யா/ யூனியன் கல்லூரியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியரும் வலைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளருமாகிய மறைந்த திருமதி. ஜெயந்தி ஜெயதரன் அவர்களின் ஞாபகார்த்தமாக யூனியன்ஸ் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் legend lady Jeyanthy Queen cup 2025 எனும் மாபெரும் வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியானது 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் யா/யூனியன் கல்லூரி மைதானத்தில் வெகு விமர்சையாக நடாத்தப்படுகின்றது.
இச் சுற்றுப் போட்டியானது Open Girls, Over 35 Girls, Mixed ஆகிய பிரிவினருக்குரிய போட்டிகளாக இன்றும் நாளையும் நடைபெறவுள்ள நிலையில் இதன் தொடர்ச்சியாக
பாடசாலை மாணவர்களின் வயதுப் பிரிவினருக்கான போட்டிகள் 17 மற்றும் 18 ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இன்றைய நிகழ்வின்போது விருந்தினர்கள் மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கொடி மற்றும் கழகக் கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டன. பின்னர் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.
பின்னர் வலைப்பந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாகின.
வடக்கு மாகாண ரீதியாக நடைபெற்ற இந்தப் போட்டியில் வீரர்கள் மிகவும் ஆர்வத்துடனும், சுறுசுறுப்புடனும் போட்டியில் பங்குபற்றுவதை அவதானிக்க முடிந்தது.









