சிறப்பு அதிரடிப்படையினருக்கு இன்று 25.04.2025 கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக கிளிநொச்சி தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை வேறு பகுதியில் இருந்து எடுத்து வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 20 கிலோ கேரளா கஞ்சாவினை சிறப்பு அதிரடிப் படையினர் கைப்பற்றி உள்ளனர்.
அந்த வீட்டு உரிமையாளரான பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தடயப் பொருட்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த தர்மபுர பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT