பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீ்பபுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இம்ரான்கான் கட்சியான பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி முடிவு செய்துள்ளது.
தெக்ரீக்-இ-இன்சாப் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பரிசீலித்து வருகிறது. இதை தெக்ரீக்-இ-இன்சாப் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் சபாநாயகருமான அசாத் கைசர் உறுதி செய்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதை நாங்கள் பரிசீலனையில் வைத்திருக்கிறோம். இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றங்கள் காரணமாக தற்காலிகமாக பின்வாங்கினோம். தற்போது பதற்றம் குறைந்ததால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர உள்ளோம் என்றார்.
இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்கள் சேதமடைந்ததை ஷபாஸ் ஷெரீப் சமீபத்தில் ஒப்புக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.