• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

உயிர்மாய்த்த மாணவி குறித்து அவதூறு; அமைச்சர் சரோஜாவைக் கண்டித்த மனோ.!

Mathavi by Mathavi
May 9, 2025
in இலங்கை செய்திகள்.
0
உயிர்மாய்த்த மாணவி குறித்து அவதூறு; அமைச்சர் சரோஜாவைக் கண்டித்த மனோ.!
Share on FacebookShare on Twitter

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் உயிர்மாய்த்த மாணவி மனநோயாளி அல்லர் எனவும், அவ்வாறு கூறியமைக்காக மகளிர் விவகார அமைச்சர் மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தினார்.

மேலும், அந்த வார்த்தைப் பிரயோகத்தை நாடாளுமன்ற ஹன்சார்ட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

கொட்டாஞ்சேனை மாணவி குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மனோ கணேசன் எம்.பிக்குப் பதிலளித்த சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், அந்த மாணவி தொடர்பான விவரங்களை முன்வைத்ததுடன், பெற்றோர்களை விசாரணைக்கு வருமாறு அழைத்ததாகவும், ஆனால் அவர்கள் அமைச்சுக்கு சமூகமளிக்கவில்லை எனவும் கூறினார்.

அதற்குப் பதிலளித்த மனோ கணேசன் எம்.பி, அமைச்சு அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று விசாரிக்க வேண்டுமே தவிர, அவர்கள் உங்களிடம் வரும் வரை காத்திருக்க வேண்டுமா என்று சாடினார்.

அத்துடன் உயிர்மாய்த்த மாணவி மனநோயாளி என்று கூறியமைக்காக அமைச்சர் சரோஜா மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் அவர் கேட்டார்.

மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறுகையில்,

“இந்தச் சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை நடைபெற வேண்டும். குறிப்பிட்ட மாணவிக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கின்றது. அது உண்மை. இன்று (நேற்று) அந்த மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடக்கும் இடத்தில் பொலிஸ் நீர்த்தாரைப் பிரயோக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கண்ணீர்ப் புகைப் பிரயோகத் தாக்குதலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்படிச் செய்யாதீர்கள். அது தவறு.” – என்றார்.

இதற்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, இந்தச் சம்பவம் குறித்து நீதியான விசாரணைகள் நடைபெறுகின்றன என்று குறிப்பிட்டார்.

அதன் பின்னர் பேசிய அமைச்சர் சரோஜா, மருத்துவ அறிக்கை மற்றும் விசாரணை அறிக்கைகளின் அடிப்படையிலேயே தான் பேசியதாகவும், தவறாக எதையும் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்தார்.

Related Posts

பிரதேச சபையின் வாகனத்தில் சாரத்தியம் பழகிய மானிப்பாய் தவிசாளர்.!

பிரதேச சபையின் வாகனத்தில் சாரத்தியம் பழகிய மானிப்பாய் தவிசாளர்.!

by Mathavi
June 16, 2026
0

மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசீதன், பிரதேச சபையின் வாகனத்தில் சாரத்தியம் பழகியதாக உறுப்பினர் அச்சுதபாயன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மிகச் சிறப்பான முன்னேற்றம்.!

லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மிகச் சிறப்பான முன்னேற்றம்.!

by Mathavi
June 16, 2026
0

லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பான முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், எதிர்காலத்தில் பொலித்தீன் மற்றும் ஒரு நாள்...

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு.!

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு.!

by Mathavi
June 16, 2026
0

கடந்த 11 ஆம் திகதி முதல் காணாமல் போனவரை 5 நாட்களாக தேடி வந்த ஸ்டரஸ்பி தோட்ட தொழிலாளர்கள் இன்று 16 ஆம் திகதி மதியம் 12...

வவுனியாவில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்.!

வவுனியாவில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்.!

by Mathavi
June 16, 2026
0

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 'சிசு செரிய' பேருந்து சேவையின் ஆரம்ப நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (15.06.2026) வவுனியா பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது....

றோயல்ஸ் அணி BPL போட்டியில் சம்பியன்.!

றோயல்ஸ் அணி BPL போட்டியில் சம்பியன்.!

by Mathavi
June 16, 2026
0

Manipay Bright sports Club இன் வீரர்களுக்கு இடையில் வருடம்தோறும் இடம்பெறும் BPL எனப்படும் Bright premier league போட்டியானது இவ்வருடமும் 7 ஆவது முறையாக நேற்று...

சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்க முடியாது; வீதிக்கு இறங்கிய தோட்ட மக்கள்.!

சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்க முடியாது; வீதிக்கு இறங்கிய தோட்ட மக்கள்.!

by Mathavi
June 16, 2026
0

இன்று புஸ்சலாவ பிளான்டேஷன் பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான ரொத்ஸ்சைல்ட் தோட்டத்தில் உள்ள சுமார் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பொதுமக்களும் ஒன்றிணைந்து நீதிக்கான போராட்டத்தில் கலந்துகொண்டனர். கடந்த...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; கைது செய்வதை தடுக்கக் கோரி கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு.!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; கைது செய்வதை தடுக்கக் கோரி கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு.!

by Mathavi
June 16, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 16, 2026
0

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொடிவீகும்பூர பகுதியில், நேற்று திங்கட்கிழமை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையினரால் நடத்தப்பட்ட முற்றுகையின் போது, பெருந்தொகையான சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர்...

வீதிக்கு இறங்கிய விவசாயிகள்.!

வீதிக்கு இறங்கிய விவசாயிகள்.!

by Mathavi
June 16, 2026
0

நெல்லுக்கான நிர்ணய விலையை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கிளிநொச்சி விவசாயிகள் இன்றையதினம் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி நகர் சித்திவிநாயகர் ஆலய முன்றலிருந்து மாவட்ட செயலகம்...

ஐந்து மாதங்களின் பின்னர் நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

ஐந்து மாதங்களின் பின்னர் நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

by Mathavi
June 16, 2026
0

யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. இப்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி