கொழும்பின் பல பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய மேம்படுத்தல் நடவடிக்கை காரணமாக எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையான 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 1 முதல் கொழும்பு 15, கோட்டே, கடுவெல, பத்தரமுல்ல, கொலன்னாவ, கொட்டிக்காவத்தை, முல்லேரியா, மகரகம, தெஹிவளை, கல்கிஸ்சை, இரத்மலானை, மொரட்டுவை ஆகிய பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.