நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று இன்று காலை கொத்மலை, கெரண்டி எல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாகவும், 35 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



