• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 8, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்ய இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு.!

Mathavi by Mathavi
May 9, 2025
in இலங்கை செய்திகள்.
0
தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்ய இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு.!
Share on FacebookShare on Twitter

தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்கு பல்வேறு விட்டுக் கொடுப்பிற்கு மத்தியில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு விடுப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன் தெரிவித்தார்.

நேற்றையதினம் (08) மட்டக்களப்பில் உள்ள கட்சியின் பிரதான அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் படகு சின்னத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வழங்கிய ஆணைக்காக அந்த மக்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் 37 ஆசனங்கள் எமக்கு கிடைத்துள்ளது. இதனை மக்கள் எமக்கு வழங்கிய பெரும் ஆணையாகவே நாம் பார்க்கின்றோம். அதனடிப்படையில் கிழக்கு மக்களுக்கு தனித்துவமான ஒரு அரசியல் குரல் தேவை என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

எமது கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது வாகரையில் ஏழு ஆசனங்களை பெற்றிருக்கின்றோம். அதே போன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலும் இரண்டு வட்டாரங்களை தம்வசப்படுத்தியதுடன் மண்முனை தென் மேற்கு பிரதேசத்தில் ஆறு ஆசனங்களைப் பெற்று கிழக்கு தமிழர் கூட்டமைப்பு முன்னிலையில் நிற்கின்றது.

அந்த அடிப்படையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பிற்கு மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் தமிழர்களின் ஆட்சியினை உறுதிப்படுத்துவதற்காக இணைந்து செயற்படுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபையில் இருக்கின்ற எல்லைப் புற கிராமங்கள் இரண்டில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கின்றது.
அதனடிப்படையில் மக்களின் ஆணைக்கு கட்டுப்பட்டு தனிப்பட்ட அல்லது கட்சி விருப்பு வெறுப்பிற்கு அப்பால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அனைவரும் ஒருமித்து பயணிக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்த்தியிருக்கின்றார்கள்.

அதனடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்காக அழைப்பு விடுக்கின்றோம். அவ்வாறு ஒன்றாக பயணிக்கின்ற போது கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று, ஏறாவூர்ப்பற்று, மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை தென் எருவில் பற்று, மண்முனை தென் மேற்கு மற்றும் போரதீவுப்பற்று உள்ளூராட்சி மன்றங்களிலும் நாங்கள் ஆட்சியமைக்க முடியும். அதாவது தமிழர்களின் ஆட்சியை உறுதிப்படுத்தும் வாய்ப்பு இருக்கின்றது.

பல்வேறு விட்டுக் கொடுப்பிற்கு மத்தியில் பயணிக்கின்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் இந்த கோரிக்கையினை ஏற்று இலங்கை தமிழரசுக் கட்சியினர் ஒன்றாக பயணிப்பதற்கு முன் வருவார்கள் என நம்புகின்றோம். ஏன் என்றால் 2015 ஆண்டு மாகாண சபை தேர்தலின் பின்னர் எமது கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் அவர்களினால் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தோம். மாகாண சபை ஆட்சியினை நடாத்துவதற்கு நாங்கள் உங்களுடன் சேர்ந்து பயணிப்பதற்கு உறுதியாக இருக்கின்றோம் ஆனால் அந்த கருத்தை நிராகரித்திருந்தார்கள். மீண்டும் 2018 வருடமும் சேர்ந்து பயணிக்க அழைப்பு விடுத்திருந்தோம் அதனையும் நிராகரித்திருந்தார்கள். அதனடிப்படையில் கிழக்கு மக்கள் நில, நிர்வாக, பொருளாதார இருப்புக்களில் கிழக்கு மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என நாங்கள் நம்புகின்றோம் என்றார்.

Related Posts

பெண் ஒருவரைக் காணவில்லை.!

பெண் ஒருவரைக் காணவில்லை.!

by Mathavi
June 8, 2026
0

மட்டக்களப்பு எருவிலை சேர்ந்த கீர்த்தனா எனும் 24 வயதான ஒரு பெண்ணை காணவில்லை. எனவே, குறித்த பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் 0740869024, 0701921595 எனும்...

சுரேஷ் சலேவின் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் ஆட்சியாளர்கள் ஒளிந்து கொள்ள இடமிருக்காது!

சுரேஷ் சலேவின் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் ஆட்சியாளர்கள் ஒளிந்து கொள்ள இடமிருக்காது!

by selvan
June 8, 2026
0

"வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்த இடத்தைக் கண்டறிந்து துல்லியமான தகவல்களை வழங்கிய இராணுவ வீரரான சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்புக்கும்...

சொல்லிசைப்  பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!

சொல்லிசைப்  பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!

by selvan
June 8, 2026
0

சொல்லிசைப் பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி இன்றைய தினம் வல்வெட்டிதுறையில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டம் வல்வெட்டித்துறை நகரில் இடம்பெற்றது பிரதேச இளைஞர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட...

மூடப்பட்டுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

மூடப்பட்டுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

by selvan
June 8, 2026
0

கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு மூடப்பட்டுக் காணப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டம்; சாதாரண இளைஞர்களுக்கு ஒரு சட்டமா?

சலே விவகாரம்; நாமல் காட்டம்.!

by Mathavi
June 8, 2026
0

"உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். பொறுப்புக்கூறல் என்பது மிகவும் முக்கியமானது. ஆனால், அரசியல் பழிவாங்கல்களை நோக்கமாகக் கொண்ட விசாரணைகள், உயிர்த்த...

சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய மகாணசபைத் தேர்தலை விரைந்து நடத்துக – சுரேந்திரன் கோரிக்கை!

சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய மகாணசபைத் தேர்தலை விரைந்து நடத்துக – சுரேந்திரன் கோரிக்கை!

by selvan
June 8, 2026
0

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசு தேர்தல்களை விரைந்து நடத்த வேண்டும் என ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் கோரிக்கை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர்...

ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்!

ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்!

by selvan
June 8, 2026
0

நானாட்டான் டிலாசால் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி அக் கல்லூரி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை (8) காலை...

மத்திய மலைநாட்டில் கனமழை – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு!

மத்திய மலைநாட்டில் கனமழை – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு!

by selvan
June 8, 2026
0

மத்திய மலைநாட்டில் மேற்குச் சரிவுகளில் பல வாரங்களாகப் பெய்து வரும் கனமழையால், தேசிய நீர்மின் சக்தி அமைப்பிற்குச் சொந்தமான மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம்...

செம்பியன்பற்று மீனவர்களின் தீவிர முயற்சியில் கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!

செம்பியன்பற்று மீனவர்களின் தீவிர முயற்சியில் கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!

by selvan
June 8, 2026
0

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவர், சக மீனவர்கள் மற்றும் கடற்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையின் மூலம்...

ஜூன் மாதம் 09ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் – அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

ஜூன் மாதம் 09ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் – அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

by selvan
June 8, 2026
0

யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 09, 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் முன்னெடுகவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி