வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு எதிராக போராட்டம் கிளம்பியதையடுத்து தற்போது சைவ உணவுகளை மாத்திரம் விற்பனை செய்ய உணவக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
குறித்த அசைவ உணவகம் ஆரம்பிக்கப்பட்டதற்கு எதிராக சைவ சமய ஆர்வலர்கள், அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
குறித்த அசைவ உணவகம் அமைக்கும் நடவடிக்கை கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்கு எதிரானது என்பதனை வெளிப்படுத்தும் முகமாக இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனையடுத்து, இந்த அசைவ உணவகத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற விளம்பரப்பலகை யாழ் மாநகர சபையினரால் அகற்றப்பட்டது.
இந்நிலையில் குறித்த அசைவ உணவகத்தின் முகப்பில் சைவ உணவுகள் மட்டும் பரிமாறப்படும் என பதாகையில் குறிப்பிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Related Posts
வவுனியா மாநகர சபையின் முதல்வர் வடக்கு மாகாண ஆளுநரால் பதவி நீக்கம்!
வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிசோர் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்...
கைதைத் தடுக்கக் கோரும் கோட்டாபயவின் ரிட் மனு ஒத்திவைப்பு!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகளின் பின்னணியில், தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல்...
352 மில்லியன் ரூபா மதிப்புள்ள ‘ஹஷிஸ்’ போதைப்பொருளுடன்
18 வயதுடைய வெளிநாட்டு யுவதி கைது!
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 352 மில்லியன் ரூபாவுக்கும் அதிக சந்தை மதிப்புடைய சுமார் 36 கிலோ கிராம் ‘ஹஷிஸ்’ போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்தி வர...
தமிழக அமைச்சர் வன்னி அரசை நேரில் சந்தித்தார் சிறீதரன் எம்.பி.!
தமிழ்நாடு மாநிலத்தின் புதிய சமூக நீதித்துறை அமைச்சரும் நீண்டகால அரசியல் செயற்பாட்டாளருமான வன்னி அரசை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
டெங்கு காய்ச்சல் காரணமாக பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு.!
ருகுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர், டெங்கு காய்ச்சல் காரணமாகத் துரதிர்ஷ்டவசமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்...
கிளிநொச்சி பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வாருங்கள்.!
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான முழுமையான ஒத்துழைப்பைத் தான் வழங்கத் தயாராக உள்ளார்...
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து.!
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் இன்று புதன்கிழமை மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாகப் பெருமளவிலான சொத்துக்களுக்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதி முழுவதும்...
கொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு.!
கொழும்பின் புறநகர் பகுதிகளில் இன்று புதன்கிழமை இரவு 8 மணி முதல் நாளை வியாழக்கிழமை இரவு 8 மணி வரை 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று...
சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு; பேருந்து விபத்து.!
அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று வெல்லம்பிட்டி பகுதியில் இன்று (24) அதிகாலை 5.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர்...
பொலிஸாருக்கு எதிராக வெடித்த போராட்டம்.!
கடந்த 22.06.2026 அன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக மோட்டார் சைக்கிளினை செலுத்திய ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வீதி விபத்தில்...










