இந்தச் சட்ட ஆலோசனை நடவடிக்கைகளுக்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.

எதிர்வரும் நாட்களில் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்குச் சட்ட ஆலோசனை நடவடிக்கைகளுக்குச் செல்வோம். 2025.03.28 ஆம் திகதியன்று பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி வாபஸ் பெற வேண்டும் என்பது எமது பிரதான வலியுறுத்தலாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இந்த வர்த்தமானியைப் பிரசுரித்தது பொருத்தமானதல்ல.” – என்றார்.

Related Posts

சுரேஷ் சலேவுக்கு அநீதி; போராட்டம் வெடிக்கும்.!

சுரேஷ் சலேவுக்கு அநீதி; போராட்டம் வெடிக்கும்.!

by Mathavi
June 7, 2026
0

இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் பட்சத்தில், நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ள "சட்ட ரீதியாக...

மாகாண சபைத் தேர்தல் ‘ஓகே’ அதிகாரப் பகிர்வு ‘நோ’

மாகாண சபைத் தேர்தல் ‘ஓகே’ அதிகாரப் பகிர்வு ‘நோ’

by Mathavi
June 7, 2026
0

வடக்கு மாகாண சபைக்குப் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என நம்புகின்றோம் என்று முன்னாள் அமைச்சர் சரத்...

இனி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்.!

இனி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்.!

by Mathavi
June 7, 2026
0

தான் இனி ஒருபோதும் தீவிர அரசியலுக்கு வரப்போவதில்லை என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, எதிர்காலத்தில்...

சிறுவனைத் தாக்கிய நால்வர் கைது.!

அதிரடி சோதனையில் சிக்கிய 75 இளைஞர்கள்.!

by Mathavi
June 7, 2026
0

அம்பலாங்கொடை இடம்தோட்ட பகுதியில் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் போதைப்பொருட்களுடன் 75 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (6)...

2029 இற்கு முன் ரணில் மீண்டும் ஜனாதிபதி; ராஜித அதிரடி அறிவிப்பு.!

2029 இற்கு முன் ரணில் மீண்டும் ஜனாதிபதி; ராஜித அதிரடி அறிவிப்பு.!

by Mathavi
June 7, 2026
0

இலங்கையில் 2029ஆம் ஆண்டுக்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாவார் என்றும், நாட்டின் நலனுக்காக அந்தச் சவாலை அவர் ஏற்பார் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன...

கிரியெல்லவில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது.!

விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற காரின் சாரதி கைது.!

by Mathavi
June 7, 2026
0

ஹங்வெல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பல்கம - பனாகொட வீதியில் நேற்று (06) சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

கணவனை கொ*லை செய்த மனைவி.!

by Mathavi
June 7, 2026
0

ஹொரணை, அரம்பகந்த பகுதியில் மனைவி ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் அரம்பகந்த, ஹொரணை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய...

மீண்டும் பலம் பெறும் மொட்டு; சானக்க, ஜோன்ஸ்டனுக்கு முக்கிய பொறுப்புகள்.!

மீண்டும் பலம் பெறும் மொட்டு; சானக்க, ஜோன்ஸ்டனுக்கு முக்கிய பொறுப்புகள்.!

by Mathavi
June 7, 2026
0

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து எதிர்கால அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்கான முழு அதிகாரமும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

by Mathavi
June 7, 2026
0

கம்பஹா மாவட்டம், மீரிகமை பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி 26 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...

பாழடைந்த கிணற்றில் சடலமாக காணப்பட்ட அரச அதிகாரி.!

பாழடைந்த கிணற்றில் சடலமாக காணப்பட்ட அரச அதிகாரி.!

by Mathavi
June 7, 2026
0

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவள வட்டார அதிகாரி பாழடைந்த கிணற்றில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 41 வயதுடைய ஆரட்சி பன்டாரகே சந்திர வன்சல கோசல...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி